Guru Vakra Peyarchi: கன்னி ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம்.. இதுல மட்டும் கவனம்
குரு வக்கிரப் பெயர்ச்சி பலன்: நவம்பர் 12 முதல் மார்ச் 11 ஆம் தேதி வரையிலான குரு வக்கிரப் பெயர்ச்சி காலகட்டத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் என்ன, கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை, அதிர்ஷ்டம் தரும் விஷயங்கள் எவை என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
நவம்பர் 12 ஆம் தேதி முதல் மார்ச் 11 ஆம் தேதி வரை குரு பகவான் வக்கிரமாக இருக்கிறார். குரு வக்கிரம் என்பது எல்லாமே இருப்பது போல இருக்கும் ஆனால் இருக்காது. குரு ஒரு ஜாதகத்தில் வக்கிரமாக இருந்தால் அவர்களுடைய வளர்ச்சி மின்னல் வேகத்தில் இருக்கும். நிறைய அரசியல்வாதிகள், கலைஞர்கள் குரு வக்கிரமாகும் போது, சனி வக்கிரமாகும் போது உச்சத்தை தொடுவார்கள். நிறைய அரசியல் கட்சியினர் தொண்டர்களாக இருந்தவர்களுக்குப் பெரிய பதவி கிடைக்கும். முக்கிய புதிய முடிவுகளை எடுப்பீர்கள். முடிவுகள் மாற்றி எழுதப்படும்.

விதியை மாற்றி எழுதக்கூடிய சக்தி குரு வக்கிரப் பெயர்ச்சியாக இருக்கும்போது சிலருக்கு கிடைக்கும். சிலருக்கு திருமண யோகம், புதிய வேலை, புதிய முயற்சிகள் என நல்ல விஷயங்கள் அனைத்தும் குரு வக்கிரமாகும் போது நடக்கும். எந்த ஜாதகத்தில், குரு, சனி வக்கிரமாக இருக்கிறதோ அவர்கள் புரட்சி செய்து மேலே வருவார்கள். ஒரு இடத்தைக் காலி செய்துவிட்டு மேலே வருவார்கள். குரு என்பது பயங்கராமன புத்திக் கூர்மையைக் குறிக்கும். சாலையில் கிடப்பதை தங்கமாக மாற்றக்கூடிய யோகம் குரு வக்கிரமாக இருக்கக் கூடியவர்களுக்கு நடக்கும்.
இந்த குருப்பெயர்ச்சி காலகட்டத்தில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கன்னி
கன்னி ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு எந்த வேலையை இழந்தீர்களோ அந்த வேலை திரும்ப கிடைக்கும். யாருக்கு குருவாக இருந்து துரோகத்தை கண் கூடாகப் பார்த்தீர்களோ, எந்த நல்ல விஷயத்துக்கு உதவி செய்யப்போய் கெட்டவனாக பெயர் பெற்றீர்களோ அந்த நிலைமை எல்லாம் மாறும். இனிமேல் குழப்பத்தை சந்திக்காமல் மீண்டும் வேலையில் சேரும் வாய்ப்பு ஏற்படும்.
பழைய வேலை கிடைக்கும்
பழைய தொடர்புகள், பழைய அலுவலகம், பழைய நட்பு போன்றவை கிடைக்கும். மாமியார் மூலமாக பணம், ஆவணங்கள், சொத்துகள் வந்து சேரும். வீட்டில் எதிர்பார்க்காத அளவுக்கு பல நல்ல விஷயங்கள் நடக்கும். குரு வக்கிரமாக இருப்பதால் ஒரு விதத்தில் நெகட்டிவான செய்திகள் வந்தாலும், அதில் உங்களுக்கு ஒரு நல்ல விஷயமும் நடக்கும்.
ஆரோக்கியம்
கால் முட்டி தொடர்பான பிரச்சனைகள் வந்து தீரும். கொழுப்புக் கட்டிகள் போன்றவை சரியாகும். வேலையில் மதிக்கவே மாட்டிங்குறாங்க என்று வருத்தப்படுபவர்களுக்கு அதுபோன்ற நிலைமை மாறும். நீதிமன்றத்தில் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். எல்லா முயற்சிகளும் கண்டிப்பாக ஜெயிக்கும். மற்றவர்கள் மூலமாகவாவது ஜெயிக்கும் சூழல் ஏற்படும்.
பணவரவு கொட்டும்
பணம் பலவிதத்தில் வந்து சேரும். ஆனால், எப்போது வரும் என்று தெரியாது. பணம் எவ்வளவு வந்தாலும் திருப்தி அடைய மாட்டீர்கள். உங்களைப் பொருத்தவரை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பர்ஃபெக்ஷன் பார்த்துக் கொண்டே மற்றவர்களை டார்ச்சர் செய்வீர்கள். எல்லாவற்றிலும் நேர்மை, தான் அறிவுசார்ந்தவன் என்று அதீதமாக நடந்து கொள்வதை குரு வக்கிர காலத்தில் தவிர்த்துக் கொள்வது நல்லது. இல்லையெனில் பெயர் கெடும் வாய்ப்பு ஏற்படும்.
தொழில்
நீங்கள் எந்த அளவுக்கு தாழ்ந்து செல்கிறீர்களோ அந்த அளவுக்கு நன்மை ஏற்படும். நல்ல சீட்டு கிடைக்கும். மருத்துவத் துறையில் சீட்டு கிடைக்கும். ஐஏஎஸ், ஐபிஎஸ், குரூப் தேர்வு, சிவில் சர்வீஸ், மீடியா துறை, பத்திரப் பதிவுத் துறைகளில் வேலை கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். டிசம்பர், ஜனவரியில் கண்டிப்பாக ஆர்டர்கள வந்து சேரும்.
வழிபாடு
தினந்தோறும் பார்த்தசாரதியை வழிபாடு செய்வது முன்னேற்றத்தை தரும். சந்தோஷம் ரீதியாகவும், பொருளாதாரம் ரீதியாகவும் 75 சதவீதம் அற்புதமான யோகத்தைப் பெறுவீர்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: தனுசு ராசிக்கு கட்டம் சரியில்லை.. வச்சு செய்யும் சனி, குரு.. ரொம்ப கவனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: ராஜாபகவத் போல மாறும் விருச்சிக ராசி.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம் -
தமிழ் புத்தாண்டு பலன்: ரிஷப ராசிக்கு குரு உச்சம்.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: கோடீஸ்வர யோகம் பெறும் சிம்ம ராசி.. அள்ளிக் கொடுக்கும் குரு, கேது பகவான் -
தமிழ் புத்தாண்டு பலன்: கடக ராசிக்கு டாப் கிளாஸ் யோகம்.. தலையெழுத்தே மாறப்போகுது -
தமிழ் புத்தாண்டு பலன்: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டமும், ஆபத்தும் சேர்ந்து வருது.. இந்த விஷயத்தில் கவனம் -
Rasi Palan This Week:குருவின் அருளால் சனியிடமிருந்து தப்பிக்கும் மீன ராசி..பண விஷயத்தில் ரொம்ப கவனம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம்












Click it and Unblock the Notifications