Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Guru Vakram: குருவக்ர பெயர்ச்சியில் ஜாக்பாட் அடிக்கும் 3 ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க

Subscribe to Oneindia Tamil

குரு வக்கிரப் பெயர்ச்சி 2025: வரும் நவம்பர் 12 ஆம் தேதி மிதுன ராசியில் குரு வக்கிரமாகி கடகத்துக்குச் செல்கிறார். 4 மாதங்களுக்கு குரு வக்கிரமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டம், நற்பலன்களைப் பெறப்போகும் ராசிகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

குரு வக்கிரமாவது அவ்வளவு நன்மையான காலகட்டம் இல்லை. ஜாதகத்தில் இயல்பாகவே ஒரு சில கிரகங்கள் வக்கிரமாக இருக்கும். ஜாதகத்தில் குரு வக்கிரமாக இருந்தால் கண்டிப்பாக நடக்க வேண்டிய பல நன்மைகள் அனைத்தும் நடக்கும். 2025 நவம்பர் 12 ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 11 ஆம் தேதி வரை 4 மாதங்களுக்கு குரு வக்கிரமாக இருக்கப் போகிறார்.

guru-vakra-peyarchi-2025-which-three-zodiac-signs-get-good-benifits-and-fortunes-during-this-month

மிதுன ராசியில் குரு வக்கிரமாக மாறுகிறார். அங்கிருந்து கடகத்துக்குச் சென்று அதிசாரமாக புனர்பூச நட்சத்திரத்திற்குச் சென்று அங்கிருந்து மீண்டும் மிதுனத்துக்கு வருகிறார். குரு பகவான் வக்கிரமாக மாறும்போது புதிய புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும். 2027 மே மாதத்திற்குள் கார்டியோ தொடர்பான சிகிச்சையில் புரட்சி ஏற்படும். புதிய மருத்துவம் கண்டுபிடிக்கப்படும்.

குரு வக்கிரமாகும் இந்த காலகட்டத்தில் துலாம், தனுசு, கும்பம் ஆகிய 3 ராசிகளுக்கு யோகமான காலகட்டமாக இருக்கும். நீண்ட நாட்களாக திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தைப் பேறு உண்டாகும். மிகப்பெரிய நல்ல விஷயங்கள் நடக்கும். துலாம், தனுசு, கும்பம் ஆகிய 3 ராசியினருக்கு கிடைக்கப் போகும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

துலாம்

துலாம் ராசி அல்லது லக்கினம் சார்ந்தவர்களுக்கு குரு வக்கிரமாவதால் உங்களுக்கு 100 சதவீதம் நன்மையைக் கொடுக்கும். நண்பராக இருக்கும் நபரை திருமணம் செய்யும் யோகம் உண்டாகும். வெளியூர் செல்லும் யோகம் உண்டு. விரும்பிய வீட்டை வாங்கி கிரகப் பிரவேஷம் செய்யும் பாக்கியம் உள்ளது. வீட்டில் மங்கள காரியங்கள், மங்கள இசை கேட்கும் காலகட்டமாக இருக்கும்.

வீட்டில் பெரியவர்களுடன், அப்பாவுடன், சகோதரர்களுடன் இருக்கும் சண்டைகள், சொத்து தொடர்பான பிரச்சனைகள் எல்லாம் நீங்கும். வழக்குகள் முடியும். நிறைய பேருக்கு பூர்வீக சொத்துகள் வரும் யோகம் உண்டாகும். மன சங்கடங்கள் தீரும். அந்நியோன்யம் அதிகரிக்கும். இரண்டாவது திருமணத்துக்காக காத்திருப்பவர்களுக்கு கண்டிப்பாக திருமண யோகம் உண்டாகும்.

