Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரு வக்கிரப் பெயர்ச்சியில் சிக்கப்போகும் 4 ராசியினர்.. அதிர்ஷ்டமும், ஆபத்தும் சேர்ந்து வருது.. கவனம்

Subscribe to Oneindia Tamil

குரு வக்கிரப் பெயர்ச்சி 2025: மிதுன ராசியில் இருக்கும் குரு பகவான் வக்கிரமாகி வரும் நவம்பர் 12 ஆம் தேதி கடக ராசிக்குச் செல்கிறார். 4 மாதங்களுக்கு குரு வக்கிரமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள் யார், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாகும். இந்த பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். அந்த வகையில், வரும் நவம்பர் 12 ஆம் தேதி மிதுன ராசியில் குரு வக்கிரமாகி கடகத்துக்குச் செல்கிறார்.

Guru Vakra peyarchi Lucky zodiac signs

குரு வக்கிரமாவது அவ்வளவு நன்மையான காலகட்டம் இல்லை. ஜாதகத்தில் இயல்பாகவே ஒரு சில கிரகங்கள் வக்கிரமாக இருக்கும். ஜாதகத்தில் குரு வக்கிரமாக இருந்தால் கண்டிப்பாக நடக்க வேண்டிய பல நன்மைகள் அனைத்தும் நடக்கும். 2025 நவம்பர் 12 ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 11 ஆம் தேதி வரை 4 மாதங்களுக்கு குரு வக்கிரமாக இருக்கப் போகிறார்.

மிதுன ராசியில் குரு வக்கிரமாக மாறுகிறார். அங்கிருந்து கடகத்துக்குச் சென்று அதிசாரமாக புனர்பூச நட்சத்திரத்திற்குச் சென்று அங்கிருந்து மீண்டும் மிதுனத்துக்கு வருகிறார். குரு பகவான் வக்கிரமாக மாறும்போது புதிய புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும். 2027 மே மாதத்திற்குள் கார்டியோ தொடர்பான சிகிச்சையில் புரட்சி ஏற்படும். புதிய மருத்துவம் கண்டுபிடிக்கப்படும்.

குரு வக்கிரமாகும் இந்த காலகட்டத்தில் 4 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அந்த 4 ராசிக்காரர்கள் யார், அந்த ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு வீட்டில் நல்ல காரியங்கள், சுப காரியங்கள் என எல்லாமே நடந்தாலும் உங்களுடைய ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அங்கீகாரம், மரியாதை என எவற்றை எல்லாம் இழந்தீர்களோ அவை எல்லாம் கிடைக்கும் யோகம் உண்டு. சொந்த தொழில் தொடங்குவீர்கள். நிலம், வீடு வங்கும் யோகம் உண்டாகும். அனைத்து சுப பலன்கள் கிடைத்தாலும் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. கழுத்துப் பகுதிகளில் கொழுப்பு பிரச்சனை ஏற்படும். தலை திருப்ப முடியாதது போன்றவை ஏற்படும். குரு என்பது மூளையை குறிக்கும். மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்களுக்கு இப்போது சரியாகும் வாய்ப்பு உள்ளது.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் எந்த வேலையைச் செய்தாலும் தேவையில்லாத பயம், குழப்பம் என ஏதோ ஒரு பாதிப்புகளைச் சந்தித்துக் கொண்டிருந்த நிலைமைகள் எல்லாம் மாறும். பிரச்சனைகள் அனைத்தும் தீரும் நன்மையான காலகட்டமாக இருக்கும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணங்கள் இனி உங்களை வந்து சேரும். சொத்துகளை விற்பதன் மூலம் புதிய வீடு வாங்கும் யோகம் உண்டு. கடன்களை அடைப்பீர்கள். எல்லா நன்மைகளும் கிடைத்தாலும் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தை கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது. வண்டி, வாகனங்களில் செல்லும்போது செல்போனில் பேசிக் கொண்டே செல்வதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். விபத்துகளில் சிக்கும் வாய்ப்புள்ளது. கை, கால் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. காதல் கைகூடும், திருமண யோகம் கண்டிப்பாக உண்டு. நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும் காலகட்டமாக இருக்கும். காசு பணத்திற்குப் பஞ்சம் இருக்காது. தேவையில்லாத பிரச்சனைகள், தேவையில்லாத போன் கால்கள், நட்பு போன்றவற்றில் மிகுந்த கவனம் தேவை. அவற்றில் இருந்து விட்டு விலகியிருப்பது நன்மையைக் கொடுக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு 100 சதவீதம் யோகத்தைக் கொடுக்கக் கூடிய காலகட்டமாக இருக்கும். சுப காரியங்கள், மங்கல காரியங்கள் நடக்கும் காலகட்டம். சொத்து பிரச்சனைகள் நீங்கும். இரண்டாவது திருமணத்துக்கான யோகம் உண்டு. வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். அதிர்ஷ்டம் ஒரு புறம் இருந்தாலும், தந்தையின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+