குரு புஷ்ய யோகம்: லட்சுமி குபேர பூஜை செய்தால் சகல ஐஸ்வர்யமும் பெருகும்
பூசம் நட்சத்திரம் மிகச்சிறப்பு வாய்ந்த நட்சத்திரம், சனியின் ஆதிக்கம் கொண்ட இந்த நட்சத்திரத்தில்தான் வியாழக்கிழமை நாளன்று குபேரன் பிறந்திருக்கிறார். வியாழக்கிழமையும் பூசம் நட்சத்திரமும் இணைந்து வரும் ந
சென்னை : வியாழக்கிழமை குருபகவானுக்கு உகந்த நாள். பூசம் நட்சத்திரம் சனியின் ஆதிக்கம் கொண்ட நட்சத்திரம். செல்வத்திற்கு அதிபதியான குரு பகவான் வியாழக்கிழமை பூசம் நட்சத்திரத்தில் அவதரித்துள்ளார். இதுபோல வியாழக்கிழமையும் பூசம் நட்சத்திரமும் இணைந்து வரும் நாள் குரு புஷ்ய யோக நாளாகும். வரும் வியாழக்கிழமை இத்தகைய சிறப்பு வாய்ந்த நல்ல நாள் வருகிறது. இந்த சுபமான நாளில் லட்சுமி குபேர பூஜை செய்தால் சகல செல்வ வளமும் பெருகும் என்பது நம்பிக்கை.
ஆள் செய்யாததை நாள் செய்யும் என்பார்கள். பொதுவாகவே நல்ல காரியம் செய்யும் போது நாள் நட்சத்திரம் பார்த்து செய்வார்கள். சில நாட்களில் சில நட்சத்திரங்கள் இணைவது சில நன்மைகளை கொடுக்கும். அப்படிப்பட்ட நல்ல நாள்தான் குருவாரமாகிய வியாழக்கிழமையும் பூசம் நட்சத்திரமும் இணைந்த நன்னாளாகும்.
இந்த நாள் குரு புஷ்ய அமிர்தயோக காலமாகும். நம்முடைய எண்ணங்களை பிரார்த்தனைகளை அன்னை மகாலட்சுமியிடம் கூற ஏற்ற நாளும் நேரமும் வரும் வியாழக்கிழமை இணைந்து வந்துள்ளது.

முருகனுக்கு உகந்த பூசம்
பொதுவாகவே பூச நட்சத்திரம் சிறப்பு வாய்ந்தது. அனைத்து மகான்களையும் வழிபட ஏற்ற நட்சத்திரம் பூசம். தை மாதத்தில் வருகிற பூசம் நட்சத்திரம் முருகப்பெருமானுக்கு விஷேசமானது. பழனிமலையில் போகர் சித்தரை வழிபட ஏற்ற நட்சத்திரம் பூசம். சித்தர்களும், ஞானிகளும் ஜீவ சமாதி அடைய தேர்வு செய்யும் நட்சத்திரம் பூசம். இத்தகைய சிறப்பு வாய்ந்த பூசம் நட்சத்திரம் சனிக்கிழமையுடனோ அல்லது வியாழக்கிழமையுடனோ இணைந்து வருவது சிறப்பு. அன்றைய தினம் முருகப்பெருமான் ஆலயத்திற்கு சென்றோ, சித்தர்களின் ஜீவ சமாதிக்கு சென்றோ வழிபடலாம்.

குரு புஷ்ய யோகம் நல்ல நாள்
மே 28ஆம் தேதி வியாழக்கிழமை பூசம் நட்சத்திரம் இணைந்த குரு புஷ்ய யோகம் வருகிறது. அதிகாலை 5.45 மணி முதல் காலை 7.27 மணிவரை பூஜை செய்யவும் நல்ல காரியங்கள் செய்யவும் ஏற்ற நேரமாகும். இதே போல இந்த ஆண்டின் இறுதியில் டிசம்பர் 31ஆம் தேதி மாலை 7.49 மணி முதல் ஜனவரி 1,2021 காலை 6.34 மணிவரை குரு புஷ்ய யோக காலமாகும்.

லட்சுமி குபேர பூஜை
இந்த நாளில் வீட்டின் பூஜை அறையில் விளக்கேற்றி குபேரன் படத்திற்கு முன்பாக காய்ச்சிய பாலில் ஏலாக்காய், கிராம்பு, சர்க்கரை கலந்து நைவேத்தியம் செய்ய வேண்டும். குபேரனுக்கு இனிப்பு பிடிக்கும். இனிப்பு நைவேத்தியம் செய்வதால் குபேரன் மகிழ்ச்சியோடு செல்வத்தை வாரி வழங்குவார்.

புது தொழில் தொடங்கலாம்
குரு புஷ்ய யோக நாளில் புது கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டலாம். புது மந்திரம் கற்றுக் கொள்ளலாம். குருவிடம், ஆசிரியரிடம் புதிய பாடம் கற்றுக்கொள்ளலாம். புதிய தொழில் தொடங்கலாம். தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த நகைகள் வாங்கலாம் இதனால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். செல்வ வளமும் ஐஸ்வர்யமும் பெருகும். புது வாகனம் வாங்கலாம். புது வீடு, கடை வாங்க அட்வான்ஸ் கொடுக்கலாம்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications