குரு பெயர்ச்சி பலன் 2024: குரோதி ஆண்டில் தொட்டதெல்லாம் பொன்னாகும்.. விரையமாகும் பணம் யாருக்கு?
சென்னை: நிகழும் மங்களகரமான குரோதி ஆண்டில் சித்திரை மாதம் குரு பகவான் மே 1ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த குரு பெயர்ச்சியால் பலரது வாழ்க்கையில் அதிரடி மாற்றம் ஏற்படுத்தப்போகிறது. மிதுனம் ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் என்னென்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
குரு பெயர்ச்சி மிதுனம்: குரு விரைய ஸ்தானமான 12ஆம் வீட்டிற்கு வரப்போகிறார். குரு மிதுன ராசிக்காரர்களுக்கு ஓராண்டிற்கு சுப விரையங்களை கொடுப்பார். நிறைய வருமானம் வந்தாலும் சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். வீடு கட்டும் யோகம் கைகூடி வரும். மன மகிழ்ச்சி அதிகரிக்கும். வண்டி வாகனம் வாங்கலாம். பணத்தை சேமிக்க பாடு பட்டாலும் முடியாது மருத்துவ செலவுகள் ஏற்படும். கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்படாமல் இருக்க மவுன விரதம் இருப்பது அவசியம்.

விரைய குரு: குரு பகவான் 12ஆம் வீட்டில் பயணம் செய்வதால் பண முதலீடுகளில் கவனம் தேவை. அகலக்கால் வைக்காதீர்கள் ஆபத்தாகி விடும். தொழில் வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளில் கவனம் தேவைப்படும் எனவே ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு செய்வது நல்லது. பணத்தை சேமிக்க முயற்சி செய்யும் அதே நேரத்தில் அதிக ஆசைப்பட்டு கிரிப்டோ கரன்சி, பங்குச்சந்தை என ஆசைப்படாதீர்கள்.
சுகம் தரும் குரு: குரு பகவான் பார்வை உங்கள் ராசிக்கு 4,6,8ஆம் வீடுகளின் மீது விழுகிறது. வீடு வாங்கலாம் அதற்கான நேரம் வந்து விட்டது. குரோதி ஆண்டில் நிறைய வருமானங்கள் வரப்போகிறது. அம்மாவின் உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். நோய்கள் நீங்கும் மருத்துவ செலவுகள் குறையும். அம்மா வழி உறவினர்களால் வருமானம் வரும். சுக ஸ்தானத்தை குரு பார்ப்பதால் மனதிற்கு பிடித்தமான சுகமான சம்பவங்கள் நடைபெறும்.
நோய்கள் நீங்கும்: குரு பகவான் பார்வை 6ஆம் வீட்டின் மீது விழுவதால் நோய்கள் நீங்கும். எதிரிகள் பிரச்சினை நீங்கும். பழைய கடன்களை அடைத்து புதிய கடன்களை வாங்குவீர்கள். பல நாட்களாக வாட்டி எடுத்த நோய்கள் உங்களை விட்டு நீங்கப்போகிறது. 6 ஆம் பாவம் உத்யோக ஸ்தானத்துக்கு 9 ஆம் பாவமாவதால் செய்யும் வேலையில் மாற்றம் முன்னேற்றம் ஊதிய உயர்வு போன்றவை தேடி வரும். இது வரை இருந்த மருந்து மாத்திரை மருத்துவமனை செலவுகள் விலகும். கடனாக கொடுத்த பணம் திரும்ப கைக்கு வரும். இதுவரை பகையாக இருந்தவர்கள் நட்பாக மாறுவார்கள்.
மன மகிழ்ச்சி: 8 ஆம் வீட்டை குருபார்ப்பதால் கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் ஏன் என்றால் 7 ஆம் வீட்டுக்கு 2 ஆம் வீடு 8ம் இடம். கூட்டு தொழில் தொழில் வளர்ச்சி அடையும் வியாபார விஸ்தரிப்பு வெளிநாட்டு பயணம் ஏற்படும் நன்றாக சம்பாதித்து அசையா சொத்துகள் வாங்கும் நேரம். பல வழிகளில் பணம் வந்தாலும் சேமிப்பே இல்லையே என்ற நிலைமாறி கையிருப்பு அதிகமாக சேரும். தோஷங்கள் நீங்கி சந்தோஷங்கள் அதிகரிக்கப்போகிறது. மரணத்திற்கு ஒப்பான கண்டங்கள் நீங்கும். பெண்களுக்கு மாங்கல்ய தோஷங்கள் நீங்கப்போகிறது. மொத்தத்தில் இந்த குரு பெயர்ச்சி மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் கூடவே பணம் விரையமாகும்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications