இனி தொட்டதெல்லாம் ஹிட்டு.. குரு வக்ர நிவர்த்தியால் விருச்சிகம் ராசிக்கு பொற்காலம்
குரு வக்ர நிவர்த்தி: 2025 ஆம் ஆண்டில் சனி, குரு, ராகு கேது, சுக்கிரன், செவ்வாய், புதன் உள்ளிட்ட முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் உள்ளன. அந்த வகையில் பிப்ரவரி 4 ஆம் தேதி குரு வக்ர நிவர்த்தி நிகழ உள்ளது. இது விருச்சிக ராசியில் ஏற்படுத்தப் போகும் தாக்கத்தை இந்தத் தொகுப்பில் காணலாம்.
குரு தற்போது ரிஷப ராசியல் வக்ரமாக வீற்றுருக்கிறார். பிப்ரவரி 4 ஆம் தேதி குரு வக்ர நிலையில் இருந்து நிவர்த்தி ஆகி இயல்பு நிலைக்கு திரும்புகிறார். நவ கிரகங்களில் முழு சுப கிரகமாக குரு உள்ளார். குரு தனம், குடும்பம், வாக்கு, பூர்வ புண்ணிய ஸ்தானம் ஆகியவற்றுக்கு காரகனாக இருக்கிறார். நம் அன்றாட வாழ்க்கையில் குரு பயணிப்பதால் அவரது வக்ர நிவர்த்தி முக்கியத்துவம் வாய்ந்தது.

விருச்சிக ராசிக்கு குரு பகவான் ஏழாம் வீட்டில் வக்ர நிலையில் பலம் இழந்துள்ளார். அங்கு அவர் மீண்டும் பலமடையப் போகிறார். உங்கள் ராசிக்கு குரு எப்போதுமே அற்புதமான பலன்களை கொடுப்பவர். உங்கள் ராசியதிபதியான செவ்வாய்க்கு குரு அதிபதி. இரண்டு, ஐந்தாம் வீடுகளுக்கு அதிபதியான குரு ஏழாம் வீட்டில் பலம் இழந்திருப்பதால் நிறைய பிரச்னைகளை எதிர்கொண்டிருப்பீர்கள்.
இதே காலத்தில் உங்கள் ராசியில் அர்தாஷ்டம சனியின் ஆதிக்கமும் அதிகமாக உள்ளது. அதனால் பொருளாதாரம், ஆரோக்கியம் எல்லாவற்றிலும் கடுமையான பின்னடைவு ஏற்பட்டிருக்கும். தற்போது குரு பலமடைவதால் உங்களின் பிரச்னைகள் தீரப்போகின்றன. இந்த காலம் உங்களுக்கு பொற்காலம். பண வரவு திருப்தியாக இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு அந்த தடைகள் நீங்கி திருமணம் நடைபெறும்.
இந்த காலத்தில் திருமணத்துக்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டால் அதில் வெற்றி கிடைக்கும். காதல் உறவு வெற்றிகரமாக திருமணத்தில் முடியும். குடும்பத்தில் இருந்த மனகசப்புகள் நீங்கி மகிழ்ச்சி பொங்கும். பூர்வீக சொத்தில் இருந்த தடைகள் நீங்கும். நிலம், வீடு சம்பந்தப்பட்ட வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும்.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்பு நன்றாக உள்ளது. குழந்தைகளின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். படித்து முடித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் உங்கள் குழந்தைக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். குழந்தைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பார்கள். குழந்தைகள் பற்றிய கவலைகள் மொத்தமாக நீங்கி அவர்களைப் பற்றி பெருமைப்படும் காலமாக இது இருக்கும்.
குரு பகவான் பார்வை உங்கள் சொந்த ராசியின் மீதே விழுகிறது. அதனால் அர்தாஷ்டம சனியின் ஆதிக்கம் குறையும். தேக ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். குரு பார்வை மூன்றாம் இடத்தில் விழுவதால் சகோதரர், பங்காளி வழியில் ஆதாயம் ஏற்படும். முக்கியமாக லாப வீட்டில் குரு பார்வை விழுகிறது. பணம் பற்றிய கவலையால் மனம் மிகுந்த வேதனையில் இருக்கும்.
புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். தொழில் விருத்தியடையும். கூட்டு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் மேல் அதிகாரி மற்றும் உடன் பணியாற்றுவோரின் ஆதரவு இருக்கும். கையில் பணமே தங்கவில்லை என்போர் அதிக லாபத்தால் முதலீடு, சேமிப்பு என்று பண வரவால் திருப்தியடைவார்கள்.
குரு கவசம் பாடி அவரை மனதார வணங்குங்கள். குரு வக்ர நிவர்த்தியின்போது விநாயகர் மற்றும் முருகன் வழிபாடு செய்துவிட்டு அன்னதானம் செய்யுங்கள். இதன் மூலம் உங்களுக்கு எல்லாவற்றிலும் தடைகள் நீங்கி கோடீஸ்வர யோகம் பெறுவீர்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications