குரு பெயர்ச்சி பலன் 2024: விரைய குரு.. வீடு தேடி வரும் செலவுகள்.. பண விசயத்தில் கவனம்
சென்னை: குரு பகவான் பொன்னவன்..மே மாதம் குரு பெயர்ச்சி நிகழப்போகிறது. மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். குரு பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு யோக காலம் தேடி வரப்போகிறது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரிஷப ராசிக்கு வரப்போகும் குரு பகவானால் மிதுன ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
குரு பகவான் சுப கிரகம். குரு பயணம் செய்யும் இடத்தை விட பார்க்கும் இடங்களுக்கு பலன் அதிகம். லாப ஸ்தான வீட்டில் இருந்து விரைய ஸ்தான வீட்டிற்கு வரப்போகிறார் குரு பகவான். 12வது வீடு என்பது விரைய ஸ்தானம் மறைவு ஸ்தானம். குரு 12ஆம் வீட்டில் மறைந்தாலும் அதிக பாதிப்புகள் தராமல் நன்மைகளையே செய்வார்.

உங்கள் யோகாதிபதி சுக்கிரனின் வீட்டில் குரு அமர்வதால், உங்களின் வளர்ச்சி பெரிதாக தடைபடாது. எனினும் பண விசயத்தில் சிக்கனம் அவசியம். 12ஆம் வீட்டில் குரு மறைகிறார். கவலைப்பட வேண்டாம். குருவின் பார்வை அற்புதமாக உள்ளது. விரைய குரு சுப விரையங்களைத் தரப்போகிறார். பண வருமானம் அதிகரித்தாலும் சேமிக்க முடியாத அளவிற்கு செலவுகளும் வரிசை கட்டி நிற்கும். ராவணன் முடி வீழ்ந்தது 12ஆம் வீட்டில் குரு வந்த போதுதான். வீட்டு ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். ஜீராண மண்டல உறுப்புகளில் அக்கறையும் கவனமும் தேவை.
ரிஷபம் சுக்கிரன் வீடு.. கெட்டவன் கெட்டிடில் கிட்டிடிடும் ராஜயோகம் என்பது போல குரு மறைவது சிறப்பு. சுப விரைய செலவுகள் வரப்போகிறது. எதிர்பாராத திடீர் செலவுகள் தேடி வரப்போகிறது. ஆன்மீக பயணங்கள் செல்வீர்கள். உங்கள் ராசிக்கு 4ஆம் வீட்டினை குரு பார்வையிடுவதால் அம்மா வழி சொத்துக்கள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி இருக்கும். தேங்கிக் கிடந்த தொழிலில் வெற்றி கிடைக்கும்.
வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கப்போகிறீர்கள். வண்டி வாகனம் வாங்கும் யோகத்தை தரப்போகிறது. வெற்றிகள் தேடி வரப்போகிறது. சவால்களை சமாளிப்பீர்கள். வீட்டில் அமைதியும் சந்தோஷமும்,ஏற்படும். மறைமுக எதிரிகள் தொந்தரவுகள் நீங்கும். போட்டி, பொறாமைகள் நீங்கும். கணவன் மனைவி இடையேயான கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
குருவின் பார்வை 6வது இடத்தில் பதியும் போது ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். ஆயுள் கண்டங்கள் நீங்கும். வம்பு வழக்குகள் சாதகமான முடிவினை தரும். திருமண வாழ்க்கையில் சவால்களை சந்திப்பீர்கள். கடவுள் அனுகிரகத்தினால் நல்லதே நடக்கும். புதிய பட்டம், பதவிகள் தேடி வரும். கௌரவ பதவிகள் தேடி வரும். புரமோசன், டிரான்ஸ்பர் கிடைக்கும். தேவையற்ற வீண் செலவுகளை தவிர்க்கவும். சுப விரைய செலவுகளை அதிகரிக்க வேண்டும்.
வீடு வாகனம் வாங்கலாம். புது வீடு வாங்கலாம். வண்டி வாங்குவதற்கான யோகம் வந்து விட்டது. புது கடன் வாங்கி வீடு வாங்கலாம். பொருளாதார வசதி அதிகரிக்கும். கடன் பிரச்சினை நீங்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. யாருக்கும் பணத்தை கடனாக கொடுத்து ஏமாந்து விடாதீர்கள். கவனமாக இருக்க வேண்டிய காலகட்டமாகும்.
அலுவலகத்தில், வேலை தொழில் விசயங்களில் உங்களின் நேரடிக் கவனம் தேவை. உங்களின் குடும்ப விஷயங்களை அடுத்தவர்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். வேலைச்சுமை அதிகரிக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவல் ஆகும். வங்கிக் கடன் கிடைக்கும். அரசு காரியங்கள் சாதகமாகும். கை - கால், இடுப்பு வலி நீங்கும். வழக்கு சாதகமாகும். குரு உங்கள் ராசிக்கு 8ஆம் வீட்டைப் பார்ப்பதால், வெளியூர் பயணங்கள் அதிகரிக்கும். பதவி உயர்வு தேடி வரும்.
அதிரடி மாற்றங்கள் ஏற்படும். இளைய சகோதரருக்கு திருமணம் கூடி வரும். பயணங்கள், செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகள் ஆசைப்பட்ட கல்வி நிறுவனத்தில் அவர்களைச் சேர்ப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். திருமணம் கூடி வரும். குழந்தை பாக்கியம் கிட்டும். பணம் கொடுக்கல்-வாங்கலில் கவனம் தேவை. கடன் வாங்காதீர்கள். ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம்.
2024ஆம் ஆண்டின் இறுதியில் சகோதர வகையிலும், வீடு பராமரிப்புக் காகவும் செலவுகள் ஏற்படலாம். புது வீடு வாங்கலாம். தொழில் வியாபாரத்தில் அகலக்கால் வைக்காதீர்கள். புது வியாபாரத்தில் நுழைய வேண்டாம். புது ஏஜென்ஸிகளை எடுப்பீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்கள் உதவுவர். இரும்பு, கெமிக்கல் வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்களைப் பகைக்காதீர்கள். வேலைப்பளு அதிகரிக்கும். பாராட்டுக்கள் குவியும் காலமாகும். இந்த குருப்பெயர்ச்சி கடின உழைப்பையும் புதிய அனுபவங்களைப் பெற்றுத் தருவதாக அமையும்.












Click it and Unblock the Notifications