Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரு பெயர்ச்சி பலன் 2023: சிம்ம ராசிக்கார அரசியல்வாதிகளுக்கு அடி தூள்.. முதல்வருக்கு என்ன யோகம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நிகழும் மங்களகரமான சோபகிருது வருடம் ஏப்ரல் 22ம் தேதி சித்திரை மாதம் 9ஆம் நாள் குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். தனது ஆட்சி வீடான மீன ராசியில் சஞ்சரித்த குருபகவான் செவ்வாய் பகவானின் வீடான மேஷ ராசியில் அஸ்வினி நட்சத்திரத்தில் தனது பயணத்தை தொடங்கப்போகிறார். இந்த குரு பெயர்ச்சியால் சிம்ம ராசிக்கார அரசியல்வாதிகளுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

குரு பகவான் பொன்னவன் தனது பொன்னான பார்வையால் பலரையும் சுபிட்சமடைய வைப்பார். குரு பார்வைக்காக பலரும் காத்திருக்கின்றனர். திருமணம் குழந்தை பாக்கியம், பணவரவு, வேலை போன்றவைகள் நல்ல நிலையில் கிடைக்க குருவின் அருள் அவசியம். எனவேதான் குரு பெயர்ச்சி ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் போது பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

Guru Peyarchi Palan for Tamil Nadu Chief Minister M.K.Stalin

குரு பகவான் மேஷம் ராசியில் அமர்ந்து சிம்மம்,துலாம், தனுசு ராசிகளை பார்க்கிறார். சிம்ம ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தான குரு கூடவே குரு பார்வையும் கிடைப்பதால் இப்போதே உற்சாக நடைபோட ஆரம்பித்து விட்டனர். சிம்ம ராசிக்காரர் ஸ்டாலினுக்கு அவரது ஜாதகம், தசாபுத்தியின்படி இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சிம்ம ராசி பூரம் நட்சத்திரம். அவரது ஜாதகத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தை வைத்து பார்க்கும் போது பரிவர்த்தனை யோகம், தர்ம கர்மாதிபதி யோகம், அகண்ட சாம்ராஜ்ய யோகம், விரின்சி யோகம், பர்வத யோகம், யவன யோகம், லட்சுமி யோகம் என பல யோகங்கள் உள்ளன.

கோச்சார ரீதியாக குரு சிம்ம ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் குரு அமர்கிறார். குரு பகவான் ஐந்து மற்றும் எட்டாம் வீட்டிற்கு அதிபதி. அவர் ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் அமரப்போகிறார். இது அற்புதமான பலன்களை தரப்போகிறது. குரு பகவான் சிம்ம ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் அமர்ந்து முயற்சி ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம், ராசியை பார்வையிடுகிறார்.

பொதுவாக குருபகவான் ஜன்ம ராசிக்கு 2, 5, 7, 9, 11 ஆகிய ஸ்தானங்களில் கோசாரத்தில் வரும் பொழுது நன்மையே செய்வார். ராசியை கோசார குரு பார்க்கும் காலமும் யோக பலன்களே நடக்கும் ஒன்பதாம் வீட்டில் அமர்வதால் பொற்காலம் வந்து விட்டது. குரு சிம்ம ராசியை பார்ப்பதால் குழப்பங்கள் தீரும். இந்த குரு பெயர்ச்சி மாபெரும் அதிர்ஷ்டங்களையும் யோகங்களையும் நன்மைகளையும் அள்ளித்தரப்போகிறது.

பொன்னவன் குருவின் பார்வை சிம்ம ராசி மீது முழுவதுமாக விழுவதால் தொட்டது துலங்கும் காலம் வந்து விட்டது. உங்கள் ராசியை 5 ஆம் பார்வையாக குரு பார்ப்பதால் புகழ் கீர்த்தி அந்தஸ்து பெறலாம்.நீங்க செய்த நற்செயல்களுக்கெல்லாம் பலன் இப்பொழுது தான் கிடைக்க போகிறது.

சிம்ம ராசிக்கு மூன்றாம் வீட்டை குரு பார்வையிடுவதால் சொல்வாக்கும், செல்வாக்கும் பெருகும். எடுக்கிற காரியங்களில் வெற்றி கிடைக்கும் தொட்டவை துலங்கும். சகோதர உறவுகளினால் அன்பும் ஆதரவு கிடைக்கும். குறிப்பாக சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

குருவின் பார்வை 5 ஆம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்ப்பதால் கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல உங்களுடைய எண்ணங்கள் பூர்த்தியாகும். பிள்ளைகள் வாழ்க்கையில் சுபகாரியம் நடைபெறும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் தேடி வரும். பூர்வீக சொத்துகள் மூலம் அனுகூலம் ஆதாயம் பெறலாம். எதிரிகள் தொல்லை ஒழியும். சிம்ம ராசிக்கார அரசியல்வாதிகளுக்கு இனி வெற்றி மீது வெற்றிகள் தேடி வரப்போகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+