குரு ஸ்பீட் பிரேக் போட போகுது! ஜாக்கிரதையாக இருங்க! இந்த ராசிக்கு குரு பெயர்ச்சி கொஞ்சம் சிக்கல்தான்
சென்னை: ஜோதிடத்தில் கால சக்கரத்தில் இரண்டாவதாக இருக்கும் சுக்கிரனின் வீடான ரிஷப ராசிக்கு செல்கிறார் குரு. துலாம் ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி மூலம் என்ன மாதிரியான மாற்றங்கள் எல்லாம் நடக்கும் என்று பார்க்கலாம்.
மேஷ ராசியில் குரு பகவான் தற்போது பயணம் செய்து கொண்டு இருக்கிறார். இந்த குரு பகவான் மே 1ஆம் தேதி முதல் ரிஷப ராசிக்கு செல்கிறார். மே 1ம் தேதி நடக்கும் இந்த மாற்றத்தால் பல ராசிதாரர்களின் வாழ்க்கை அப்படியே மாற போகிறது. குரு பெயர்ச்சி பொதுவாக பல விதமான மாற்றங்களை பல ராசிகர்களுக்கு ஏற்படுத்தும். சிலருக்கு வாழ்க்கையை அடியோடு மாற்றும் குணம் கொண்டது குரு பெயர்ச்சி.

கால சக்கரத்தில் இரண்டாவதாக இருக்கும் சுக்கிரனின் வீடான ரிஷப ராசிக்கு செல்கிறார் குரு. ஜோதிடத்தில் சில கிரகங்களில் நகர்வு என்பது மிக மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதிலும் சனி, ராகு, கேது, குரு பெயர்ச்சிகள் அதீத முக்கியத்துவத்துடன் பார்க்கப்படும். அதில் குரு பெயர்ச்சியும் ஒன்று.
என்ன மாற்றம் ஏற்படும்: குரு பெயர்ச்சி நடக்கும் போதெல்லாம் பல ராசிகளுக்கு வாழ்க்கை அப்படியே பாசிட்டிவாக மாறிய சம்பங்கள் நடந்துள்ளன. அந்த வகையில் துலாம் ராசிக்கு குரு பெயர்ச்சி மூலம் என்ன மாற்றங்கள் எல்லாம் நடக்கும் என்று பார்க்கலாம்.
சில நல்ல விஷயங்கள்: குரு உங்கள் ராசிக்கு 8ம் இடத்தில் வருகிறார். குரு உங்களை பார்க்காமல் மறைகிறார் என்பதால் ஒரு சில நல்ல விஷயங்கள் நடக்கும்.
அதாவது வெளிநாடு போகும் வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் நிலவி வந்த மனஸ்தாபங்கள், பிரச்சனைகள் குறையும். கணவன் மனைவி அந்யோனியம் அதிகரிக்கும். திருமணம் கைகூடும்.வேலை நிமித்தமாக இடம் மாற்றம் வாய்ப்பு உண்டு. வேலை மாற்றமும் வாய்ப்பு உண்டு. முகம் பொலிவு பெறும் .
குரு பெயர்ச்சி ஸ்பீட் பிரேக்: ஆனால் குரு பெயர்ச்சி இந்த முறை உங்களுக்கு நல்லதை விட கெட்டதையே கொஞ்சம் அதிகம் கொடுக்கும். கால சக்கரத்தில் இரண்டாவதாக இருக்கும் சுக்கிரனின் வீடான ரிஷப ராசிக்கு செல்கிறார் குரு. இதற்கு முன் உங்கள் ராசிக்கு 7ம் இடத்தில் இருந்தார் குரு. இப்போது 8ம் இடத்தில இருக்கிறார். துலாம் ராசிதாரர்களுக்கு பொதுவாகவே குரு பிரச்சனைகளை தரும்.
அந்த வகையில் பின்வரும் பிரச்சனைகள் துலாம் ராசிகளுக்கு வரலாம். குழந்தைகளுக்கு வரன் தேர்வு செய்வதில் ஜாக்கிரதையாக இருங்கள். போக்குவரத்தில் கவனமாக இருங்கள். விபத்து ஏற்படும் வாய்ப்புகள் கூட உள்ளதால் கவனமாக இருக்கவும்.
பங்காளிகள் உறவில் சிக்கல்கள் ஏற்படலாம். பண தேவை அதிகம் இருக்கும். கையில் காசு நிற்காது. பணம் செலவாகிக்கொண்டு இருக்கும். யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டும். நீங்கள் கொடுக்கும் வாக்கு உங்களுக்கே எதிராக திரும்பலாம். நிலம் வாங்குவது, வீடு வாங்குவதில் கவனம் செலுத்தவும். தவறாக முடியலாம். வயிற்று பிரச்சனைகள் ஏற்படலாம்.
பரிகாரம்: ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்று ஒரு முறை பூஜை செய்து வழிபடுங்கள். பழனி இடும்பன் கோவிலுக்கும் செல்லுங்கள்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications