குரு பெயர்ச்சி பலன் 2024: குரு பகவானால் குபேரன் ஆகும் ராசிக்காரர்கள்.. யாருக்கு நல்ல வேலை கிடைக்கும்
சென்னை: குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு 2024ஆம் ஆண்டு மே மாதம் இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். குரு பகவான் பார்வை கன்னி, விருச்சிகம், மகரம் ராசிக்காரர்கள் மீது விழுகிறது. குரு பகவானின் பார்வை, பயணத்தால் தனுசு,மகரம்,கும்பம்,மீனம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
தனுசு: தனுசு ராசிக்காரர்கள் வேலை இல்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மே மாதத்திற்குப் பிறகு புரமோசனுடன் கூடிய நல்ல சம்பளம் கிடைக்கும். வேலையில் இருப்பவர்கள் சொந்த தொழில் தொடங்குவீர்கள். குரு பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடு, பத்தாம் வீடு, 12ஆம் வீட்டினை பார்வையிடுகிறார். உங்களுடைய வீட்டில் சுப விரையங்கள் ஏற்படும். சுப காரியங்கள் கை கூடி வரும். பணவருமானம் அபரிமிதமாக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்கலாம். இந்த குரு பெயர்ச்சி காலத்தில் பிள்ளையார்பட்டி விநாயகப்பெருமானை வணங்க நன்மைகள் நடைபெறும்.

மகரம்: குரு பகவான் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் இருந்து ஐந்தாம் வீட்டிற்கு மாறப்போகிறார். குரு பகவான் பயணத்தால் நிறைய நன்மைகள் நடைபெறும். குரு பகவான் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் குபேர யோகம் தேடி வரப்போகிறது. குறைவான சம்பளத்தில் வேலை செய்பவர்களுக்கு கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு வேலையில் புரமோசனும் சம்பள உயர்வும் தேடி வரும். ஏற்றங்களும் மாற்றங்களும் நிறைந்த குரு பெயர்ச்சியாக 2024ஆம் ஆண்டு அமைந்துள்ளது. தற்போது வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல மாற்றங்கள் ஏற்படும். கவுரவப் பதவிகள் தேடி வரும். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பட்டீஸ்வரம் சென்று துர்க்கை அம்மனை வணங்க நன்மைகள் அதிகரிக்கும்.
கும்பம்: சனி பகவனை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே.. குரு பகவான் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டிற்கு வரப் போகிறார். சுக ஸ்தான குருவின் பார்வை உங்களுடைய ராசிக்கு எட்டு, 10 மற்றும் 12ஆம் வீடுகளின் மீது விழுகிறது. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வேலையில் புதிய உற்சாகம் பிறகும். சிலருக்கு வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை கூடும். தொழில் ஸ்தானத்தை குரு பார்வையிடுவதால் நல்ல வேலை கிடைக்கும். புரமோசனுடன் கூடிய சம்பள உயர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அரசியல்வாதிக்கு வெற்றிகள் தேடி வரும். கும்ப ராசிக்காரர்களுக்கு இது யோகமான குரு பெயர்ச்சியாக உள்ளது. பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். வெற்றியும் அனுகூலமும் கிடைக்கும். ஒருமுறை திருவண்ணாமலை சென்று கிரிவலம் வாருங்கள் நிறைய நன்மைகள் கிடைக்கும்.
மீனம்: ராசிநாதன் குருபகவான் மூன்றாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். திருமண தடைகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபம் குறையும். அசையும் அசையாக சொத்துக்கள் வாங்கலாம். குரு பகவான் பார்வை ராசிக்கு 7,9,11ஆம் வீடுகளின் மீது விழுகிறது. உடலில் இருந்த நோய்கள் நீங்கும். நரம்பு பிரச்சினை உள்ளவர்கள் தூக்கத்தை கெடுத்துக்கொள்ள வேண்டாம் கவனம் தேவை. குடும்ப பிரச்சினைகளை கவனமாக கையாளுங்கள், விட்டுக்கொடுங்கள் போங்கள் பிரச்சினைகள் எளிதில் நீங்கும். காதலிப்பவர்களுக்கு திருமணம் கைகூடி வரும். வீர ஆஞ்சநேயரை வழிபடுங்கள் நன்மைகள் நடைபெறும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications