பணம், திருமணம், தொழிலில் அதிர்ஷ்டம்.. குரு வக்ர நிவர்த்தியால் கடகத்துக்கு அடிச்சது யோகம்
குரு வக்ர நிவர்த்தி: 2025 ஆம் ஆண்டில் சனி, குரு, ராகு கேது, சுக்கிரன், செவ்வாய், புதன் உள்ளிட்ட முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் உள்ளன. அந்த வகையில் பிப்ரவரி 4 ஆம் தேதி குரு வக்ர நிவர்த்தி நிகழ உள்ளது. இது கடக ராசியில் ஏற்படுத்தப் போகும் தாக்கத்தை இந்தத் தொகுப்பில் காணலாம்.
குரு தற்போது ரிஷப ராசியல் வக்ரமாக வீற்றிருக்கிறார். பிப்ரவரி 4 ஆம் தேதி குரு வக்ர நிலையில் இருந்து நிவர்த்தி ஆகி இயல்பு நிலைக்கு திரும்புகிறார்.. குரு தனம், குடும்பத்துக்கு காரகனாக இருக்கிறார். நம் அன்றாட வாழ்க்கையில் குரு பயணிப்பதால் அவரது வக்ர நிவர்த்தி முக்கியத்துவம் வாய்ந்தது.

குரு கடக ராசியில் பூச நட்சத்திரத்தில் உச்சத்தை தொடுபவர். குரு தன காரகன், பொன்னுக்கு அதிபதி, குழந்தை பாக்கியத்தை, திருமணத் தடையை நீக்க கூடியவராகவும், குழந்தை பாக்கியத்தை தருபவராகவும் குரு பகவான் இருக்கிறார். நீங்கள் வாழ்க்கையில் வளர வேண்டும் என்றால் குருவின் ஆசி வேண்டும். இந்த குரு வக்ர நிவர்த்தியடைவதால் உங்களுடைய ராசி நட்சத்திரத்தின் அடிப்படையில் 11 வது இடத்தில், உங்களுடைய ராசியில் லாப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார்.
இந்த லாப ஸ்தானம் உங்களுக்கு பண வரவைக் கொடுக்கும். கடந்த 6 மாதங்களாக எதிர்பார்த்துக் காத்திருந்து ஏமாற்றத்தைக் கொடுத்த காலமாக இருந்திருக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்காமல் தவித்திருப்பீர்கள். குரு வக்ர நிவர்த்தி அடைவதால் அனைத்துப் பிரச்னைகளும் உங்களுக்கு நீங்கும். லாபத்தை நோக்கி செய்யக் கூடிய விஷயங்கள் அனைத்தையும் செய்வீர்கள்.
தொழிலில் முன்னேற்றமும், லாபமும் உங்களுக்கு இனி ஏற்படும். வளர்ச்சிப் பாதைக்கான வழியை நீங்கள் செய்ய ஆரம்பிப்பீர்கள். நீண்ட நாட்களாக திருமணமாகாமல் காத்திருந்தவர்களுக்கு திருமணம் நடப்பதற்கான யோகம் ஏற்படும். குழந்தைப் பேறு கிடைக்கும். மக்கள் செல்வத்தினால் உங்களுக்கு பலன் கிடைக்கும்.
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்வதற்கான சூழலை இந்த வக்ர நிவர்த்தி ஏற்படுத்தி தரும். மிதுனத்திற்குள் குரு பகவான் வந்து செல்வதால் அனைத்து விதமான நல்ல பலன்களையும் பெறுவீர்கள். பெரிய விடுதலை உணர்வை உங்களுக்கு தருவதற்கு குரு பகவான் தரப் போகிறார். பூச நட்சத்திரத்தில் குரு பகவான் உச்சத்திற்குப் போவதால் என்பதால் சனி தொடர்பான நட்சத்திரக்காரர்களுக்கு சூப்பர் பலன்கள் கிடைக்கும்.
சனி தொடர்பான நட்சத்திரம் என்பது பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும் காலமாக இருக்கும். திருமண யோகம் உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உயர்கல்வி பெறுவதற்கான வாய்ப்பு உண்டாகும். வெளிநாட்டு வர்த்தக தொடர்புகளால் லாபத்தைக் காண்பீர்கள்.
புதிய முதலீடுகளைச் செய்து மகிழ்வீர்கள். நிலம் தொடர்பான விஷயங்களில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உணவுப் பொருள் விற்பனை செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஹோட்டல் தொடங்குவது, ஜவுளித் துறையில் கால் பதிப்பவர்களுக்கு வளர்ச்சி, முன்னேற்றத்துக்கான காலமாக இருக்கும். ஏஐ துறையில் முதலீடு செய்பவர்கள் சிறப்பான பலன்களை காண்பீர்கள்.
அரசியலில் இருப்பவர்கள் நல்ல பதவிகளைப் பெறுவீர்கள். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். சேமிப்பு, முதலீடுகளில் அதிக லாபத்தைக் காண்பீர்கள். பண வரவு உண்டாகும். புதிய வேலை, வியாபாரம், தொழில் செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். அதன் மூலம் சிறப்பான எதிர்காலம் உண்டாகும்.


Click it and Unblock the Notifications
