Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரு பெயர்ச்சி பலன் 2024: ராஜாவாக மாறப்போகும் ராசிக்காரர்கள்.. அதிகார பதவி யாருக்கு கிடைக்கும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒருவரின் வாழ்க்கையில் சுப காரியங்கள் நிகழ காரணமாக இருப்பவர் குரு பகவான். பண வருமானத்தை கொடுப்பவர் குருபகவான். மேஷ ராசியில் வக்ர நிலையில் பயணம் செய்யும் குரு பகவான் இந்த மாத இறுதியில் நேர்கதியில் பயணம் செய்யப்போகிறார். மே மாதம் முதல் ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகும் குரு பகவான் சில ராசிக்காரர்களுக்கு அதிகார பதவியை தேடித்தரப்போகிறார்.

குரு பகவானின் பயணம்: மே மாதத்தில் குரு பெயர்ச்சி நிகழப்போகிறது. ரிஷப ராசியில் இருந்து குரு பகவானின் பார்வை கன்னி, விருச்சிகம், மகரம் ராசிகளின் மீது விழுகிறது. கார்த்திகை, ரோகிணி, மிருகஷீரிடம் நட்சத்திரங்களில் குரு பகவான் பயணம் செய்வார். 2025ஆம் ஆண்டு மே மாதம் வரைக்கும் குருபகவான் ரிஷப ராசியில் பயணம் செய்வார்.

Guru peyarchi palan 2024: Jupiter transit Guru Peyarchi palangal and Parikarangal

குரு வக்ரம்: 2024ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி முதல் ஜூன் 10ஆம் தேதி வரைக்கும் அஸ்தங்க நிலையில் பயணம் செய்வார். 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரைக்கும் வக்ர நிலையில் பயணம் செய்வார் குரு பகவான்.
நிகழப்போகும் குரு பெயர்ச்சியால் 12 ராசிக்காரர்களுமே நல்ல பலன்களை அடையப்போகிறார்கள். எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கப்போகிறது. என்ன பரிகாரங்கள் செய்யலாம் என்று பார்க்கலாம்.

மேஷம்: குரு பகவான் உங்கள் ராசியில் இருந்து இரண்டாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடைவது நிம்மதியான விசயம். உங்களின் சொல்லுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். கஷ்டங்கள் தீரும் கடன்கள் நீங்கும். குருவின் பார்வை உங்க ராசிக்கு ஆறு, எட்டு, பத்தாம் வீடுகளின் மீது விழுகிறது. கடன் பிரச்சினைகள் தீரும் பண வரவு அதிகரிக்கும். நோய்கள் குணமடையும். ஜென்ம ராகுவினால் சிக்கல்கள் உருவானது. 2024ஆம் ஆண்டு முதல் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். அதிகார பதவி உங்களைத் தேடி வரப்போகிறது என்பதால் அனுபவிக்கத் தயாராகுங்கள்.

ரிஷபம்: குரு பகவான் உங்கள் ராசியில் வந்து அமரப்போகிறார். உங்க ராசிக்கு ஐந்து, ஏழு, ஒன்பதாம் வீடுகளின் மீது குரு பார்வை விழுகிறது. திருமணம் சுப காரியங்கள் கைகூடி வரும். தடைபட்டு வந்த சுப காரியங்கள் மே மாதம் முதல் தடைகள் நீங்கி சுபமாக நடைபெறும். இப்போது இருக்கும் வேலையில் கவனமாக இருப்பதே நல்லது. புதிய வேலைக்கு முயற்சி செய்ய வேண்டாம். ஜென்ம குரு வனத்திலே என்று சொல்வார்கள், பயப்பட வேண்டாம் இந்த குரு பெயர்ச்சி காலத்தில் உங்களுக்கு வரப்போகும் சவால்களை சாதனைகளாக மாற்றுங்கள்.

மிதுனம்: லாப ஸ்தானத்தில் இருக்கும் குரு பகவான் நிறைய பண வருமானத்தை தரப்போகிறார். வரப்போகும் பணத்தை பத்திரப்படுத்துங்கள் மே மாதத்திற்குப் பிறகு குரு பகவான் விரைய ஸ்தானத்திற்கு வரப்போவதால் கையில் இருக்கும் பணத்தை பத்திரப்படுத்துங்கள். தொழில் வியாபாரத்தில் பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டாம். அகலக்கால் வைப்பது ஆபத்தாகி விடும். சொத்து, வீடு வண்டி வாங்கலாம். இது சுப விரைய செலவு என்பதால் பிரச்சினையில்லை. மே மாதம் நிகழப்போகும் குரு பெயர்ச்சி உங்களுக்கு விழிப்புணர்வை தரக்கூடிய மனிதர்களை புரிந்து கொள்ள வைக்கக்கூடியதாக இருக்கும்.

கடகம்: பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் உள்ள குரு பகவான் மே மாதம் முதல் லாப ஸ்தானத்திற்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். தொழில் தொடங்க இது சரியான நேரம் என்றாலும் அஷ்டம சனி காலம் என்பதால் பொறுமையும் நிதானமும் தேவைப்படும். பண வருமானம் அதிகமாக இருக்கும். குருவின் பார்வை மூன்று, ஐந்து, ஏழாம் வீடுகளின் மீது விழுகிறது. சொத்து சேர்க்கை ஏற்படும். திருமணம் முடிந்து குழந்தைக்காக காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். 2024ஆம் ஆண்டில் உங்களுடைய எதிர்பார்ப்புகள், ஆசைகளை நிறைவேற்றித்தரக்கூடிய குரு பெயர்ச்சியாக அமைந்துள்ளது.

சிம்மம்: பாக்ய ஸ்தானத்தில் 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முடிய பயணம் செய்வார் குரு பகவான். மே மாதம் முதல் குரு பகவான் பத்தாம் வீட்டிற்கு வரப்போவதால் பதவியில் மாற்றமும் முன்னேற்றமும் வரப்போகிறது. பணப்பிரச்சினை நீங்கும். குடும்பத்தில் சுப காரியம் நடைபெறும். சிலருக்கு வீடு மாற்றம் நிகழ வாய்ப்பு உள்ளது. கடன் பிரச்சினை நீங்கும். எதிரிகள் தொல்லை நீங்கும்.
வெளிநாடு செல்லும் யோகம் வரும். சுபத்தை தரக்கூடிய குரு பெயர்ச்சியாக சிம்ம ராசிக்காரர்களுக்கு அமைந்துள்ளது. குரு பகவான் சிம்ம ராசிக்காரர்களை ராஜாவாக மாற்றப்போகிறார்.

கன்னி: 2024ஆம் ஆண்டு முதல் கன்னி ராசிக்காரர்களுக்கு பணக்கஷ்டம் மனக்கஷ்டம் நீங்கப்போகிறது. வீண் பண விரையங்கள் இனி வராது. தடை தாமதங்கள் முடிவுக்கு வரும். கடன் பிரச்சினை நீங்கும். குரு பகவானின் சுபமான பார்வை உங்களுடைய ராசிக்கு கிடைப்பதால் இதுநாள் வரை இருந்த மனஅழுத்தங்கள் நீங்கும். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு நிறைய பாக்கியங்களை தரப்போகிறது. அவப்பெயர்கள் நீங்கும். குடும்ப வாழ்க்கையில் இருந்த சிக்கல்களை நீக்கும். இடமாற்றம், வேலை மாற்றம், தொழில் மாற்றம் ஏற்படும். சுபமான பலனை கொடுக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+