Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரு பெயர்ச்சி பலன் 2023: ஜாக்பாட் அடிக்கப்போகும் மேஷ குரு..கோடி நன்மை தரப்போகும் குரு பார்வை

குருபகவான் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். குருவின் பார்வை சிம்மம், துலாம்,தனுசு ராசிகளின் மீது விழுகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நவகிரகங்களில் சுப கிரகமான குருபகவான் திருக்கணித பஞ்சாங்கத்தின் படி வரும் ஏப்ரல் 21ஆம் தேதியன்று இரவு 11 மணிக்கு மேல் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். சுப கிரகமான குரு பகவானின் பார்வை கோடி நன்மையை தரப்போகிறது. குரு பகவானின் பார்வை சிம்மம், துலாம்,தனுசு ராசிகளின் மீது விழுகிறது. இந்த குரு பெயர்ச்சியினால் மேஷம் முதல் மீனம் 12 ராசிக்காரர்களுக்கும் எந்தெந்த காலக்கட்டங்களில் என்னென்ன பலன்கள் என பார்க்கலாம்.

மேஷம்

Guru Pairchi Palan 2023: Who will hit the jackpot Guru vision who will give crores of benefits

ஜென்ம ராசியில் குருபகவான் அமர்ந்துள்ளார். பணப்புழக்கம் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். வேலைச்சுமையோடு பதற்றமும் ஏற்படும். அம்மாவின் உடல் நலனில் அக்கறை தேவை. நோய்கள் பாதிப்பினால் அநாவசிய செலவுகள் ஏற்படும். வீண் விரயத்தை தவிர்க்க வீடு, வண்டி வாகனம் வாங்கலாம்.
பூர்வீக சொத்துப் பராமரிப்புச் செலவுகள் வந்து போகும். வாகனத்தின் மூலம் விபத்துகள் ஏற்படும் கவனம் தேவை. நோய் பாதிப்புகளால் மருத்துவ செலவு ஏற்படும். வெளிநாட்டில் இருப்பவர்கள் உதவி செய்வார்கள். வெளிநாடு செல்ல சிலருக்கு விசா கிடைக்கும். திடீர் பணவரவு உண்டு. அரசால் ஆதாயமடைவீர்கள். சிலருக்கு வீடு, மனை அமையும். அரசு காரியங்கள் உடனே முடியும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவல் கிடைக்கும். திருமண முயற்சிகள் பலிதமாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். உங்களை விட வயதில் குறைந்தவர்கள் மூலமாக ஆதாயமடைவீர்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. ஜாமீன், கேரண்டி கையெழுத்து போட வேண்டாம்.

ரிஷபம்

Guru Pairchi Palan 2023: Who will hit the jackpot Guru vision who will give crores of benefits

குருபகவான் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். பணவரவு கிடைக்கும். சுப விரைய செலவுகள் ஏற்படும். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். மகளுக்கு நல்ல வரன் கிடைக்கும். உணர்ச்சி வேகத்தில் எந்த முடிவும் எடுக்க வேண்டாம். கடன்கள் அடைபடும். இளைய சகோதரர்களினால் நன்மை ஏற்படும். வெளிநாட்டில் தொழில் தொடங்க வாய்ப்பு கிடைக்கும். சிலர் புது வீடு மாறுவீர்கள். புதிதாக யாரையும் நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். உடல் நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. மனக்குழப்பம் ஏற்படும். எதிர்பார்த்திருந்த காரியம் நடக்கும். திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களை செய்து முடிப்பீர்கள். வீடு கட்டும் வாய்ப்பு கூடி வரும்.
வேலைச்சுமை ஏற்படும். உடல் நல பாதிப்புகள் ஏற்படும்.

மிதுனம்

Guru Pairchi Palan 2023: Who will hit the jackpot Guru vision who will give crores of benefits

ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் குருபகவான் அமரப்போகிறார். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. பணம் கொடுக்கல் வாங்கலில் ஜாக்கிரதையாக இருக்கவும். பேச்சில் கவனம் தேவை. பணப்புழக்கம் அதிகரிக்கும். கடன்கள் அடைபடும். பங்குச்சந்தை மூலம் பணம் கிடைக்கும். பிரச்சினைகள் தீரும். சொந்த, பந்தங்கள் மத்தியில் கௌரவம் அதிகரிக்கும். திடீர் பயணங்களால் அலைச்சலும் செலவுகளும் அதிகரிக்கும். சுப செலவுகளும் அதிகரிக்கும். புண்ணிய தலங்கள் சுற்றுலா சென்று வருவீர்கள். பணவரவு அதிகரிக்கும் சுப விரைய செலவுகளும் ஏற்படும். யாரையும் எளிதில் நம்பி ஏமாறவேண்டாம். வீடு கட்டுவதற்கு வங்கி லோன் கிடைக்கும். சொந்த, பந்தங்கள் மத்தியில் கௌரவம் அதிகரிக்கும். பங்குச்சந்தை மூலம் பணம் வரும்.

