குரு பெயர்ச்சி பலன் 2024: குரோதி ஆண்டில் குரு தரும் குபேர யோகம்.. யாருக்கு அதிர்ஷ்டம்?
சென்னை: நிகழும் மங்களகரமான குரோதி ஆண்டில் சித்திரை 18ஆம் தேதி பகல் 1மணி அளவில் குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். ரிஷப ராசியில் உள்ள கார்த்திகை,ரோகிணி, மிருகஷீரிடம் நட்சத்திரங்களில் குரு பகவான் பயணம் செய்வார். குரு பெயர்ச்சியால் துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
துலாம்: குரு பகவான் உங்கள் ராசிக்கு 8ஆம் வீடான அஷ்டம ஸ்தானத்திற்கு வந்து அமரப்போகிறார். கெட்டவன் கெட்டிடில் கிட்டவன் ராஜயோகம் என்று சொல்வது போல குரு பகவான் நன்மைகளை அள்ளித்தரப்போகிறார். குரு பகவான் பார்வை உங்கள் ராசிக்கு 2,4,12ஆம் வீடுகளின் மீது விழுவதால் தூர தேச பயணங்களை செல்வீர்கள். அஷ்டம குரு உங்களை ஆட்டிப்படைப்பார் என்று அஞ்ச வேண்டாம். பணம் பல வழிகளில் கைக்கு தேடி வரும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வரும். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். புதிய மாற்றங்களையும் உங்களைத் தேடி வரும் நல்ல வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

விருச்சிகம்: சித்திரை மாதத்தில் இடப்பெயர்ச்சியாகும் குரு பகவான் உங்களுக்கு மே மாதம் முதல் சிறப்பான வாழ்க்கையை தேடி தரப்போகிறார். களத்திர ஸ்தானத்தில் அமர்ந்து குரு பகவான் உங்கள் ராசியை பார்வையிடுவதால் உங்களுக்கு குரு பலன் வந்து விட்டது. திருமண சுப காரியம் கைகூடி வரும். தொழில் வியாபாரம் சிறப்பான லாபத்தை கொடுக்கும். குரு பகவான் பார்வை லாப ஸ்தானம், தைரிய ஸ்தானத்தின் மீது குருவின் பார்வை விழுகிறது. புகழும் செல்வமும் அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி யோகம் தேடி வரும். வருமானம் அதிகரிக்கும் கடன் பிரச்சினைகள் நீங்கும். சித்திரை முதல் சிறப்பான யோகத்தை அனுபவிக்கப்போகும் யோகமான குரு பெயர்ச்சியாக அமைந்துள்ளது.
தனுசு : குரு பகவான் உங்கள் ராசி அதிபதி. 6ஆம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகிறார். உங்கள் இராசிக்கு குரு பகவான், ஜென்மாதிபதி மற்றும் சுகாதிபதி அதாவது உங்களுக்கு கேந்திராதிபதி. கேந்திராதிபதி கெட்டுப்போனால் யோகம்தான். நோய்கள் நீங்கும். பாடாய் படுத்திய கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. படித்து முடித்து விட்டு வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். செய்யும் தொழிலில் முதலீடுகளுக்கு லாபம் அதிகரிக்கும். முன்னேற்றம் அதிகரிக்கும். உங்கள் இராசிக்கு 6ஆம் வீட்டில் குரு மறைந்தாலும் ராஜயோகம்தான். அள்ளித்தரப்போகிறார் குரு பகவான் அனுபவிக்கத் தயாராகுங்கள்.
மகரம்: குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ஆம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். வாடகை வீட்டில் வசிப்பவர்கள் சொந்த வீடு வாங்கப்போகிறீர்கள். பல வழிகளில் இருந்து எதிர்பாராத தனவரவு கிடைக்கும். எதிர்பாராத இடத்தில் இருந்து வீடு தேடி உதவிகள் வரும். வெளிநாடு செல்லும் வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வளர்ச்சி அதிகரிக்கும். நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். குரு அருளும் திரு அருளும் உள்ளது. திருமணம் கைகூடி வரும் சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். குரு பகவான் மே மாதத்திற்குப் பிறகு மகர ராசிக்காரர்களுக்கு வருமானத்தை வாரி வழங்கப்போகிறார்.
கும்பம்: குரு பகவான் மே மாதத்தில் இருந்து உங்கள் ராசிக்கு சுகஸ்தானத்தில் பயணம் செய்யப்போகிறார். குரு உங்களுக்கு தன ஸ்தானம் லாப ஸ்தான அதிபதி. யோக காரகன் குரு பகவான், 4ஆம் வீட்டில் அமர்ந்து 8,10,12ஆம் இடங்களை பார்வையிடப்போகிறார். வேலையில் இடம் மாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். வீடு வாங்கும் யோகம் கைகூடி வரப்போகிறது. . திருமணம் சுபகாரியம் நடைபெறும். உங்களுக்கு குரோதி ஆண்டு தெளிவான சிந்தனையை தரப்போகிறது. மொத்தத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு குரோதி ஆண்டில் நிகழப்போகும் குரு பெயர்ச்சி வெற்றியையும் மன மகிழ்ச்சியையும் தரப்போகிறது.
மீனம்: சித்திரை மாதம் முதல் உங்கள் ராசி அதிபதி குரு பகவான், மூன்றாம் வீடான தைரிய ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகிறார். தன்னம்பிக்கை தைரியம் அதிகரிக்கும். நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். குருபார்வை கோடி நன்மைகளை தரப்போகிறது. நீண்ட நாட்களாக தடைபட்ட திருமணம் சுற்றம் சூழ சிறப்பாக நடைபெறும். தம்பதியர் இடையே ஒற்றுமை அதிகரிக்கும். மன குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். வெற்றிகள் தேடி வரப்போகிறது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications