Guru Peyarchi: மீனம் ராசிக்கு பொற்காலம் பிறந்தாச்சு.. இனி அடிப்பது எல்லாமே சிக்ஸர் தான்

Subscribe to Oneindia Tamil

Guru Peyarchi 2026: 2026 ஆம் ஆண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. வரும் மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி, ஜூன் 2 ஆம் தேதி குருப்பெயர்ச்சி என பல்வேறு வலிமை மிகுந்த முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. குருப்பெயர்ச்சியில் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.

குருப்பெயர்ச்சி ஜூன் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஜூன் வரை மிதுன ராசியிலும், அதற்குப் பிறகு கடக ராசிக்கும் குரு பகவான் மாறுகிறார். அக்டோபர் 31 ஆம் தேதி கடகத்தில் இருந்து சிம்மத்திற்கு மாறுகிறார். இந்த காலகட்டத்தில் குரு உச்சமாக இருக்கக்கூடிய கடக ராசிக்கே குரு வருகிறார் என்பது தான் சிறப்பு. சனி பகவானால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு விடுதலை கொடுக்கக் கூடிய காலகட்டமாக இந்த குருப்பெயர்ச்சி இருக்கும்.

guru-peyarchi-what-kind-of-benefits-will-get-meenam-rasi-people-during-this-period

இந்த குருப்பெயர்ச்சி காலகட்டத்தில் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம் [Guru Peyarchi].

மீனம் ராசி பலன் (Meenam Rasi Palan)

மீனம் ராசிக்காரர்களுக்கு குருப்பெயர்ச்சி காலகட்டத்தில் திருமண யோகம் உண்டாகும். எல்லா சுபநிகழ்ச்சிகளும் நடக்கும் அற்புதமான காலகட்டம். பூமி தொடர்பான விஷயங்களை ஆரம்பிப்பது, இல்லையெனில் அதற்கான எண்ணம் தோன்றுவது போன்ற அமைப்பு உண்டாகும். வாழ்க்கையில் நிறைய அற்புதமான மாற்றங்கள் ஏற்படும்.

விடிவு காலம்

கஷ்டமான சூழ்நிலையில் இருந்திருந்தாலும் இனி அதிலிருந்து விடுபடக் கூடிய நல்ல அமைப்பு உள்ளது. உங்களுக்கு உகந்த நண்பர்களோ, வழிகாட்டியாக செயல்படும் நபர்களோ கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம். மீன ராசிக்கு சனி ஆரோக்கியத்தில் நிறைய பாதிப்புகளை சனி பகவான் அளித்திருந்தாலும் இனி விடிவு காலமாக இருக்கும். சுயமாக தொழிலைத் தொடங்கக்கூடிய யோகம் ஏற்படும்.

இனி ஏறுமுகம் தான்

ஜூலை மாதத்துக்குப் பிறகு ஒவ்வொரு அடியை நீங்கள் எடுத்து வைக்கும்போதும் நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள். மனக் குழப்பங்கள் அதிகமாக இருக்கும். உங்களுடைய வேலையில் மட்டும் கவனம் செலுத்திக் கொண்டிருந்தாலே நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் நிறைய ஏமாற்றங்களைப் பார்த்திருப்பீர்கள்.

சிக்கிக் கொள்ளாதீர்

குடும்ப உறுப்பினர்களே உங்களுக்கு சில ஏமாற்றங்களைக் கொடுத்திருப்பார்கள். அதிலிருந்து மீண்டு வந்து தெளிவடைவீர்கள். மீண்டும் அதற்குள் சென்று விழாமல் இருப்பது நன்மை பயக்கும். பண வரவு நன்றாக இருக்கும். தொழில் தொடங்கக்கூடிய அமைப்பு ஏற்படும். நிறைய கடன் பட்டிருப்பீர்கள். அந்த கடனிலிருந்து எப்படி வெளிவருவது, உங்களால் கடனை அடைப்பதற்கு என்னால் உதவி செய்ய முடியும் என்று யோசித்துக் கொண்டிப்பவர்கள் சுயமாக ஒரு தொழிலை எடுத்து நடத்தினால் அற்புதமான யோகம் உண்டாகும்.

தனி தொழில்

பார்ட்னர்ஷிப்பிற்குள் செல்லாமல் உங்கள் துணையுடன் சேர்ந்து தொழில் செய்தாலும் கவனமாக இருப்பது நல்லது. தனித்து உங்களை மட்டும் நம்பி தொழில் தொடங்குபவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். சொத்து, வண்டி, வாகனம் என்று நினைப்பவர்கள் ஜூலை மாதத்திற்குப் பிறகு அதற்காக திட்டமிடலாம். குரு உங்களுக்கு நல்ல திருமண வாழ்க்கையைத் தருவார்கள்.

வழிபாடு

திருமண யோகம் உண்டாகும். குழந்தை பாக்கியம் ஏற்படும். சொந்த வீடு நிலம் வாங்கும் யோகம், வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு. கடல் தாண்டி பிரயாணம் மேற்கொள்வது அனுகூலத்தைத் தரும். கோயில்களுக்குச் சென்று வருவது ஏற்றத்தை ஏற்படுத்தும். எந்தவொரு விஷயத்திலும் குழப்பத்திற்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. ஸ்ரீரங்கம், திருப்புலானி பெருமாள், முருகன் கோயில்களுக்குச் சென்று வழிபாடு செய்து வருவது வளர்ச்சி ஏற்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+