குரு பெயர்ச்சி பலன் 2023: தீபாவளி முதல் குருவின் தனி பயணம்.. திடீர் ஜாக்பாட் யாருக்கு
சென்னை: மேஷ ராசியில் வக்ர நிலையில் ராகு உடன் பயணம் செய்யும் குரு பகவான் நவம்பர் மாதத்தில் இருந்து தனித்த குருவாக பயணம் செய்வார். தனித்த குரு சிலருக்கு யோகத்தை கொடுக்கும் சிலருக்கு தோஷத்தை தரும். குரு பகவானின் இந்த பயணங்களால் எந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
மேஷம்: குரு ஜென்ம ராசியில் பயணம் செய்கிறார். குரு இப்போது ராகு உடன் பயணம் செய்கிறார். ஜென்ம குரு வனத்தினிலே என்பது போல 30 வயதுக்கு உட்பவர்களுக்கு சோதனை மிகுந்த காலம். மனச்சஞ்சலங்களும் டென்ஷனும் அதிகமாக இருக்கும். எதிலும் நிதானித்து பயனிப்பது நல்லது. சுப கிரகமான குரு நிழல் கிரகமான ராகுவிடம் இருந்து விலகி தனித்த குருவாக பயணம் செய்யும் போது, தொழில் வேலை ரீதியான முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலையும் புரமோசனும் கிடைக்கும்.

மிதுனம்: குரு பகவான் லாப ஸ்தானமான 11ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். வேலை தொழிலில் இருந்த நல்ல இட மாற்றங்கள் நிகழும். சம்பள உயர்வு கிடைக்கும். தொழில் ரீதியான லாபம் பெருகும். வெளிநாட்டு முயற்சிகள் கைகூடும். வெளிநாட்டில் வசிப்பவருக்கு முன்னேற்றம் ஏற்படும். சொந்த ஊரில் வசிப்பவர்களுக்கு முன்னேற்றம் இருந்தாலும் சுப விரையச் செலவுகள் ஏற்படும். திருமணம் சுப காரியம் கைகூடி வரும்.
கடகம்: குரு பகவான் இப்போது பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் ராகு உடன் பயணம் செய்கிறார். வேலையில் இட மாற்றம் நிகழும். மாற்றம் இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். நவம்பர் மாதத்திற்குப் பிறகு உங்களுக்கு வேலை தொழிலில் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும். புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும்.
சிம்மம்: குரு உங்க ராசிக்கு 5 மற்றும் 8 ஆம் வீட்டிற்கு உடையவர். பாக்ய ஸ்தானத்தில் குரு பகவான் பயணம் நிறைய தொலை தூர தெய்வ வழிபாடுகளைச் செய்வீர்கள். தங்க நகைகள் வாங்குவதற்கு ஏற்ற காலகட்டம் இது. குரு பெயர்ச்சியின் இறுதி காலகட்டங்களில் அரசு மற்றும் அரசியலில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும்.
துலாம்: குரு பகவான் உங்க ராசிக்கு 7ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். குருவின் பார்வை உங்க ராசிக்கு கிடைக்கிறது. குரு பார்வையால் கடந்த காலங்களில் இருந்த கஷ்டங்கள் நீங்கும். குடும்பத்தில் அசாத்திய சூழ்நிலைகள் நிலவும். கணவன் மனைவி உறவில் சிக்கல்கள் வரலாம் விட்டுக்கொடுத்து அனுசரித்துச் செல்லவும். குரு வக்ரமாக செல்லும் காலங்களில் நன்மையை தரப்போகிறார். வேலையில் புரமோசன் கிடைக்கும். மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் உற்சாகம் அதிகரிக்கும். உங்களுக்கு வேலையில் புரமோசன் கிடைக்கப்போகிறது.
தனுசு: குரு உங்களுடைய ராசிக்கு 5ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். புது முயற்சிகளுக்கும் ஆதாயம் உண்டு. நவம்பர் மாதம் முதல் உங்களின் எண்ணங்கள் ஈடேரும். நீங்கள் மனதில் வைத்திருக்கும் காரியங்களை எளிதில் செயல்படுத்துவீர்கள். அற்புதமாக கால கட்டமாகும். இந்த குரு பெயர்ச்சியில் நீங்கள் தான் நம்பர் 1 குரு பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது.
மீனம்: குரு 2ஆம் வீட்டில் குடும்ப குருவாக பயணம் செய்கிறார். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். பேசும் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். மனதில் நினைத்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். தொழிலில் லாபம் கிடைக்கும் பணம் விசயத்தில் எச்சரிக்கை தேவை. பண விவகாரங்களில் கவனம்தேவை. பணத்தை கடனாக கொடுக்க வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட்டு மாட்டிக்கொள்ள வேண்டாம்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications