Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரு பெயர்ச்சி பலன் 2024: கோடி கோடியாக செல்வம் தேடி வரும்.. குரு பார்வையால் மண்ணும் பொன்னாகும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குரு பகவான் மேஷ ராசியில் உள்ள கார்த்திகை நட்சத்திரத்தில் இருந்து ரிஷப ராசியில் உள்ள கார்த்திகை நட்சத்திரத்தில் பயணம் செய்யப்போகிறார். நிகழும் மங்களகரமான குரோதி ஆண்டில் சித்திரை 18ஆம் தேதி பகல் 1மணி அளவில் குரு பகவான் ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். குரு பகவானின் பார்வை கன்னி, விருச்சிகம், மகர ராசியின் மீது விழுகிறது. குரு பெயர்ச்சியால் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்

சிம்மம் : குரு பகவான் பாக்ய ஸ்தானத்தில் இருந்து பத்தாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். 10ல் குரு அமர்ந்தால் பதவி பறிபோகும் என்று என்று சிலர் பயமுறுத்தவர். ஆனால் உங்கள் இராசிக்கு பத்தாம் வீட்டிற்கு வந்து அமரும் குரு பெரிய அளவில் நன்மைகளை செய்வார். உங்கள் இராசிக்கு 5 மற்றும் 8ஆம் இடத்திற்கு அதிபதி குரு 10ஆம் வீட்டில் பயணம் செய்யப்போவதால் தொட்டது துலங்கும் மண்ணும் பொன்னாகும். மகிழ்ச்சியும் உற்சாகமும் அதிகரிக்கும்.

Guru peyarchi palan 2024: Guru transit to Rishabam prediction for Simmam,Kanni,Thulam and Viruchigam


10ஆம் வீட்டில் அமர்ந்து குரு உங்கள் ராசிக்கு 2ஆம் வீடு சுக ஸ்தானம், ருண ரோக சத்ரு ஸ்தானத்தின் மீது விழுகிறது. அளவிட முடியாத அளவிற்கு பண வருமானம் வரும். திருமணம் சுப காரியம் நடைபெறும். கோடி கோடியாக செல்வம் தேடி வரப்போகிறது. எதிரிகள் தொல்லை இல்லாமல் போகும். கவலைகளும் கஷ்டங்களும் காணாமல் போகும். புதிய தொழில் தொடங்குவீர்கள். சுகமும் சந்தோஷமும் தேடி வரப்போகிறது வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பு தேடி வரும்.

கன்னி: உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீடான பாக்கிய ஸ்தானத்தில் குரு பயணம் செய்யப்போவதால் அள்ளிக்கொடுக்கப்போகிறார் குரு பகவான். குரு பகவான் உங்கள் ராசிக்கு சுகஸ்தானம் களத்திரஸ்தானத்திற்கு அதிபதி. அவர் பாக்கியத்தில் அமர்ந்து உங்கள் இராசியை பார்வையிடுவதால் கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது. முயற்சி ஸ்தானத்தையும், பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் குரு பார்வையிடுவதால் சுகமும் சந்தோஷமும் தேடி வரப்போகிறது. செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்கும். பாக்ய ஸ்தான குரு உங்கள் சக்தியை அதிகரிக்கப்போகிறார்.

உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல காரியங்கள் மளமளவென நடைபெறும். தடைகளை உடைத்து முன்னேறுவீர்கள். பணம் பலவழிகளில் இருந்தும் தேடி வரும். புகழும் கீர்த்தியும் அதிகரிக்கும். நீண்ட நாட்களுக்கு முன் கடனாக கொடுத்த பணம் உங்கள் வீடு தேடி வரும். உங்களின் பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கம் நீங்கப்போகிறது. இதுநாள் வரை அடங்கி போன நீங்கள் இனி வீறு கொண்டு எழுவீர்கள். உங்களை துச்சமாக நினைத்தவர்கள் எல்லாம் மே மாதம் உச்சத்திற்கு போகும் உங்களைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள்.

துலாம்: குரு பகவான் 8ஆம் வீட்டிற்கு வந்து அமரப்போகிறார். அகப்பட்டவனுக்கு அஷ்டம குரு என்று சொல்வார்கள். ஆனால் உங்களுக்கு கெட்டவன் குரு எட்டாம் வீட்டில் மறைந்தாலும் நன்மையே செய்வார். கெட்டவன் கெட்டிடில் கிட்டவன் ராஜயோகம் என்று சொல்வது போல குரு பகவான் நன்மைகளை அள்ளித்தரப்போகிறார். குரு பகவான் பார்வை உங்கள் ராசிக்கு 2,4,12ஆம் வீடுகளின் மீது விழுவதால் தூர தேச பயணங்களை செல்வீர்கள்.

வெளிநாடு வேலை வாய்ப்பு தேடி வரும். குடும்பத்தில் சுப செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் பொறுப்புகள் தேடி வரும். வீடு வாங்கும் யோகம் தேடி வரும். அஷ்டம குரு உங்களை ஆட்டிப்படைப்பார் என்று அஞ்ச வேண்டாம். பணம் பல வழிகளில் கைக்கு தேடி வரும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வரும். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். உங்களைத் தேடி வரும் நல்ல வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

விருச்சிகம்: குரு பகவான் உங்களுக்கு மே மாதம் முதல் சிறப்பான வாழ்க்கையை தேடி தரப்போகிறார். களத்திர ஸ்தானத்தில் அமர்ந்து குரு பகவான் உங்கள் ராசியை பார்வையிடுவது சிறப்பு. குரு பலன் வந்து விட்டது திருமண சுப காரியம் கைகூடி வரும். தள்ளிப்போன திருமண அற்புதமாக நடைபெறும். தொழில் வியாபாரம் சிறப்பான லாபத்தை கொடுக்கும்.

குரு பகவான் பார்வை லாப ஸ்தானம், தைரிய ஸ்தானத்தின் மீது குருவின் பார்வை விழுகிறது. கலைத்துறை, எழுத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ் அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி யோகம் தேடி வரும். வருமானம் அதிகரிக்கும் கடன் பிரச்சினைகள் நீங்கும். ஆன்மீக தலங்களுக்கு செல்வீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். சித்திரை முதல் சிறப்பான யோகத்தை அனுபவிக்கப்போகும் சுகமான குரு பெயர்ச்சியாக அமைந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+