விருச்சிகத்துக்கு அஷ்டமத்தில் குரு.. பணம் திடீர் அதிர்ஷ்டத்தால் யோகம்.. ஆனா இதுல மட்டும் கவனம் கவனம்
குருப்பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் விருச்சிக ராசிக்காரர்களுக்கான பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் மாற்றம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் அதன் தாக்கத்தை மாற்றம். அந்த வகையில் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசியினருக்கு அசுப பலன்களையும் தரக்கூடும்.

குரு சுபத்துவம் முழுமையான பொருந்திய கிரகம். 2025 ஆம் ஆண்டில் குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெறுகிறது. திருக்கணிதப்படி இரவு 10.30 குருப்பெயர்ச்சி நடக்கிறது. 2025 ஆம் ஆண்டு மே மாதம் ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார். அங்கிருந்து குருவின் பார்வை துலாம், தனுசு, கும்ப ராசியின் மேல் விழுகிறது. குரு பார்த்தால் கோடி நன்மை என்று கூறுவார்கள்.
அந்த வகையில் இந்த குருப்பெயர்ச்சியில் விருச்சிக ராசிக்காரர்கள் என்ன விதமான பலன்களை அனுபவிக்கப் போகின்றனர் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு அஷ்டமத்தில் குரு அமர்ந்திருப்பதால், இரட்டிப்பு செலவுகள் ஏற்படும். படிப்புக்கான செலவுகள் மிகவும் அதிகரிக்கும். உத்தியோகம், வியாபாரத்தில் கூடுதல் நேரம் பணிகள் செய்வதற்கான வாய்ப்பு ஏற்படும். அதிக உழைப்பு போட்டாலும் அதற்கேற்ற ஊழியம் கிடைக்கும். அஷ்டமத்தில் குரு இருப்பதால் மங்கள காரியங்கள் செய்வதற்கு முன்பு ஜோதிடத்தைப் பார்த்துவிட்டு செய்வது நல்லது.
அஷ்மடத்தில் குரு வரும்போது உங்களுக்கு மங்கள காரியங்கள் தடைபடுவதற்கான வாய்ப்புள்ளது. புதன் இணைவதால் கம்யூனிகேஷன் மூலமாக பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. சொன்ன விஷயங்களை சொல்லாதது போன்றும், சொல்லாத விஷயங்களை சொன்னது போன்ற சூழலும் உண்டாகும். அதனால் சில சங்கடங்கள் ஏற்படும்.
குழந்தைகள் விஷயத்தில் கவனம்
குழந்தைகளின் படிப்பு, குணாதியச விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். அஷ்டமத்தில் குரு இருக்கும்போது சில சங்கடங்கள் உண்டாகும். குழந்தைகளுக்கு படிப்பு, பாட்டு, கராத்தே போன்ற கூடுதலாக ஏதாவதொரு பயிற்சியைக் கொடுப்பது நல்லது. இல்லாவிடில் குழந்தைகள் மூலம் சில பிரச்சனைகள் உண்டாகும். வாய்வு பிடிப்பு உண்டாவதற்கான வாய்ப்புள்ளது.
ஆரோக்கியத்தில் கவனம்
விருச்சிக ராசியினருக்கு மறைமுகமான சில பிரச்சனைகள் வரக்கூடும். கருமுட்டை வளர்ச்சி தடைபடுவதற்கான வாய்ப்பு, மாதவிடாய் பிரச்சனை, மர்ம உறுப்புகளில் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. 2 ஆம் இடத்துக்கும், விரைய ஸ்தானத்துக்கும் குரு பார்வை விழுவதால் மருத்துவப் பிரச்சனைகள், மருத்துவச் செலவு, இழப்பு போன்ற நிலைகள் மாறும்.
கணவன், மனைவி
விரைய ஸ்தானம் துலாம் ராசியாக இருப்பதால், வாழ்க்கை துணை மூலம் நல்லது நடக்கும். அஷ்டமத்தில் குரு வரும்போது கணவன், மனைவிக்கான உறவு ரொம்ப வெளிப்படையாக இருக்க வேண்டும். அஷ்மடத்தில் குரு, 6 ஆம் இடத்தில் குரு வரும்போது பிரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. வாழ்க்கை துணையிடம் இருந்து வரக்கூடிய பேச்சுகள் உண்மையற்றதாக மாறும். அதனால், கணவன், மனைவி அமர்ந்து வெளிப்படையாக பேசிக் கொள்வது நல்லது.
பண வரவு அதிகரிக்கும்
சொல்ல முடியாத பலவித எண்ணங்கள் உங்களுக்குத் தோன்றும். அதனை வெளியில் சொல்ல முடியாததால் மன அழுத்தம், தைராய்டு பிரச்சனை போன்றவை உண்டாவதற்கான வாய்ப்புள்ளது. மன அழுத்தம் கூட குழந்தைகள், குழந்தைகள் பிறக்கும் உறுப்புகளை பாதிக்கும். பணத்திற்குப் பஞ்சமே இருக்காது. திடீரென எதிர்பாராத பணங்கள் உண்டாகும்.
மாற்றம்
புதிய முதலீடுகளை கண்டிப்பாக செய்வீர்கள். ஊர் விட்டு ஊர் செல்லும் வாய்ப்பு, வேலை மாற்றம், கிளை மாற்றம் உண்டாகும். குடும்ப ஸ்தானத்தில் குரு இருப்பதால் பெரிய பிரச்சனைகள் ஏற்படாது. பேசும் வார்த்தைகளில் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். ஆவணங்கள் சார்ந்த விஷயங்களை காணாமல் போவதற்கோ, மறந்து வைப்பதற்கோ வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும்.
வீடு வாங்கும் யோகம்
4 ஆம் இடத்தில் ராகு போவதால் வீடு இல்லாதவர்களுக்கு வீடு வாங்கும் யோகம் உண்டாகும். நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். ஆரோக்கியத்தை மட்டும் கவனித்துக் கொள்வது நல்லது. நிறைய தான தர்மங்களைச் செய்வது நல்லது. நெய், வெல்லம் தானமாக அளிப்பது நல்லது. பெருமாளுக்கு ஏகாதசி, துவாதசியன்று பொங்கல் வைத்து வழிபடுவது நல்லது.
வழிபட வேண்டிய தெய்வம்
மலையைத் தாங்கி இருக்கக்கூடிய பெருமாள் கோயிலுக்குச் செல்வது நல்லது. தான்தோன்றி மலை பெருமாள் கோயிலுக்குச் செல்வது நன்மை பயக்கும்.
மதிப்பெண்
விருச்சிக ராசியினருக்கு பொருளாதார ரீதியாக 85 சதவீதமும், மகிழ்ச்சி ரீதியாக 65 சதவீதமும் நல்லது நடக்கும்.












Click it and Unblock the Notifications