ஸ்லோ பண்ணுங்க பாஸ்! குரு பெயர்ச்சி போட போகும் ஸ்பீட் பிரேக்! இந்த ராசிக்கு கொஞ்சம் சிக்கல்தான்
சென்னை: ஜோதிடத்தில் கால சக்கரத்தில் இரண்டாவதாக இருக்கும் சுக்கிரனின் வீடான ரிஷப ராசிக்கு செல்கிறார் குரு. துலாம் ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி மூலம் என்ன மாதிரியான மாற்றங்கள் எல்லாம் நடக்கும் என்று பார்க்கலாம்.
மேஷ ராசியில் குரு பகவான் தற்போது பயணம் செய்து கொண்டு இருக்கிறார். இந்த குரு பகவான் மே 1ஆம் தேதி முதல் ரிஷப ராசிக்கு செல்கிறார். மே 1ம் தேதி நடக்கும் இந்த மாற்றத்தால் பல ராசிதாரர்களின் வாழ்க்கை அப்படியே மாற போகிறது. குரு பெயர்ச்சி பொதுவாக பல விதமான மாற்றங்களை பல ராசிகர்களுக்கு ஏற்படுத்தும். சிலருக்கு வாழ்க்கையை அடியோடு மாற்றும் குணம் கொண்டது குரு பெயர்ச்சி.

கால சக்கரத்தில் இரண்டாவதாக இருக்கும் சுக்கிரனின் வீடான ரிஷப ராசிக்கு செல்கிறார் குரு. ஜோதிடத்தில் சில கிரகங்களில் நகர்வு என்பது மிக மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதிலும் சனி, ராகு, கேது, குரு பெயர்ச்சிகள் அதீத முக்கியத்துவத்துடன் பார்க்கப்படும். அதில் குரு பெயர்ச்சியும் ஒன்று.
என்ன மாற்றம் ஏற்படும்: குரு பெயர்ச்சி நடக்கும் போதெல்லாம் பல ராசிகளுக்கு வாழ்க்கை அப்படியே பாசிட்டிவாக மாறிய சம்பவங்கள் நடந்துள்ளன. அந்த வகையில் துலாம் ராசிக்கு குரு பெயர்ச்சி மூலம் என்ன மாற்றங்கள் எல்லாம் நடக்கும் என்று பார்க்கலாம்.
சில நல்ல விஷயங்கள்: குரு உங்கள் ராசிக்கு 8ம் இடத்தில் வருகிறார். குரு உங்களை பார்க்காமல் மறைகிறார் என்பதால் ஒரு சில நல்ல விஷயங்கள் நடக்கும்.
அதாவது வெளிநாடு போகும் வாய்ப்பு கிடைக்கும்.
ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
குடும்பத்தில் நிலவி வந்த மனஸ்தாபங்கள், பிரச்சனைகள் குறையும்.
கணவன் மனைவி அந்யோனியம் அதிகரிக்கும்.
திருமணம் கைகூடும்.
வேலை நிமித்தமாக இடம் மாற்றம் வாய்ப்பு உண்டு. வேலை மாற்றமும் வாய்ப்பு உண்டு.
முகம் பொலிவு பெறும் .
குரு பெயர்ச்சி ஸ்பீட் பிரேக்: ஆனால் குரு பெயர்ச்சி இந்த முறை உங்களுக்கு நல்லதை விட கெட்டதையே கொஞ்சம் அதிகம் கொடுக்கும். கால சக்கரத்தில் இரண்டாவதாக இருக்கும் சுக்கிரனின் வீடான ரிஷப ராசிக்கு செல்கிறார் குரு. இதற்கு முன் உங்கள் ராசிக்கு 7ம் இடத்தில் இருந்தார் குரு. இப்போது 8ம் இடத்தில இருக்கிறார். துலாம் ராசிதாரர்களுக்கு பொதுவாகவே குரு பிரச்சனைகளை தரும்.
அந்த வகையில் பின்வரும் பிரச்சனைகள் துலாம் ராசிகளுக்கு வரலாம்.
குழந்தைகளுக்கு வரன் தேர்வு செய்வதில் ஜாக்கிரதையாக இருங்கள்.
போக்குவரத்தில் கவனமாக இருங்கள். விபத்து ஏற்படும் வாய்ப்புகள் கூட உள்ளதால் கவனமாக இருக்கவும்.
பங்காளிகள் உறவில் சிக்கல்கள் ஏற்படலாம். பண தேவை அதிகம் இருக்கும். கையில் காசு நிற்காது. பணம் செலவாகிக்கொண்டு இருக்கும்.
யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டும். நீங்கள் கொடுக்கும் வாக்கு உங்களுக்கே எதிராக திரும்பலாம்.
நிலம் வாங்குவது, வீடு வாங்குவதில் கவனம் செலுத்தவும். தவறாக முடியலாம்.
வயிற்று பிரச்சனைகள் ஏற்படலாம்.
பரிகாரம்: ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்று ஒரு முறை பூஜை செய்து வழிபடுங்கள். பழனி இடும்பன் கோவிலுக்கும் செல்லுங்கள்.
-
குருப்பெயர்ச்சி: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு என்ன பலன்? யாருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது? -
குருப்பெயர்ச்சி: கடகம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு முன்னேற்றம், மகிழ்ச்சி, புதிய வாய்ப்புகள்! -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications