Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரு பெயர்ச்சி 2021: இந்த 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தையும் யோகத்தையும் தரப்போகும் குருபகவான்

பொன்னவன் குருபகவான் பிலவ ஆண்டில் மகரம், கும்பம், மீன ராசிகளில் பயணம் செய்கிறார். இந்த குரு பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும் அதிர்ஷ்டமும் யோகமும் தேடி வரும் என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நவ கிரகங்களில் குரு பகவான் சுப கிரகம். குருவின் சஞ்சாரம், பார்வையால் சிலருக்கு அதிர்ஷ்டம் தேடி வரும். திருமணம் சுபகாரியம் நடைபெறும், நல்ல வேலை கிடைக்கும், சிலருக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். இந்த பிலவ ஆண்டில் அதாவது 2021,2022ஆம் ஆண்டில் குருபகவான் மகரம், கும்பம், மீன ராசிகளில் பயணம் செய்கிறார். இந்த சஞ்சாரத்தினால் துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசிகளில் பிறந்தவர்களுக்கு உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும் எப்படி இருக்கும் அதிர்ஷ்டமும் யோகமும் யாருக்கு தேடி வரும் என்று பார்க்கலாம்.

குரு பகவான் பொன்னவன் என்று போற்றப்படுகிறார். குருவின் பார்வை பொன்னான பலன்களைத் தரும் என்பதால்தான் 'குரு பார்க்க கோடி நன்மை' என்ற பழமொழி ஏற்பட்டது. குரு ஒரு ராசியில் 12 மாதங்கள் பயணம் செய்வார். சில நேரங்களில் அதிசாரமாகவும், பின்னர் வக்ரகதியிலும் பயணம் செய்வார்.
திருக்கணித பஞ்சாங்கப்படி குரு பகவான் நிகழும் மங்களகரமான பிலவ ஆண்டு ஆவணி மாதம் 29ஆம் தேதி செவ்வாய்கிழமை செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி பகல் 02.22 மணியளவில் கும்ப ராசியில் இருந்து மகர ராசிக்கு திரும்புகிறார்.

மகர ராசியில் நேர்கதியில் பயணம் செய்யும் குருபகவான் கார்த்திகை 4ஆம் தேதி நவம்பர் 20ஆம் தேதி சனிக்கிழமை இரவு 11.31 மணியளவில் நேர்கதியில் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பயணம் செய்கிறார். சில மாதங்கள் கும்ப ராசியில் பயணம் செய்யும் குரு பகவான் பங்குனி மாதம் 29ஆம் தேதி ஏப்ரல் 12ஆம் தேதி 2022 ஆம் ஆண்டு மீன ராசியில் அதிசாரமாக பயணம் செய்யப் போகிறார். குரு பகவான் மூன்று ராசிகளில் பயணம் செய்வதால் இந்த ஆறுகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான யோகங்கள் கிடைக்கும் உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

துலாம்

துலாம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே, குருபகவான் உங்கள் ராசிக்கு சுக ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம், ருண ரோக சத்ரு ஸ்தானங்களில் பயணம் செய்கிறார். குருவின் பயணத்தாலும் பார்வையாலும் உங்கள் ராசிக்கு நல்ல பண வரவு கிடைக்கப் போகிறது. சுப காரியங்கள் நிகழப்போகின்றன. நவம்பர் மாதத்தில் நிகழப்போகும் குரு பெயர்ச்சி உங்கள் ராசிக்கு நிறைய நன்மைகளைத் தரப்போகிறது. குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் திருமணம் சுப காரியங்கள் கை கூடி வரும். குருவின் பார்வை லாப ஸ்தானத்தின் மீது விழும் காலத்தில் தொழில் வியாபாரத்தில் செய்யும் முதலீட்டிற்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கி மனதில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும் சொத்து தகராறுகள் நீங்கும். தூக்க பிரச்சினைகள் நீங்கும். நீண்ட நாட்களாக வயிறு தொடர்பான பிரச்சினையில் இருப்பவர்களும், அர்த்தாஷ்டம சனியின் பாதிப்பினால் அவதிப்படுபவர்களுக்கும் இந்த குரு பெயர்ச்சி சங்கடங்களை நீக்கி சந்தோஷத்தை தரப்போகிறது.

விருச்சிகம்

விருச்சிகம்

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு குரு பகவான் முயற்சி ஸ்தானத்தில் சில மாதங்கள் மறைந்தாலும் சுக ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் குரு பகவான் பயணம் செய்கிறார். நவம்பர் மாத குரு பெயர்ச்சிக்குப் பிறகு சுக ஸ்தானத்தில் பயணம் செய்யும் குருவின் பார்வை உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டிலும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீடு, விரைய ஸ்தானமான 12ஆம் வீட்டிலும் விழுகிறது. உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் மருத்துவ செலவு செய்து வந்த நீங்கள் நிம்மதி பெருமூச்சு விடும் காலம் வந்து விட்டது. கவலைகள் நீங்கப் போகிறது. குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி குதூகலம் ஏற்படும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம் நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு புரமோசன் கிடைக்கும் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும்.