கடகம்

Guru Pairchi Palan 2023: Who will hit the jackpot Guru vision who will give crores of benefits

ராசிக்கு 10வது வீட்டில் குருபகவான் அமர்ந்து உள்ளார். கேட்ட இடத்தில் பணம் கடனானக் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் அதிகம் நடக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய பொறுப்புகளும் பதவிகளும் தேடி வரும்.
திடீர் செல்வாக்கு அதிகரிக்கும் பணவரவு கிடைக்கும். சேமிப்பு அதிகரிக்கும் பயணங்களினால் நன்மைகள் நடக்கும்.
கடன்கள் தீரும். செல்வாக்கும், சொல்வாக்கும் உயரும். பிள்ளைகளினால் நன்மைகள் நடக்கும்.
வீடு களைகட்டும். புது பதவி, பொறுப்புகள் தேடி வரும். அலைச்சல் அதிகரிக்கும்.நோய்கள் ஏற்படும் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று மருத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ளவும்.

சிம்மம்

Guru Pairchi Palan 2023: Who will hit the jackpot Guru vision who will give crores of benefits

ராசிக்கு 9வது வீட்டில் குருபகவான் அமர்ந்து உள்ளார். புதிய வேலைகள் கிடைக்கும். பிரச்சினைகள் முடிவுக்கு வரும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். பங்குச்சந்தையின் மூலம் பணம் வரும். ஆடம்பரப்பொருட்கள் வாங்குவீர்கள்.
வேலை செய்யும் இடத்தில் கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். மனைவியின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீடு கட்டும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அம்மாவின் உடல் நிலை சீராகும். சொத்துக்கள் வாங்குவீர்கள். வீடு, வண்டி வாகன சேர்க்கை ஏற்படும். நினைத்த காரியம் கைகூடும். அம்மா வழியில் சொத்துக்கள் கைக்கு வரும்.

கன்னி

Guru Pairchi Palan 2023: Who will hit the jackpot Guru vision who will give crores of benefits

குரு பகவான் உங்கள் ராசிக்கு 8வது வீட்டில் அஷ்டம ஸ்தானத்தில் அமரப்போகிறார். பணப்பற்றாக்குறை ஏற்படும். குடும்பத்தில் சலசலப்பு, உத்யோகத்தில் வேலைச்சுமையும் எதிர்ப்புகளும் ஏற்படும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும். விஷேசங்களினால் வீடு களைகட்டும். பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். அப்பாவின் ஆதரவு கிடைக்கும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். புது வேலை கிடைக்கும்.
வீண் செலவுகள் வரும் அதை சுப விரைய செலவாக மாற்றுங்கள். சிறுசிறு விபத்துகள் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. குருவினால் குடும்பத்தில் ஓரளவு நிம்மதி உண்டு. குழந்தை பாக்யம் உண்டு. வீடுகட்டும் பணி நிறைவடையும். சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

துலாம்

Guru Pairchi Palan 2023: Who will hit the jackpot Guru vision who will give crores of benefits

குருபகவான் உங்கள் ராசிக்கு 7வது வீட்டில் பயணம் செய்யப்போவதால் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உடல் ஆரோக்யம் சீராகும். சொந்தமாக வீடு கட்டுவீர்கள். புது வேலை கிடைக்கும். சிலருக்கு கல்யாணம் கூடி வரும். புதுத் தொழில் தொடங்க வாய்ப்பு உள்ளது. மூத்த சகோதர வகையில் சச்சரவு வந்து செல்லும். எதிர்மறை எண்ணங்கள் ஏற்படும். புதிய பொறுப்புகளை யோசித்து ஏற்பது நல்லது. தடைப்பட்ட வேலைகள் முடியும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பூர்வீக சொத்துக்கள் உங்கள் கைக்கு வரும். குருபகவான் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது.

