குடிசையில் இருந்தவர்கள்..கோட்டைக்கு போகும் காலம்..மேஷ ராசிக்கு அடிக்கும் யோகம்.. குரு பெயர்ச்சி பலன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரவிருக்கும் குரு பெயர்ச்சி மேஷ ராசிதாரர்களின் வாழ்க்கையை புரட்டி போடப்படுகிறது.. அது எப்படி உங்கள் வாழ்க்கையை மாற்றும் .. என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம் என்று இங்கே பார்க்கலாம்.

ஜோதிடத்தில் சில கிரகங்களில் நகர்வு என்பது மிக மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதிலும் சனி, ராகு, கேது, குரு பெயர்ச்சிகள் அதீத முக்கியத்துவத்துடன் பார்க்கப்படும். குரு பெயர்ச்சி நடக்கும் போதெல்லாம் பல ராசிகளுக்கு வாழ்க்கை அப்படியே பாசிட்டிவாக மாறிய சம்பங்கள் நடந்துள்ளன. குடிசையில் இருப்பவன் கோட்டைக்கு சென்றுவிட்டான் என்று சொல்வார்களே.. அப்படி பலரின் வாழ்க்கை குரு பெயர்ச்சி மூலம் மாறி இருக்கிறது.

Guru peyarchi palan 2024 What it is meant for Mesha Rasi

அப்படித்தான் மேஷ ராசியின் வாழ்க்கை இந்த குரு பெயர்ச்சி மூலம் மாறப்போகிறது. மேஷ ராசியில்தான் குரு பகவான் தற்போது பயணம் செய்து கொண்டு இருக்கிறார். இந்த குரு பகவான் மே 1ஆம் தேதி முதல் ரிஷப ராசிக்கு செல்கிறார். மே 1ம் தேதி நடக்கும் இந்த மாற்றத்தால் உங்கள் வாழ்க்கை எப்படி எல்லாம் மாறும் என்று பார்க்கலாம்.

துன்பங்களில் இருந்தனர்: இதுவரை.. இதுவரை என்றால் கிட்டத்தட்ட கடந்த 20 வருடங்களாவே மேஷ ராசியினர் படாதபாடுதான் பட்டுவந்தனர் என்று கூற வேண்டும். மிக மோசமான பொருளாதார சூழ்நிலை, கழுத்தை நெறிக்கும் கடன், குழந்தைகள் வாழ்க்கையில் பிரச்சனை, சொந்த வீடு இல்லை, சொந்தமாக இருந்த நிலம் எல்லாம் போச்சு என்று மிகுந்த மனஉளைச்சலில் கஷ்டப்பட்டு கொண்டு இருந்தீர்கள் இத்தனை வருடம்.

கடினமான குணம் கொண்ட நபர்: ஆளை பார்த்தாலே இவர் கஷ்டத்தில் இருக்கிறார் என்று சொல்லும் அளவிற்கு மோசமான சூழ்நிலை உங்களுக்கு இருந்து வந்தது. இந்த தோல்விகளை மறைக்க வெளியே கோபமாக செயல்படுவது.. உங்களிடம் யாரும் துணிந்து பேச முடியாத அளவிற்கு முரட்டு தனமாக இருப்பது என்று இத்தனை காலம் வாழ்க்கையை கழித்து வந்தீர்கள்.

ஏன் தேடி வந்த சில நல்ல வாய்ப்புகளை கூட நழுவவிட்டு துடித்துக்கொண்டு இருந்தீர்கள் இத்தனை காலம். இனி கவலை வேண்டாம். அது எல்லாம் மாற போகிறது.

உங்கள் வாழ்க்கையை புரட்டி போடும் குரு: இந்த குரு பெயர்ச்சி மூலம் உங்களின் பொருளாதாரம் அடியோடு மாறப்போகிறது. கடனை எல்லாம் அடைக்க போகிறீர்கள். சுப செலவுகளை செய்ய போகிறீர்கள். சொந்த நிலம், வீடு என்று வாங்க போகிறீர்கள்.

நல்லதே நடக்கும்: அவருக்கு புதுப்பணம் வந்து இருக்கிறது என்று கமெண்ட் அடிப்பார்களே.. அப்படி புதுப்பணம் வந்தவர் போல உங்கள் வாழ்க்கை மாறப்போகிறது.

அடுத்த 18 மாதங்கள் உங்களின் வாழ்க்கை புதிய உச்சத்தில் இருக்க போகிறது. மே 13, 2025 வரை நீங்கள் சாதனைகளை குவிக்க போகிறீர்கள்.

குபேர யோகம்: உங்களுக்கு வீடு, ஆரோக்கியம், குடும்ப நலம், திருமணம், பணம், என்று எல்லாம் கொட்ட போகிறது. குபேர யோகம் அடித்துவிட்டது என்று சொல்வார்களே.. அப்படி ஒரு குபேர யோகம் குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 6, 8, 11வது வீட்டில் இருப்பதால் அடிக்க போகிறது.

போக்குவரத்து, பயணங்களில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருந்தால் போதும். குழந்தைகள் படிப்பு விஷயத்தில் கூடுதல் அக்கறையோடு இருக்கவும். முக்கியமாக இளைஞர்கள் காதல் வயப்படுவதில் கொஞ்சம் கவனமாக யோசித்து செயல்படவும்.

ஆலங்குடி குருஸ்தலத்திற்கு சென்று பூஜை செய்வது நல்ல பலன்களை கொடுக்கும். .

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+