தனுசு

தனுசு

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, குரு பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்திலும், மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்திலும், நான்காம் வீடான சுக ஸ்தானத்திலும் பயணம் செய்கிறார். இந்த ஆண்டு நவம்பர் மாதம் உங்கள் ராசி நாதன் குருவின் பயணம் மூன்றாம் வீட்டிற்கு செல்வதால் சில பாதிப்புகளை சந்திக்க வேண்டிருக்கும். பொருளாதாரத்தில் சில நெருக்கடிகள் ஏற்படலாம் என்றாலும் குருவின் பார்வை உங்கள் ராசிக்கு ஏழாம் வீடான களத்திர ஸ்தானம், பாக்ய ஸ்தானம், லாப ஸ்தானங்களின் மீது விழுவதால் செய்யும் தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். கூட்டுதொழிலில் செய்யும் முதலீடுகளில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிணக்குகள் முடிவுக்கு வரும் சிலருக்கு திருமணம் சுப காரியங்கள் நடைபெறும். பாத சனி படுத்தி எடுத்தாலும் இந்த குரு பெயர்ச்சியால் உங்களுக்கு பாதகங்களை விட சாதகமே அதிகம் நடைபெறும்
வேலையில் சுறுசுறுப்பும் உற்சாகமும் அதிகரிக்கும். புரமோசனும் சம்பள உயர்வும் தேடி வரப்போகிறது.

மகரம்

மகரம்

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்குள் குருபகவான் சில மாதங்கள் பயணம் செய்வார். ஜென்மகுரு மனதில் சில நேரங்களில் சஞ்சலத்தை ஏற்படுத்தினாலும் குருவின் பார்வை உங்கள் ராசிக்கு சாதகமாகவே உள்ளது. குருவின் பயணம் நவம்பர் மாதத்தில் இருந்து நேரடியாக இரண்டாவது வீட்டிற்கு செல்வதால் பண வரவு நன்றாக இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். குரு பார்வை உங்கள் ராசிக்கு ஆறு, எட்டு, பத்தாம் வீடுகளின் மீது விழுவதால் நிதி நெருக்கடிகள் முடிவுக்கு வரும். கடன் பிரச்சினைகள் நீங்கும். ஏழரை சனியில் ஜென்ம சனி இருந்தாலும் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். மறைந்திருந்த நோய்கள் வெளிப்படும் மருத்துவ செலவுகள் வந்தாலும் நோய்கள் குணமடையும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். செய்யும் தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். தோஷங்கள் நீங்கும் சுப காரியங்கள் நடைபெறும் காலம் கை கூடி வரப்போகிறது.

கும்பம்

கும்பம்

சனிபகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்பம் ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு 12ஆம் வீடு, ஜென்ம ராசி, 2ஆம் வீடான குடும்ப ஸ்தானத்தில் பயணம் செய்யப் போகிறார். செப்டம்பர் முதல் நேர்கதியில் விரைய ஸ்தானத்தில் பயணிக்கப் போகும் குருபகவான் நவம்பர் மாதம் முதல் இடப்பெயர்ச்சியாகி உங்கள் ராசிக்கு வந்து அமர்கிறார். குருவின் சஞ்சாரமும் பார்வையும் உங்களுக்கு சாதகமாகவே உள்ளது. ஏழரை சனியில் விரைய சனி நடைபெறுகிறது. சம்பாதிக்கும் பணம் எல்லாம் வந்த சுவடு தெரியாமல் மறைந்து போகிறதே என்ற கவலை இருந்தாலும் குருபகவான் உங்களுக்கு நிறைய பண வரவை ஏற்படுத்தி கொடுப்பார். புதிய தொழில் தொடங்க முயற்சி செய்யலாம் என்றாலும் சுய ஜாதகத்தில் உங்களுக்கு என்ன தசை நடைபெறுகிறது என்று பார்த்து தொடங்கலாம். வேலையில் அதிக கவனம் தேவை. இருக்கும் வேலையை விட்டு விட்டு பறக்க நினைக்க வேண்டாம். குடும்பத்தில் சில பிரச்சினைகள் அவ்வப்போது எட்டிப்பார்க்கும். விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் எளிதில் சமாளிக்கலாம். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் நீங்கும் இந்த குரு பெயர்ச்சியால் குடும்பத்தில் பிள்ளைகளால் சுப செலவுகள் வரும். பிள்ளைகளின் உயர்கல்விக்கு அதிக செலவு செய்வீர்கள்.

மீனம்

மீனம்

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே, உங்கள் ராசி நாதன் குரு பகவான் இந்த ஆண்டு இறுதியில் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்திலும் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உங்கள் ராசிக்கும் வரப்போகிறார். லாப குரு, விரைய குரு, ஜென்ம குரு என இந்த ஆண்டு குருவின் சஞ்சாரம் உள்ளது. செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். தொட்டதெல்லாம் பொன்னாகும் காலமாகும் என்றாலும் நிறைய சுப செலவுகளும் வரும். குருவின் பார்வை சுக ஸ்தானத்தின் மீதும்,ருண ரோக சத்ரு ஸ்தானத்தின் மீதும், ஆயுள் ஸ்தானத்தின் மீதும் விழுவதால் உங்களின் உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பொருளாதார நெருக்கடிகள் நீங்கும் கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பேச்சினால் சில நேரங்களில் சிக்கல்கள் வரும் என்பதால் ஒவ்வொரு முறையும் நீங்கள் பேசும் பேச்சில் கவனம் செலுத்துவது நல்லது. உயரதிகாரிகள் சொல்வதை கேட்டு நடந்து கொள்வதன் மூலம் வேலை செய்யும் இடத்தில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+