Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரு வக்ர நிவர்த்தி: குபேர யோகம் பெறும் ராசிகள் எவை தெரியுமா?.. உங்க ராசி இருக்கானு பாருங்க

Subscribe to Oneindia Tamil

குரு வக்ர நிவர்த்தி பலன்: குரு வக்ர நிவர்த்தி பிப்ரவரி நான்காம் தேதி நிகழ்வதால் சில ராசிகளுக்கு குபேர யோகத்தால் அதிர்ஷ்டம் கொட்டப் போகிறது. எந்த ராசிகள் குபேர யோகத்தை அனுபவிக்கப் போகின்றன. என்னவிதமான பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்..

2025 ஆம் ஆண்டில் சனி, குரு, ராகு கேது, சுக்கிரன், செவ்வாய், புதன் உள்ளிட்ட முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் உள்ளன. அந்த வகையில் பிப்ரவரி 4 ஆம் தேதி குரு வக்ர நிவர்த்தி நிகழ உள்ளது. சுப பலன்களை அள்ளிக் கொடுக்கும் கிரகமாக இருப்பவர் குரு பகவான். கல்வி, திருமணம், குழந்தை பாக்கியம், செல்வம், லாபம் என சகல செல்வங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். ஒருவருடைய ஜாதகத்தில் குரு நல்ல நிலையில் இருந்தால் அவர்களுடைய வாழ்க்கையில் அனைத்து விதமான செல்வங்களையும், வெற்றிகளையும் பெறுவார்கள்.

guru vakra nivarthi lucky zodiac signs

குரு வக்ர நிவர்த்தி என்பது ஜோதிடத்தில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. குரு தற்போது ரிஷபம் ராசியல் வக்ரமாக வீற்றிருக்கிறார். பிப்ரவரி 4 ஆம் தேதி குரு வக்ர நிலையில் இருந்து நிவர்த்தி ஆகி இயல்பு நிலைக்கு திரும்புகிறார். நவ கிரகங்களில் முழு சுப கிரகமாக குரு உள்ளார். குரு தனம், குடும்பம், வாக்கு, பூர்வ புண்ணிய ஸ்தானம் ஆகியவற்றுக்கு காரகனாக இருக்கிறார். நம் அன்றாட வாழ்க்கையில் குரு பயணிப்பதால் அவரது வக்ர நிவர்த்தி முக்கியத்துவம் வாய்ந்தது.

குருவின் வக்ர நிவர்த்தி 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை உண்டாக்கும். சில ராசிகளுக்கு அபரிமிதமான பலன்களை அள்ளிக் கொடுப்பார். குடும்பத்தில் மகிழ்ச்சி, வேலைகளில் வெற்றி என பல்வேறு நற்பலன்களைப் பெறப்போகும் அதிர்ஷ்ட ராசிகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்: குரு வக்ர நிவர்த்தி மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல பல பலன்களை அளிக்கப் போகிறது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வேலை, தொழில், வியாபாரத்தில் தனித்துவமான இடத்தையும், நற்பெயரையும் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். சுப நிகழ்ச்சிகளை செய்து மகிழ்வீர்கள். அமைதியான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையாக இருக்கும். பண வரவு அதிகரிக்கும். சேமிப்பு முதலீடுகள் மூலமாக லாபத்தைக் காண்பீர்கள். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

கன்னி: குரு வக்ர நிவர்த்தியானது கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கப் போகிறது. உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கணவன், மனைவி, குழந்தைகளுக்கிடையே உறவு பலப்படும், மகிழ்ச்சி பொங்கும். ஆன்மிக பயணம், தெய்வ வழிபாடுகளில் நாட்டம் அதிகரிக்கும். உங்களுடைய பிள்ளைகள் நல்ல செய்திகள் வந்து சேரும். செல்வத்தைக் குவிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். அதிர்ஷ்ட தேவதை உங்கள் பக்கம் நிற்பதால் அனைத்து செயல்களிலும் வெற்றியைக் காண்பீர்கள்.

விருச்சிகம்: குரு வக்ர நிவர்த்தி அடைவதால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு லாபத்தை உண்டாக்கும். சுப காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகம் செய்பவர்கள் தங்களுடைய துறையில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். சமுதயாத்தில் உங்களுடைய மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக திருமணத்துக்காக காத்திருந்தவர்களுக்கு திருமணம் நடக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். சுபமான நல்ல பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

கும்பம்: குரு வக்ர நிவர்த்தி கும்ப ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை அள்ளித் தரும். செல்வ செழிப்புக்கு பஞ்சம் இருக்காது. பண வரவு அதிகரிக்கும். வேலை, தொழில், வியாபாரத்தல் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். நீங்கள் எதிர்பார்த்த வேலைகள் உங்களுக்கு கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவும் உங்களுக்கு இருப்பதால் எடுத்த காரியங்களில் வெற்றியைக் காண்பீர்கள். தைரியம், தன்னம்பிக்கை பிறக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+