குரு பெயர்ச்சி பலன் 2024: மேஷத்தை விட்டு விலகும் ஜென்ம குரு.. குதூகலம் அடையும் ராசிக்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மேஷ ராசியில் பயணம் செய்யும் குரு பகவான் இன்னும் சில மாதங்களில் ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். 2024 மே 1 ஆம் தேதி முதல் மே 14, 2025 ஆம் ஆண்டு ரிஷப ராசியில் பயணம் செய்யும் குருவின் பார்வை, கன்னி, விருச்சிகம், மகர ராசியின் மீது விழுகிறது. இந்த குரு பெயர்ச்சியால் மேஷ ராசியில் பிறந்தவர்கள் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.

குடும்ப குரு: ஜென்ம ராசியில் பயணம் செய்யும் குரு பகவான் உங்கள் ராசியை விட்டு விலகப்போகிறார். இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே குரு உங்கள் ராசியில் பயணம் செய்வார். தன வாக்கு ஸ்தானம், குடும்ப ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகும் குரு பகவான், உங்களுடைய குடும்ப வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறார்.

Guru peyarchi palan 2024 Tamil : Jupiter Transit prediction for Mesham Rasi

உற்சாகமான குரு பெயர்ச்சி: ஜென்ம ராகு, ஜென்ம குருவினால் கடந்த ஓராண்டு காலமாக மன குழப்பதோடு இருந்தீர்கள். ராகு விலகிய நிலையில் இப்போது குருவும் உங்கள் ராசியை விட்டு நீங்கப்போகிறார். உங்கள் மனதில் இருந்த எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். மனப் போராட்டங்கள் விலகும். வீண் சந்தேகத்தால் பிரிந்தவர்களும் ஒன்று சேர்வர். வேலை செய்யும் இடத்தில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். பண வருமானம் அதிகரிக்கும். மன பலம் கூடும்.

குடும்பத்தில் குதூகலம்: குடும்ப ஸ்தானத்தில் குரு பயணம் செய்யப்போவதால் உங்கள் வீட்டில் சண்டை சச்சரவுகள் நிம்மதி உண்டாகும். தள்ளிப்போன திருமணம் கை கூடி வரும். சுப காரிய விசேஷங்களால் வீடு களைகட்டும். கடன்பட்டாவது சொந்த வீடு வாங்க நினைப்பீர்கள். உங்களின் கனவு நனவாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கடன் பிரச்சினை முடிவுக்கு வரப்போகிறது. வங்கியில் அடமானம் வைத்திருந்த வீட்டுப் பத்திரத்தை மீட்பீர்கள்.

பண வருமானம் கூடும்: குரு பகவான் உங்கள் ராசிக்கு 6,8,10ஆம் வீடுகளை பார்வையிடப்போகிறார். இரண்டாம் வீட்டில் அமர்ந்துள்ள குரு உங்கள் ராசிக்கு 6ஆம் வீட்டைப் பார்ப்பதால் மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். கடன் பிரச்னைகள் கட்டுக்குள் வரும். மருத்துவச் செலவுகள் குறையும். குரு 8வது வீட்டைப் பார்ப்பதால், வராது என்றிருந்த பணம் உங்களுடைய கைக்கு வந்து சேரும். கௌரவப் பதவிகள் தேடி வரும். நல்ல வேலை கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி கிடைக்கும்.

புது வீடு யோகம்: திருமணமாகி குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வீகச் சொத்தில் இருந்த வில்லங்கம் விலகும். பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும். புது வீட்டிற்கு இடம் மாறுவீர்கள். அம்மாவின் உடல்நிலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். குரு வக்ரமடையும் காலத்தில் உடல்நிலை பாதிக்கும் வேலைப்பளு கூடும் கவனம் தேவை. வீட்டு மனை வாங்குவீர்கள். ஆனால் கொஞ்சம் அலைச்சலும், செலவுகளும் வந்துபோகும்.

பதவி உயர்வு: 2024ஆம் ஆண்டின் இறுதியில் குரு வக்ர நிவர்த்தி அடைந்த பின்னர் தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிக அளவில் முதலீடுகள் செய்வீர்கள். லாபம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்திய மேலதிகாரி இடம் மாறி செல்வார். நீங்கள் கேட்ட இடத்திற்கு இடம் மாற்றம் உண்டாகும். பதவி உயர்வும் சம்பள உயர்வும் தேடி வரும். புதிதாக வரும் நல்ல வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

சுப காரியம்: தடைப்பட்ட கல்யாணம் சுபமாக முடியும். சிலருக்கு நல்ல வேலை கிடைக்கும். மாணவர்கள், உயர்கல்விக்காக அயல்நாடு செல்வார்கள். அரசு வேலைக்காக தேர்வு எழுதியவர்கள் 2025ஆம் ஆண்டு கை நிறைய சம்பளத்தில் நல்ல பணியில் அமர வாய்ப்புள்ளது. மொத்தத்தில் மே மாதம் நிகழப்போகும் குரு பெயர்ச்சி உங்கள் வாழ்க்கையில் புதிய மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரப்போகும் குரு பெயர்ச்சியாக அமைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+