குரு பெயர்ச்சி பலன் 2023: தலைமை பதவி தேடி தரப்போகும் குரு பகவான்.. யார் வீட்டில் பணமழை பொழியும்
சென்னை: குரு பகவான் மேஷ ராசியில் பயணம் செய்கிறார். நவகிரகங்களில் சுப கிரகங்களில் தலை சிறந்த கிரகமாக விளங்குவது குரு பகவான்.
பிறந்த ஜாதகத்தில் எவ்வளவு பெரிய தோஷம் இருந்தாலும் குரு பார்த்தால் தோஷம் விலகி விடும். குரு பெயர்ச்சி பலன் நிறைய படித்திருந்தாலும் ஒருவரின் ஜாதகத்தில் எந்த வீட்டில் குரு இருந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம்.
குரு பகவான்: நவ கிரகங்களில் குரு பகவான் தனத்திற்கும் புத்திரம், பொருளாதார நிலை, வக்கீல் தொழில், கொடுக்கல் வாங்கல், பொது காரியம், தெய்வீக விஷயங்கள், பூர்வீக புண்ணியம் போன்றவைகளுக்கு காரகன். குரு ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்று இருந்தால் பொருளாதார நிலை பழக்க வழக்கம் மிகச் சிறப்பாக இருக்கும். தனுசு மீனம் ராசிகள் குருவிற்கு ஆட்சி வீடு. கடகத்தில் உச்சமும், மகரத்தில் நீசமும் பெறுவார். பொதுவாக குரு தனித்து இருப்பது நல்லது அல்ல. கோட்சார ரீதியாக ஒரு ராசியில் 1 வருடம் தங்கும் குரு பகவான் ஜென்ம ராசிக்கு, 2, 5, 7, 9,11 ஆகிய பாவங்களில் சஞ்சரிக்கும் போது நற்பலனை வழங்குவார்.

ஜென்ம குரு: ஜாதகத்தில் ஜென்ம குருவாக லக்னத்தில் அமர்ந்திருப்பார் குரு. பொதுவாகவே குரு ஜென்மத்தில் இருந்தால் சிறந்த பேச்சாளராக இருப்பார். நீண்ட ஆயுள் இருக்கும் நல்ல மனிதர்களின் நட்பு கிடைக்கும். பெரிய மனிதர்கள், விவிஐபிக்களின் தொடர்பு கிடைக்கும். குரு நல்ல நிலையில் இருந்தால் இந்த பலன் கிடைக்கும். அதே நேரத்தில் குரு பலம் இழந்து பாவிகளுடன் சேர்க்கை பெற்றிருந்தால் உடல்நிலை பாதிப்பு, காரிய தடைகள் ஏற்படும்.
குடும்ப குரு: குரு பகவான் இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து சுப கிரகத்தின் கூட்டணியோடு இருந்தால் பணவரவு அபரிமிதமாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையாக சந்தோசமாக மகிழ்ச்சியாக இருப்பார்கள். அந்த வீடே ஆனந்தமயமாக இருக்கும். அதே நேரத்தில் இரண்டாவது வீட்டில் குரு தனித்து இருந்தாலோ வறுமை வாட்டும் பணவருமானத்திற்கு தடுமாறுவார்கள். குரு பாவிகள் சேர்க்கை பெற்றோ பலம் இழந்தோ இருந்தால் பணக்கஷ்டம் இருந்தாலோ குடும்பத்தில் குருச்சேத்திரப்போர்தான். ஒரே சண்டையாகத்தான் இருக்குமாம்.
தைரிய ஸ்தான குரு: மூன்றாம் வீட்டில் குரு இருந்தால் செய்யும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். எதிலும் தனித்துவமாக இருப்பீர்கள். அதே நேரம் மூன்றாம் வீட்டில் குரு தனித்து இருந்தாலோ இளைய சகோதர தோஷம் கிடைக்கும். ஆண் கிரக சேர்க்கை இருந்தால் உடன் பிறந்தவர்களால் அனுகூலம் ஏற்படும். பாவிகள் சேர்க்கை பெற்றால் சகோதர தோஷம் ஏற்படும்.
சுக ஸ்தான குரு: சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் குரு இருந்தால் வசதி வாய்ப்பு கிடைக்கும். செல்வம், செல்வாக்கு அசையா சொத்து யோகம் நல்ல பழக்க வழக்கம் உயர்கல்வி யோகம் ஏற்படும். வீடு சொத்து சேர்க்கை உண்டாகும். நான்காம் வீட்டில் குரு தனித்து பலம் இழந்து இருந்தால் அசையாத சொத்து அமைய தடைகள் ஏற்படும்.