விருச்சிகம்

Guru Pairchi Palan 2023: Who will hit the jackpot Guru vision who will give crores of benefits

குரு பகவான் உங்கள் ராசிக்கு 6வது வீட்டில் ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். ஆனாலும் அச்சம் வேண்டாம். கணவன் மனைவிக்குள் சலசலப்புகள் ஏற்படும். மருத்துவ செலவுகள் ஏற்படும். குரு பகவான் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் பணம் வரவு அதிகரிக்கும். வருமானம் உயரும். ஆடை ஆபரணங்களை வாங்குவீர்கள். முன்னோர்களின் சொத்துப்பிரச்சினை இந்த காலகட்டத்தில் ஒரு முடிவுக்கு வரும். புது வண்டி வாகனம் வாங்குவீர்கள். தாய்வழி உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அம்மாவின் உடல் நலம் சீராகும். மனைவி வழியில் உதவிகள் அதிகரிக்கும். குருவினால் வீட்டில் சுப நிகர்ச்சிகள் களைகட்டும்.

தனுசு

Guru Pairchi Palan 2023: Who will hit the jackpot Guru vision who will give crores of benefits

குருபகவான் உங்கள் ராசிக்கு 5வது வீட்டில் அமரப்போகிறார். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீட்டில் விஷேசங்களினால் உறவினர்கள் வருகை அதிகரிக்கும் வீடு களைகட்டும். திருமணம் கூடி வரும். நோய் நொடிகள் தீரும். பிதுர்வழி சொத்து பிரச்னை முடிவுக்கு வரும். வீண் விரைய செலவுகள் வரும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பிள்ளைகளால் நன்மைகள் அதிகரிக்கும். குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். குலதெய்வ தரிசனம் நன்மை தரும்.

மகரம்

Guru Pairchi Palan 2023: Who will hit the jackpot Guru vision who will give crores of benefits

குரு பகவான் உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் சுக ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகிறார். புது வண்டி வாகனம் வாங்கலாம். இழுபறியாக இருந்த பூர்வீக சொத்துக்கள் கைக்கு வரும். வீட்டில் திருமண ஏற்பாடுகள் செய்யலாம். மகனுக்கோ, மகளுக்கோ திருமணத்தை நல்ல முறையில் நடத்தி முடிப்பீர்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகனுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். குரு பகவான் பார்வையால் சுப காரியங்கள் அதிகம் நடைபெறும். வேலை செய்யும் இடத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். கணவன் அல்லது மனைவியின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கும்பம்

Guru Pairchi Palan 2023: Who will hit the jackpot Guru vision who will give crores of benefits

உங்கள் ராசிக்கு 3வது வீட்டில் முயற்சி ஸ்தானத்தில் குருபகவான் அமர்ந்திருக்கிறார். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். வேலை செய்யும் இடத்தில் கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். அழகும் அறிவு கூடும். குடும்பத்திலும் சந்தோஷம் நிலவும். உடல் நலம் சீராகும். நட்பு வட்டம் விரிவடையும். அலுவலகத்தில் செல்வாக்கு உயரும். புதிதாக சொத்து வாங்குவீர்கள். மனைவிக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் மனைவிக்கிடையே பிரச்சினைகள் ஏற்படும். நோய்கள், பதற்றம், படபடப்பு உருவாகும்.

மீனம்

Guru Pairchi Palan 2023: Who will hit the jackpot Guru vision who will give crores of benefits

குரு பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாவது வீட்டில் பயணம் செய்யப்போகிறார். குரு உங்கள் ராசிக்கு 6ம் வீட்டை பார்ப்பதால் கடன் பிரச்னை தீரும். நோய்களால் ஏற்பட்ட தொந்தரவுகளில் இருந்து விடுபடுவீர்கள். பங்குச்சந்தைகள் மூலம் பணம் வரும். உங்கள் கல்வித் தகுதிக் கேற்ப நல்ல வேலை கிடைக்கும். சொந்த பந்தங்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். பூர்வீக சொத்தால் வருமானம் வரும்.திடீர் பணவரவு அதிகரிக்கும். புது வீடு கட்டத் தொடங்குவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வீண் செலவுகள் வரும் கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். தூக்கம் குறையும். நண்பர்களுடன் மோதல்கள் வரும். முன்னோர்களின் சொத்துக்கள் கைக்கு வரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+