மிதுனத்துக்கு பணம் கொட்டும்.. குரு வக்ர நிவர்த்தியால் கிடைக்கப் போகும் சூப்பர் பலன்கள்
குரு வக்ர நிவர்த்தி: 2025 ஆம் ஆண்டில் சனி, குரு, ராகு கேது, சுக்கிரன், செவ்வாய், புதன் உள்ளிட்ட முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் உள்ளன. அந்த வகையில் பிப்ரவரி 4 ஆம் தேதி குரு வக்ர நிவர்த்தி நிகழ உள்ளது. இது மிதுன ராசியில் ஏற்படுத்தப் போகும் தாக்கத்தை இந்தத் தொகுப்பில் காணலாம்.
குரு தற்போது ரிஷப ராசியல் வக்ரமாக வீற்றுருக்கிறார். பிப்ரவரி 4 ஆம் தேதி குரு வக்ர நிலையில் இருந்து நிவர்த்தி ஆகி இயல்பு நிலைக்கு திரும்புகிறார்.. குரு தனம், குடும்பத்துக்கு காரகனாக இருக்கிறார். நம் அன்றாட வாழ்க்கையில் குரு பயணிப்பதால் அவரது வக்ர நிவர்த்தி முக்கியத்துவம் வாய்ந்தது.

புதனின் சாரத்தைக் கொண்ட மிதுன ராசிக்குள் மிருகசீரிஷம் நட்சத்திரமும், திருவாதிரை, புனர்பூசம் நட்சத்திரமும் உண்டு. மிருகசீரிஷம் செவ்வாயின் நட்சத்திரம். திருவாதிரை ராகுவின் நட்சத்திரம். புனர்பூசம் குருவின் நட்சத்திரம். இந்த 3 நட்சத்திரத்தை தொடர்புடைய லக்கினகாரர்களுக்கும், மிதுன ராசிக்காரர்களுக்கும், வரும் பிப்ரவரி 5 ஆம் தேதியில் இருந்து குரு வக்ர நிவர்த்தியால் கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.
குரு உங்களுடைய ராசிக்கு 12 ஆம் இடத்தில் இருக்கிறார். குரு பகவான் வக்ர நிவர்த்தியாகி நேர்க்கோட்டுக்கு வருவதால் உங்களுக்கு நீண்ட காலமாக வர வேண்டிய தொகைகள், வெளிநாட்டில் இருந்து வர வேண்டிய நபர்கள், வெளிநாட்டுக்குச் செல்லும் வாய்ப்புகளுக்கான தடை போன்ற சங்கடங்கள் அனைத்தும் இந்த காலத்தில் நீங்கப் போகிறது.
உங்களிடம் இருந்து கடன் வாங்கியவர்களால் பல்வேறு சங்கடங்களை எதிர்கொண்டிருப்பீர்கள். அனைவரும் கடனைத் திருப்பி தரும் காலமாக அமையப் போகிறது. மனப்போராட்டத்துக்கு விடிவு காலம் வரப் போகிறது. ஆனாலும், குரு பகவான் மே மாதம் பெயர்ச்சியாகி உங்களுடைய லக்கினத்திற்குள்ளும், ராசிக்குள்ளும் வரப் போகிறார்.
பணத்தைப் பற்றிய தேவை குறித்த எண்ணங்கள் மேலோகும். 12 ஆம் இடம் என்பது மறைவு ஸ்தானமாக இருப்பதால் உங்களிடம் இருந்து பணம், கடன் வாங்கியவர்கள் மறைந்திருப்பார்கள். அந்த பணம் அனைத்தும் உங்களுக்கு வந்து சேரும். அதேபோல, திருமண தடைகள் நிவர்த்தி ஆகும். நீண்ட நாட்களாக குழந்தைப் பேறுக்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும்.
குரு உங்களுடைய பத்தாம் இடத்தில் தொடர்புடையவர். இதனால், தொழில், வேலை சார்ந்த விஷயங்களில் பதவி உயர்வு, இடமாற்றம், சம்பள உயர்வில் தடைகளைச் சந்தித்து வந்திருப்பீர்கள். இதுதொடர்பான மனக் கவலைகள் அனைத்தும் நீங்கும். நீங்கள் விரும்பிய இடமாறுதல்கள் உங்களுக்கு கிடைக்கும். உங்களுடைய உழைப்பிற்கேற்ற சம்பள உயர்வைப் பெறுவீர்கள். உயரிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும் அருமையான காலமாக இருக்கும்.
புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை அமையும். அலுவலகம், தொழிலில் இருந்து வந்த வேலைப் பளுக்கள் குறையும். ஓடிக்கொண்டே இருக்கிறேன் ஆனால் என்ன செய்கிறேன் என்று சொல்பவர்களுக்கெல்லாம் மனதில் ஒரு தெளிவு பிறக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. காலை உடற்பயிற்சியைத் தொடர்வது நன்மை பயக்கும். இல்லையெனில் வயிறு, கால் தொடர்பான பிரச்னைகள் வரும்.
கோசாலைகளுக்குச் சென்று பசு மாடுகளுக்கு வாழைப்பழம் தருவது நற்பலன்களைத் தரும். பேனா, பென்சில் உபகரணங்களை ஏழைக் குழந்தைகளுக்கு அளிப்பது நல்லது. புனர்பூச நட்சத்திரத்தில் குரு தன்னுடைய சாரத்தில் வைத்துள்ளதால் குரு உங்களுடனேயே இருப்பார். அதனால், பணத்தை வைத்து தொழில் தொடங்கக்கூடிய யோகம் வரும். கடையை, வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உரிய ஆலோசனை பெற்று செய்தால் உங்களுடைய வாழ்க்கைத் தரம் மேம்படும். குரு உங்களுக்கு நல்ல ஒரு வசதியையும், வாய்ப்பையும் வழங்கவுள்ளார்.
-
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்!












Click it and Unblock the Notifications