புத்திர தோஷம்: ஐந்தாம் வீட்டில் குரு பகவான் இருந்தால் நல்ல அறிவாற்றல் ஏற்படும். பரந்த மனப்பான்மை, பொதுக்காரிய ஈடுபாடு ஏற்படும். சிறந்த குடும்ப வாழ்க்கை அமையும், பெரியோர்களின் ஆசி கிடைக்கும். ஐந்தில் குரு தனித்து இருந்தால் புத்திர தோஷம் ஏற்படும். அதே நேரத்தில் சுப கிரகத்துடன் சேர்க்கை பெற்று இருந்தால் சிறப்பான புத்திரபாக்கியம் அமையும்.
ருண ரோக சத்ரு குரு: ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் குரு இருந்தால் எதிரிகளை வெல்லும் அமைப்பு ஏற்படும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். நோய்கள் நீங்கும் நீண்ட ஆரோக்கியம் அமையும், சிறப்பான குடும்ப வாழ்க்கை ஏற்படும். அதே நேரம் ஆறாம் வீட்டில் குரு பலம் இழந்து இருந்தால் வயிறு கோளாறு ஏற்படும். பெரியவர்கள் சாபத்தால் பாதிப்பு ஏற்படும்.
களத்திர குரு: ஏழாம் வீடு களத்திர ஸ்தானம். ஜென்ம லக்னத்தில் இருந்து குரு ஏழாம் வீட்டில் சுபர் சேர்க்கை சுபர் பார்வையுடன் இருந்தால் மன வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். சிறப்பான குடும்ப வாழ்க்கை அமையும். நல்ல அழகான வசதியான பெண் மனைவியாக அமைவாள். அதே நேரம் ஏழாம் வீட்டில் ஆட்சி உச்சம் பெற்றால் கேந்திராதிபதி தோஷம் உண்டாகும். பாவிகள் சேர்க்கை பெற்றால் மண வாழ்க்கையில் பிரச்சினை எற்படும். திருமணம் நடந்தாலும் மணமுறிவு ஏற்படும்.
அஷ்டம குரு: எட்டாம் வீடான அஷ்ட ஸ்தானத்தில் குரு இருந்தால் நீண்ட ஆயுள், ஆரோக்கியம் ஏற்படும். திடீர் பணவரவு கிடைக்கும். வாழ்க்கை அமைதியாக இருக்கும். அதே நேரம் குரு தனித்தோ பாவிகள் சேர்க்கை பெற்றோ இருந்தாலே பலம் இழந்து இருந்தாலே நோய் பாதிப்பு ஏற்படும். பித்ரு சாபத்தினால் மன அமைதியில்லாத நிலை ஏற்படும்.
பாக்ய ஸ்தான குரு: ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் குரு பகவான் இருப்பது நன்மை தரும் அமைப்பு. தாராளமான தன வரவு கிடைக்கும். பணம் மழையாக பொழியும். பூர்வீகத்தால் அனுகூலம் கிடைக்கும். தந்தைக்கு நீண்ட ஆயுள், பொதுப்பணியில் ஆர்வமாக இருப்பீர்கள். பெரியோர்களின் ஆசி கிடைக்கும்.
தொழில் குரு: தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் குரு இருந்தால் உயர்பதவி யோகம் தேடி வரும். நேர்மையானவராக இருப்பீர்கள். பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். தனித்து இருந்தால் தடைகள் அதிகரிக்கும். குரு கிரக சேர்க்கை பெற்று பலம் இழக்காமல் இருப்பது நல்லது.
லாப குரு: லாப ஸ்தானமான 11ஆம் வீட்டில் குரு பகவான் இருந்தால் தாராளமான தன வரவு கிடைக்கும். கோடி கோடியாக பணம் வரும். உடன் பிறந்தவர்களின் மூலம் வசதி வாய்ப்பு கிடைக்கும். சமூகத்தில் புகழ் கவுரவம் கிடைக்கும். குழந்தைகள் மூலம் அனுகூலம் கிடைக்கும். சிறந்த குடும்ப வாழ்க்கை அமையும். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்.
விரைய குரு: 12ஆம் வீடு அயன ஸ்தயன ஸ்தானம். 12 ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் குரு இருந்தால் வீண் செலவுகள் ஏற்படும். குரு உங்கள் ராசிக்கு 6 அல்லது 8ஆம் அதிபதியாக இருந்தால் நல்ல பலன்களை தருவார். 12ஆம் வீட்டில் குரு அமர்ந்து சுபரான புதன், சுக்கிரன் பார்வை பெற்றால் நிம்மதியான இல்லற வாழ்க்கை அமையும். சுப செலவுகள் அமையும். கண் பார்வை பிரச்சினைகள் தீரும்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications