Guru Vakra Peyarchi: கும்ப ராசிக்கு புது வீடு, நிலம்.. அதிர்ஷ்ட தேவதை கதவை தட்டப் போகுது
குரு வக்கிரப் பெயர்ச்சி பலன்: நவம்பர் 12 முதல் மார்ச் 11 ஆம் தேதி வரையிலான குரு வக்கிரப் பெயர்ச்சி காலகட்டத்தில் கும்ப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் என்ன, கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை, அதிர்ஷ்டம் தரும் விஷயங்கள் எவை என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
நவம்பர் 12 ஆம் தேதி முதல் மார்ச் 11 ஆம் தேதி வரை குரு பகவான் வக்கிரமாக இருக்கிறார். குரு வக்கிரம் என்பது எல்லாமே இருப்பது போல இருக்கும் ஆனால் இருக்காது. குரு ஒரு ஜாதகத்தில் வக்கிரமாக இருந்தால் அவர்களுடைய வளர்ச்சி மின்னல் வேகத்தில் இருக்கும். நிறைய அரசியல்வாதிகள், கலைஞர்கள் குரு வக்கிரமாகும் போது, சனி வக்கிரமாகும் போது உச்சத்தை தொடுவார்கள். நிறைய அரசியல் கட்சியினர் தொண்டர்களாக இருந்தவர்களுக்குப் பெரிய பதவி கிடைக்கும். முக்கிய புதிய முடிவுகளை எடுப்பீர்கள். முடிவுகள் மாற்றி எழுதப்படும்.

விதியை மாற்றி எழுதக்கூடிய சக்தி குரு வக்கிரப் பெயர்ச்சியாக இருக்கும்போது சிலருக்கு கிடைக்கும். சிலருக்கு திருமண யோகம், புதிய வேலை, புதிய முயற்சிகள் என நல்ல விஷயங்கள் அனைத்தும் குரு வக்கிரமாகும் போது நடக்கும். எந்த ஜாதகத்தில், குரு, சனி வக்கிரமாக இருக்கிறதோ அவர்கள் புரட்சி செய்து மேலே வருவார்கள். ஒரு இடத்தைக் காலி செய்துவிட்டு மேலே வருவார்கள். குரு என்பது பயங்கராமன புத்திக் கூர்மையைக் குறிக்கும். சாலையில் கிடப்பதை தங்கமாக மாற்றக்கூடிய யோகம் குரு வக்கிரமாக இருக்கக் கூடியவர்களுக்கு நடக்கும்.
இந்த குருப்பெயர்ச்சி காலகட்டத்தில் கும்ப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கும்பம்
கும்ப ராசி அல்லது கும்ப லக்கினம் சார்ந்த நபர்களுக்கு பஞ்சம ஸ்தானத்தில் குரு வக்கிரமாக இருக்கிறார். நல்ல மணமகன், நல்ல சம்பளம், நல்ல குடும்பம் என்று வீட்டில் கூறிவிட்டுச் சென்ற பெண் திரும்ப வரும் நிலை ஏற்படும். எந்தக் காதல் வேண்டாம் என்று திரும்பிச் சென்றார்களோ அந்தக் காதல் மீண்டும் சேரும். நல்ல மணப் பொருத்தங்கள் ஏற்படும்.
திருமண யோகம்
கும்பத்தில் பிறந்த பலருக்கு கலப்புத் திருமணம் ஏற்படும். ரெஜிஸ்டர் திருமணம் செய்யும் நிலை ஏற்படும். பெற்றோர் அனுமதியுடன் திருமணம் செய்து கொள்வது நல்லது. பிள்ளைகளின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குரு வக்கிரமாக இருக்கும்போது கொஞ்சம் பார்த்து இருப்பது நல்லது. பூர்வீக சொத்துகள், முன்னோர் சொத்துகள் கிடைக்கும்.
சொத்துக்கள் வாங்கும் யோகம்
புதிதாக வீடு வாங்குவீர்கள். நிலம் வாங்குவீர்கள். சொத்துகளை விற்று பணம் வரும். எல்லா கோணங்களிலும் உங்களுக்கு நன்மை கிடைக்கும். எதை செய்தாலும் தெய்வத்துடைய அனுக்கிரகத்துடன் செய்வது நல்லது. குலதெய்வ வழிபாடு செய்வது உங்களுக்கு நன்மையை ஏற்படுத்தும். 5 வேத விற்பன்னர்களுக்கு சாப்பாடு போடுவது நல்லது. அல்லது அன்னாதானத் திட்டத்துக்கு பணம் செலுத்தி சாப்பாடு போடுவது நல்லது.
வெளிநாடு யோகம்
கல்விக்கு உதவி செய்வது நன்மையைத் தரும். ஆரோக்கியத்தில் இருக்கும் குறைபாடுகள் நீங்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். நிறைய ஏற்றங்கள் ஏற்படும். மனது மாறும். மனதில் மகிழ்ச்சி பெருகும். எதுவுமே நடக்காத என்கிற நிலைமை மாறி நன்மைகள் நடக்கும். உங்கள் வாழ்க்கை நான்கு, ஐந்து மாதங்களில் நல்ல மாற்றம் ஏற்படும். வெளியூர், வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.
வழிபாடு
கனடா, ஆஸ்திரேலியா போக முடியாத நபர்கள் மற்ற வெளிநாடுகளுக்குச் செல்லும் நல்ல காலம் ஏற்படும். 100 சதவீதம் நன்மைகள் நடக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். சாரங்கபாணி வழிபாடு அமோகமான மாற்றத்தைக் கொடுக்கும். சந்தோஷம் ரீதியாக 70 சதவீதம் நன்மைகள், பொருளாதாரம் 90 சதவீதம் நன்றாக இருக்கும்.












Click it and Unblock the Notifications