இடமாற்றங்களால் நல்ல நன்மைகள் ஏற்படும். எந்த முடிவை எடுத்தாலும் அதில் 100 சதவீத நேர்மறையான நன்மைகளைப் பெறுவீர்கள். அபரிமிதமான யோகமான காலகட்டம் என்பதால் பயன்படுத்திக் கொள்வது நல்லது. இடுப்பு, ஆசனவாய் தொடர்பான பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. ஒரு சில பேருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும்.

தனுசு

வண்டி, வாகனங்களில் செல்லும்போது செல்போனில் பேசிக் கொண்டே செல்வதைத் தவிர்ப்பது நல்லது. கை, கால் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. காதல் கைகூடும் வாய்ப்புள்ளது. திருமண யோகம் உண்டு. புதிய தொழில், வியாபாரம் தொடங்கும் பாக்கியம் உள்ளது. கூட்டுத் தொழில் ஆரம்பிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

உத்தியோகத்தில் நல்ல இடத்தில் இருப்பது, டீலர்சிப், ஏஜென்சி தொடங்குவது போன்ற பாக்கியங்கள் உண்டு. வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்களை எடுத்து விற்கும் யோகம் உண்டாகும். வீட்டுக்கு விருந்தாளி வரும் யோகம் உண்டு. அந்த விருந்தாளியால் உங்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய வெற்றி ஏற்படும் யோகம் உண்டாகும். இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.

எதிர்மறையான விஷயங்கள் அனைத்தும் நீங்கும். அனைத்து விஷயங்களுமே இனி உங்களுக்கு பாசிட்டிவாக நடக்கும். காசு பணத்திற்குப் பஞ்சம் இருக்காது. நாம் செய்வது சரி என்ற எண்ணம் தோன்றும். தைரியமாக முடிவுகளை எடுப்பீர்கள். யார் உங்களைப் பார்த்தாலும் மரியாதை கொடுப்பார்கள். தேவையில்லாத பிரச்சனைகள், தேவையில்லாத போன் கால்கள், நட்பு போன்றவற்றை விட்டு விலகுவது நல்லது.

கும்பம்

கும்ப ராசியினருக்கு தேவையில்லாத கற்பனைகள், பயம், சிந்தனைகள், குழப்பங்கள் நீங்கும். பிரச்சனைகளில் இருந்து வெளிவரக்கூடிய யோகம் உண்டாகும். புரோக்கரேஜ், கமிஷன் தொடர்பான வேலைகள், ரியல் எஸ்டேட், மார்க்கெட்டிங், பொருள்களை விற்பனை செய்யக்கூடிய யோகம், நீண்ட நாட்களாக வராத பணங்கள் திரும்பக் கிடைப்பது, ஈவன்ட் மேனேஜ்மென்ட் செய்வது போன்ற யோகம் உண்டாகும். சிலருக்கு பூர்வீக சொத்துகளை விற்று அதன் மூலம் புதிய வீடு வாங்கும் பாக்கியம் ஏற்படும். பழைய சொத்துகள் விற்பனையாகும்.

வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத லாட்டரி அடிக்கும் யோகம் உண்டாகும். கடன்களை அடைத்து முடிப்பீர்கள். நிறைய பேருக்கு மனோநிலை மாறும். நிறைய பேருக்கு ஆண் குழந்தை பிறக்கும் யோகம் உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். இரட்டை குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. மன மகிழ்ச்சி சிலருக்கு அபரிமிதமாக இருக்கும். பழனி முருகனின் அனுக்கிரகம் உங்களுக்கு அற்புதமாக இருக்கும்.

குரு வக்கிரமாக இருக்கும்போது இந்த 4 மாதங்கள் அற்புதமான மாற்றங்கள் உண்டாகும். பல நல்ல காரியங்கள், சுபகாரியங்கள் நடக்கும் ஸ்தானம். காதல் கைகூடும். நல்ல நேரமாக இருப்பதால் பயன்படுத்திக் கொள்வது நல்லது. பெரும் பணத்தை நீங்கள் எதிர்பார்க்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+