Guru Vakram: மீன ராசிக்கு நல்ல நேரம் ஸ்டார்ட்.. இனி தொட்டதெல்லாம் சக்சஸ்.. என்ஜாய்
குரு வக்கிரப் பெயர்ச்சி 2025: வரும் நவம்பர் 12 ஆம் தேதி மிதுன ராசியில் குரு வக்கிரமாகி கடகத்துக்குச் செல்கிறார். 4 மாதங்களுக்கு குரு வக்கிரமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் மீன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் நன்மைகள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
குரு வக்கிரமாவது அவ்வளவு நன்மையான காலகட்டம் இல்லை. ஜாதகத்தில் இயல்பாகவே ஒரு சில கிரகங்கள் வக்கிரமாக இருக்கும். ஜாதகத்தில் குரு வக்கிரமாக இருந்தால் கண்டிப்பாக நடக்க வேண்டிய பல நன்மைகள் நடக்கும். 2025 நவம்பர் 12 ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 11 ஆம் தேதி வரை 4 மாதங்களுக்கு குரு வக்கிரமாக இருக்கப் போகிறார்.

மிதுன ராசியில் குரு வக்கிரமாக மாறுகிறார். அங்கிருந்து கடகத்துக்குச் சென்று அதிசாரமாக புனர்பூச நட்சத்திரத்திற்குச் சென்று அங்கிருந்து மீண்டும் மிதுனத்துக்கு வருகிறார். குரு பகவான் வக்கிரமாக மாறும்போது புதிய புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும். 2027 மே மாதத்திற்குள் கார்டியோ தொடர்பான சிகிச்சையில் புரட்சி ஏற்படும். புதிய மருத்துவம் கண்டுபிடிக்கப்படும்.
குரு வக்கிரமாகும் இந்த காலகட்டத்தில் துலாம், தனுசு, கும்பம் ஆகிய 3 ராசிகளுக்கு யோகமான காலகட்டமாக இருக்கும். நீண்ட நாட்களாக திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு உண்டாகும். மிகப்பெரிய நல்ல விஷயங்கள் நடக்கும். மிதுனம், கும்பம், தனுசு, துலாமில் கிரகம் வக்கிரமாக இருந்தால் நன்மை பயக்கும். இதே இடத்தில் சுய ஜாதகத்திலேயே சனி வக்கிரமாக இருந்தால் 100 சதவீதம் நன்மைகள் நடக்கும்.
இந்த குரு வக்கிரப் பெயர்ச்சி காலகட்டத்தில் மீன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மீனம்
மீன ராசி அல்லது லக்கினம் சார்ந்தவர்களுக்கு இதுவரை மறதி ஜாஸ்தியாக இருந்திருக்கும். ஏதோ ஒரு மன குழப்பம், தெரியாத பயம் இருந்து கொண்டே இருந்திருக்கும். தேவையில்லாத எண்ணங்கள், மறதி, குழப்பம் போன்றவையால் பாதிப்புகளைச் சந்தித்திருப்பீர்கள். ஆனால், இப்போது 4 ஆம் இடத்தில் குரு வக்கிரமாவதால் அதிபயங்கரமான புத்திக்கூர்மை, கணக்குப் போடக்கூடிய தன்மை உண்டாகும்.
திருமண யோகம்
நல்ல வீடு அமையும் பாக்கியம் உண்டு. சொந்தபந்தங்கள் நெருங்கும் பாக்கியம் உள்ளது. சொந்தத்தில் திருமணம் நடக்கும். மன விரக்தி இருக்கும் நபர்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கக்கூடிய ஸ்தானம் உண்டாகும். உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு உற்சாகம் கொடுப்பீர்கள். தேவையே இல்லாத பிரச்சனைகளில் இருந்து வெளிவரும் யோகம் உண்டாகும். எல்லாவற்றிலும் தலையிட தேவையில்லை என்று புரிந்து கொள்வீர்கள்.
சொகுசு வாகனம்
வீட்டுக்குத் தேவையான சொகுசான வாகனங்கள், சொகுசு மெத்தை, கட்டில் வாங்கும் யோகம் உண்டாகும். பெரியவர்களுக்கு இருக்கு பிரஷர், சர்க்கரை போன்ற பிரச்சனைகள் இருக்கும் நிலையில், பார்த்துக் கொள்ள முடியவில்லை என்று கவலைப்படுபவர்களுக்கு பெரியவர்களுடன் 5 மாதத்திற்கு சேர்ந்திருக்கும் சூழல் உருவாகும்.
சொந்த ஊர் பறக்கப் போறீங்க
வெளியூர், வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு சொந்த ஊர் திரும்பி செல்லும் யோகம் உண்டாகும். தேவையில்லாத பயங்களை உதறித் தள்ளுவது நல்லது. எந்த சொந்தம் பிரச்சனை என்று நினைத்தீர்களோ அதே சொந்தத்தால் வீடு அமையும் வாய்ப்பு வரும். விற்பனை செய்யக்கூடிய தொழிலை வாங்கக்கூடிய பாக்கியம் உண்டாகும்.
தொழில்
ரியல் எஸ்டேட், டாக்குமென்டேஷன், பெட்ரோல் பங்க், எண்ணெய் சார்ந்த தொழில் செய்யும் யோகம் உண்டாகும். மீனத்திற்கு நல்ல நேரமாக இருக்கும். அலைச்சல், சோம்பல், தேவையில்லாத மறதி, அவசரத் தன்மை, ஆரோக்கிய குறைபாடு போன்றவற்றில் இருந்து விடுபடக்கூடிய ஸ்தானம் உண்டாகும். பெரிய உற்சாகம் ஏற்படும். நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும்.
வழிபாடு
குழந்தைகளை மட்டும் நல்ல ஒழுக்கத்தோடு வளர்த்துவதில் கவனமாக இருக்க வேண்டும். சந்தோஷம், பொருளாதாரம் என இரண்டிலுமே 85 சதவீதம் நன்மைகளைப் பெறும் காலகட்டமாக இருக்கும். ரங்கநாதப் பெருமான் அல்லது கள்ளழகர் வழிபாடு செய்வது நல்ல மாற்றத்தையும், ஏற்றத்தையும் கொடுக்கும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க












Click it and Unblock the Notifications