குரு வக்ர பெயர்ச்சி பலன் 2023: குரு தரப்போகும் குபேர யோகம்.. அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள்
மதுரை: சுபகிரகமான குரு பகவான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு பலம் அதிகம். பொன்னவன் குருவின் பயணம் சாதகமாக இருந்தால் நல்ல வேலை கிடைக்கும் கோடி கோடியாக பணம் வரும். மேஷ ராசியில் பயணம் செய்யும் குரு பகவான் செப்டம்பர் 11ஆம் தேதி முதல் டிசம்பர் 20 ஆம் தேதி வரைக்கும் வக்ர கதியில் பயணம் செய்வார். நான்கு மாத காலம் வக்ர நிலையில் பயணம் செய்யும் குருபகவான் தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

தனுசு: குரு பகவனை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே.. அசுவினி மற்றும் பரணி நட்சத்திரங்களில் குரு பகவான் பயணம் செய்யும் இந்த கால கட்டத்தில் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். சக ஊழியர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். வேலைச்சுமையும் குறையும். உங்களுக்கு இடைஞ்சல் கொடுத்த மேலதிகாரி வேறு இடத்திற்கு செல்லப்போகிறார். எதிர்பார்த்த பதவி உயர்வு தேடி வரும். பணவரவையும், பதவி சுகத்தையும் தரப்போகிறார் குரு பகவான் தரப்போகும் குபேர யோகத்தை அனுபவிக்கத் தயாராகுங்கள்.
மகரம்: சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்களே..குருபகவான் வக்ர கதியில் பயணம் செய்யப்போகும் காலத்தில் எதிலும் எச்சரிக்கை தேவை. கர்ப்பிணிகள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். தூக்கம் குறையும். சுபச் செலவுகளும் அதிகரிக்கும்அலுவலகத்தில் பதவியுயர்வு, சம்பள உயர்வு கிடைக்க தாமதமானாலும் கிடைத்துவிடும். அலுவலகத்தில் புதிய சவால்களை எளிதாக சமாளிப்பீர்கள். குரு பகவான் வக்ரகதியில் பயணம் செய்யும் நான்கு மாத காலத்தில் வெற்றி நடைபோடப்போகிறீர்கள்.
கும்பம்: சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட கும்பம் ராசிக்காரர்களுக்கு வக்ரகதியில் சனிபகவான் செல்லும் இந்த 4 மாத காலத்தில் உங்களுக்கு திடீர் செலவுகள் அதிகரிக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்வீர்கள். செல்வ வளம் கூடும் உங்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும் என்றாலும் பெரிய அளவில் முதலீடுகளைத் தவிர்க்கவும். வேலையில் இருப்பவர்கள் கவனமாக செயல்பட வேண்டிய காலமாகும். புதிய பொறுப்புகள் தேடி வரும். யாரை நம்பியும் வேலையை ஒப்படைக்காதீர்கள். திடீர் இடமாற்றத்தை எதிர்கொள்ள தயாராகுங்கள்.
மீனம்: உங்கள் ராசிநாதன் குரு பகவான் செப்டம்பர் மாதம் முதல் வக்ர கதியில் அசுவினி மற்றும் பரணி நட்சத்திரங்களில் பயணம் செய்யப்போகிறார். எதையும் எளிதில் முடிக்கும் ஆற்றல் பிறக்கும். தடைப்பட்ட திருமணம் கூடிவரும். வேலை செய்யும் இடங்களில் பளு கூடும் என்றாலும் எளிதில் சமாளித்துவிடுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் உழைப்புக்கேற்ற மரியாதையும் சலுகைகளும் கிடைக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். இந்த நான்கு மாத காலத்தில் உங்கள் திறமையை நிரூபிக்கும் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். முக்கியப் பொறுப்புகள் வீடு தேடி வரப்போகிறது. குபேர யோகத்தை தரப்போகிறார் குருபகவான் சந்தோஷமாக அனுபவியுங்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications