குரு பெயர்ச்சிக்கு முன் போயஸ் கார்டனுக்கு இடப்பெயர்ச்சியான சசிகலா.. ஏழரை சனி, ஜென்ம ராகு எப்படி?
சென்னை: குரு பகவான் மேஷ ராசியில் இருந்து இடப்பெயர்ச்சியாகி ரிஷப ராசிக்கு வரப்போகிறார். மூன்றாம் வீட்டில் குரு மறையப்போகிறார். தற்போது குரு நல்ல நிலையில் இரண்டாம் வீட்டில் இருக்கும் போதே புது வீட்டிற்கு குடி போய் விட்டார் சசிகலா. ஏழரை சனி, ஜென்ம ராசி, களத்திர கேது என பயணம் செய்வதால் மீன ராசியில் பிறந்த சசிகலாவிற்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
சசிகலா: தனது கனவு வீடான போயஸ்கார்டன் வீட்டிற்கு குடிபோயிருக்கிறார் சசிகலா. 7ஆண்டுகளுக்குப் பிறகு போயஸ்கார்டனில் மீண்டும் அடி எடுத்து வைத்திருக்கிறார் சசிகலா. அதுவும் ஜெயலலிதா உடன் பல ஆண்டுகள் இருந்த வேதா நிலையத்திற்கு எதிரிலேயே பிரம்மாண்டமாக வீடு கட்டி குடி போயிருக்கிறார். சசிகலாவின் அரசியல் பயணம் இனிதான் ஆரம்பிக்கும் என்று சொல்கிறார்கள். சசிகலாவின் ஜாதகப்படி கிரகங்கள் சாதகமாக இருக்கிறதா என்று பார்க்கலாம்.

ஜாதகம் எப்படி: சசிகலாவின் நட்சத்திரம் ரேவதி, ராசி மீனம். அதாவது புதனுடைய நட்சத்திரம் சசிகலா. சசிகலாவின் லக்னம் சிம்ம லக்னம். சசிகலா ஜாதகத்தில் மீனம் சந்திரன் மிதுனத்தில் குரு கேது கடகத்தில் புதன் சிம்மத்தில் லக்னம் சூரியன் கன்னியில் சுக்கிரன் துலாமில் சனி தனுசுவில் செவ்வாய் ராகு என சசிகலாவின் ஜாதகத்தில் கிரகங்கள் அமைந்துள்ளன.
ஜெயலலிதாவின் தோழி: 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயலலிதாவின் நிழலாக இருந்தவர் சசிகலா. கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜெயலலிதா மரணமடைந்த பின்னர் கட்சியில் முக்கிய பொறுப்புக்கு வந்தார். முதல்வராக நினைத்தால் அது முடியவில்லை. மாறாக சிறை சென்றார். விதி விடாமல் விரட்டியது. சிறையில் இருந்து வந்த பின்னர் ஆன்மீக பயணம் என்று அரசியல் செய்தாலும் எதுவுமே சரிப்பட்டு வரவில்லை.
என்னென்ன யோகங்கள்: சசிகலா ஜாதகத்தில் கஜ கேசரி யோகம், முசல யோகம், உச்சம் பெற்ற சனி,குரு சண்டாள யோகம் என பல யோகங்கள் இருந்தாலும் அவருக்கு ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகே சிரமத்திசைதான். அதனால்தான் முதல்வராக வேண்டும் என்று நினைத்த சசிகலாவினால் வெற்றி பெற முடியாமல் போனது என்பது ஜோதிடர்களின் கருத்தாகும்.
தசாபுத்தி சரியில்லையே: சசிகலாவிற்கு செவ்வாய் தசை ஆரம்பித்ததில் இருந்தே சிக்கல்தான். செவ்வாய் திசை சுக்கிரபுத்தி நடக்கும் போது சிறைக்குப் போன அவர் அடுத்தடுத்து பல சங்கடங்களை சந்தித்தார். ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் சசிகலா பதவிகள் இழந்து புகழ் செல்வாக்கு இழந்து சிறையில் வாடினார். 2017ஆம் ஆண்டு சிறை சென்ற சசிகலா 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சிறையில் இருந்து விடுதலை ஆனார். தற்போது சசிகலாவிற்கு ராகு திசை நடைபெறுகிறது.
கிரகங்கள் சாதகமா: சசிகலாவின் ராசிப்படி பார்த்தால் குரு பகவான் தற்போது இரண்டாம் வீட்டில் இருக்கிறார். மே மாதம் முதல் குரு 3ஆம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடையப்போவது சாதகமாக இல்லை எனவேதான் தனது புது வீட்டிற்கு குடி போய் விட்டார் சசிகலா. ஏழரை சனி தொடங்கியுள்ளது. சனி பகவான் விரைய சனியாக 12ஆம் வீட்டில் பயணம் செய்வதால் பல கோடி விரைய செலவு ஏற்பட்டுள்ளது. ராகு ஜென்ம ராகுவாக மீன ராசியில் அமர்ந்துள்ளார். கேது ஏழாம் வீட்டில் அமர்ந்து நேரடியாக பார்வையிடுகிறார்.
அரசியல் பயணம் சாதகமா?: சசிகலாவை சின்னம்மா என்று அழைத்தவர்கள் எல்லாம் அவரை விட்டு விலகி விட்டனர். கடந்த இரண்டு ஆண்டு காலமாகவே சசிகலா தினம் ஒரு பேச்சு பேசி வருகிறார். அரசியலுக்கு வருவேன் என்றார். அரசியலை விட்டு விலகுகிறேன் என்று அறிக்கை விட்டார். ஆன்மீக பயணம் கிளம்பினார். அதிமுக கட்சி நிர்வாகிகளுடன் பேசி அதை அரசியலாக்கினார். ஆட்சியமைத்து மக்களையும் கட்சியையும் காப்பேன் என்று கூறினார். அவரது நிச்சயமற்ற பேச்சு அரசியல் ரீதியாக சசிகலாவிற்கு பின்னடைவை ஏற்படுத்தி விட்டது.
சறுக்கல்கள்: அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. அதோடு அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என கடந்த ஆண்டு இறுதியில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ராகு கேது: நிழல் கிரகங்களான ராகு கேதுவின் பயணம் சாதகமற்ற நிலையில் இருப்பதால் அரசியல் பயணத்தில் நிலையற்ற தன்மை ஏற்படும். கட்சியும் அதிகாரமும் கைவிட்டு போனது போனதுதான் கைப்பற்ற முடியும் என்ற வாய்ப்பு இப்போதைக்கு இல்லை. ஜெயலலிதாவின் தோழியாக இருந்தார் என்ற ஒரே காரணத்திற்காக அவரை தலைவியாக ஏற்றுக்கொள்ள கட்சி நிர்வாகிகள் தயாராக இல்லை. சசிகலாவின் ஜாதகப்படி அரசியலில் பெரிய அளவில் சாதிக்க வாய்ப்பு இல்லை என்றே ஜோதிடர்கள் கணித்துள்ளனர். போயஸ்கார்டனில் குடியேறிய சசிகலா, அரசியல் ஆட்டத்தை ஆரம்பிப்பாரா? அமைதியாக காலத்தை கழிப்பாரா பார்க்கலாம்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications