குரு பெயர்ச்சி பலன் 2024: குரோதி ஆண்டு முதல் இந்த 6 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அதிரடி மாற்றம்
சென்னை: குரு பகவான் ஒருவருக்கு யோகத்தையும் அதிர்ஷ்டத்தையும் தரும் கிரகம். நல்ல வேலையும் சம்பள உயர்வும் கிடைக்க குருபகவானின் அனுக்கிரகம் அவசியம். குரு பகவான் நிகழும் மங்களகரமான குரோதி ஆண்டில் சித்திரை மாதம் 18ஆம் தேதி மே 1ஆம் தேதி ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த குரு பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள் ஏற்படும் என்று பார்க்கலாம்.
மேஷம்: குரு பகவான் உங்களுடைய ராசியில் இருந்து இரண்டாம் வீடான ரிஷபம் ராசிக்கு செல்கிறார். பெரிய வெற்றிகளும் சந்தோஷமும் கொடுக்கக் கூடிய குரு பெயர்ச்சியாக அமைந்துள்ளது. மன குழப்பங்கள் நீங்கும். மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நோய் பிரச்சினையில் சிக்கித்தவித்தவர்களுக்கு நோய் பிரச்சினை நீங்கும். பெரியோர்களுடன் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்தி வரும். சிலருக்கு வேலையில் புரமோசன் சம்பள உயர்வு கிடைக்கும். வார்த்தைகளில் கவனமாக இருக்கவும். பேசும் வார்த்தைகள் உங்களுக்கு ஆதரவாக இருக்கும் அஷ்டலட்சுமி யோகத்தை தேடி கொடுக்கும். அதே நேரத்தில் வார்த்தைகளில் கோபத்தை காட்டினால் அதுவே உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தி விடும் கவனமாக பேசவும். நரசிம்மர் வழிபாடு நன்மையை கொடுங்கும்.

சிம்மம்: அற்புதமான குரு பெயர்ச்சியாக உள்ளது. பத்தாம் இடத்தில் அமரப்போகும் குருவினால் நல்ல வேலை கிடைக்கும். புதிய பொறுப்புகள் வரும். புதிய பதவிகள் தேடி வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். இடமாற்றங்கள் ஏற்படும். புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்யலாம். வேலையில் இருப்பவர்கள் பொறுப்புடனும் கவனத்தோடும் செயல்பட வேண்டிய நேரமாகும். குல தெய்வ வழிபாடு குடும்பத்தில் சந்தோஷத்தை கொடுக்கும்.
கன்னி: குரு பகவான் கோடி நன்மைகளை தரப்போகிறார். குருவின் பார்வை உங்க ராசிக்கு கிடைக்கிறது. சகலவிதமான நன்மைகளை தரப்போகிறது. திருமணம் நடைபெறுவதற்கான யோகம் வந்து விட்டது. குடும்பத்தை விட்டு பிரிந்திருந்தவர்கள் ஒன்றிணைவார்கள். தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு நல்ல வேலையும் புரமோசனும் கிடைக்கும். வியாழக்கிழமை குருபகவானை வணங்க நன்மைகள் அதிகரிக்கும்.
துலாம்: குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்யப்போவதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியம். சுப விரைய செலவுகள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை பத்திரப்படுத்துங்கள். தாய் வழி உறவு தந்தை வழி உறவில் இருந்த பாதிப்புகள் நீங்கும். பூர்வீக சொத்துப்பிரச்சினைகள் நீங்கும். வேலை விசயத்தில் சில பிரச்சினைகள் வரலாம் குருவின் அனுகிரகத்தினால் பாதிப்புகள் நீங்கும். தென் திட்டை குருபகவானை தரிசனம் செய்யலாம். குல தெய்வ தரிசனம் குழப்பத்தை தீர்க்கும்.
விருச்சிகம்: மே மாதம் நிகழப்போகும் குரு பெயர்ச்சியால் தொட்டது துலங்கும். நன்மைகள் அதிகம் நடைபெறும். பயணங்களால் நன்மைகள் நடைபேறும். வேலையில் புரமோசன் கிடைக்கும். வியாபாரம் தொழிலில் புதிய இடமாற்றம் ஏற்பட உள்ளது. புதிய பொறுப்புகள் தேடி வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். குடும்ப விசயத்தில் கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். திடீர் இடமாற்றங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களை உண்டாக்கப்போகிறது.
மகரம்: குரு பகவான் ஐந்தாம் வீட்டிற்கு வரப்போவதால் நிறைய நன்மைகள் நடைபெறும். குறைவான சம்பளத்தில் வேலை செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு புரமோசனும் சம்பள உயர்வும் தேடி வரும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வேலையில் மாற்றம் ஏற்படும். கவுரவங்கள் நன்மைகள் நடைபெறும். வீடு மாற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டமும் யோகமும் வரும். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பட்டீஸ்வரம் சென்று துர்க்கை அம்மனை வணங்கவும். கர்ப்பிணி பெண்கள் கவனத்தோடு இருப்பது நல்லது. ஏற்றங்களும் மாற்றங்களும் நிறைந்த குரு பெயர்ச்சியாக அமைந்துள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications