குரு வக்கிரப் பெயர்ச்சியில் 4 ராசிகளுக்கு வரப்போகும் ஆபத்து.. ரொம்ப கவனம்
குரு வக்கிரப் பெயர்ச்சி பலன்: நவம்பர் 12 முதல் மார்ச் 11 ஆம் தேதி வரை குரு வக்கிரப் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்தப் பெயர்ச்சியானது 12 ராசிகளுக்கும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். குரு வக்கிரப் பெயர்ச்சியில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
நவம்பர் 12 ஆம் தேதி முதல் மார்ச் 11 ஆம் தேதி வரை குரு பகவான் வக்கிரமாக இருக்கிறார். குரு வக்கிரம் என்பது எல்லாமே இருப்பது போல இருக்கும் ஆனால் இருக்காது. குரு ஒரு ஜாதகத்தில் வக்கிரமாக இருந்தால் அவர்களுடைய வளர்ச்சி மின்னல் வேகத்தில் இருக்கும். நிறைய அரசியல்வாதிகள், கலைஞர்கள் குரு வக்கிரமாகும் போதும், சனி வக்கிரமாகும் போதும் உச்சத்தை தொடுவார்கள்.

நிறைய அரசியல் கட்சியினர் தொண்டர்களாக இருந்தவர்களுக்குப் பெரிய பதவி கிடைக்கும். முக்கிய புதிய முடிவுகளை எடுப்பீர்கள். முடிவுகள் மாற்றி எழுதப்படும். விதியை மாற்றி எழுதக்கூடிய சக்தி குரு வக்கிரப் பெயர்ச்சியாக இருக்கும்போது சிலருக்கு கிடைக்கும். சிலருக்கு திருமண யோகம், புதிய வேலை, புதிய முயற்சிகள் என நல்ல விஷயங்கள் அனைத்தும் குரு வக்கிரமாகும் போது நடக்கும்.
குரு வக்கிரப் பெயர்ச்சியின்போது மகரம், விருச்சிகம், கடகம், மீனம் ஆகிய 4 ராசிகள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஜாதகத்திலேயே குரு வக்கிரமாக இருந்தால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது தப்பித்து விடுவீர்கள். எதிர்பாராத நன்மை, எதிர்பாரத பணம், அதிர்ஷ்டம், வீடு போன்றவற்றை பெற்று வெளிவருவீர்கள். 4 ராசிகள் எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
மகரம்
மகரம் ராசி அல்லது மகரம் லக்கினம் சார்ந்த நபர்களுக்கு இந்த காலத்தில் சாதனை படைப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. சுப காரிய தடைகள் விலகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். எதிரிகள் பலவீனமடைவார்கள். வழக்குகளில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உத்யோகம், தொழிலில் வளர்ச்சி காணப்படும். பொருளாதாரம் உயர்வடையும். பழைய பாக்கி வசூலாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து கடன் கிடைக்கும்.
உத்யோகத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். சிலருக்கு தங்கள் தகுதி திறமைக்கு ஏற்ற அற்புதமான புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. தற்காலிக ஊழியராக இருப்போருக்கு, நிரந்தரமான பணி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். விவாகரத்து வரை சென்ற தம்பதி கூட சேர்வதற்கு வாய்ப்பு உள்ளது. அதேநேரத்தில் விவாகரத்து எதிர்பார்த்து காத்திருக்கும் சிலருக்கு விவாகரத்து கிடைக்கும்.
கோபத்தை குறைத்து கொண்டு எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது முக்கியம். உணவுப் பழக்க வழக்கத்தில் மட்டும் கவனம் வேண்டும். வயிறு, ஜீரணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் எச்சரிக்கை அவசியம்.
விருச்சிகம்
விருச்சிக ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு குரு வக்கிரமாகி 8 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். ஒரு விதத்தில் நன்மை என்பது போன்ற காலகட்டமாக இருக்கும். வீட்டுக்கென்று கடனை வாங்கி அதனை கட்ட முடியாமல் பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்து வருபவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் நண்பர்கள் மூலமாக உதவிகள் வரும். அதன் மூலம் கடனை அடைத்து பிரச்சனைகளில் இருந்து வெளிவருவீர்கள். விற்கவே முடியாத விஷயங்களை இப்போது விற்கும் யோகம் ஏற்படும்.
நிறைய பேருக்கு எதிர்பார்க்க முடியாத மாற்றம் ஏற்படும். அஷ்டமத்தில் குரு போகும்போது குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும். ஜாதகத்தில் குரு வக்கிரமாக இருந்தால் தப்பித்து விடுவீர்கள். குரு வக்கிரமாக இல்லையெனில் உங்களை முடக்கக் கூடிய நிலை ஏற்படும். கெட்ட பெயர், அவப்பெயர் வருவதற்கான வாய்ப்பு ஏற்படும். எவ்வளவு சுமையைத் தாங்க முடியுமோ அவ்வளவு சுமையை மட்டும் சுமப்பது நல்லது. குரு வக்கிரமாக இருக்கும்போது அதிகளவிலான சுமைகள் ஏற்படும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.
வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆரோக்கியம், உங்களுடைய ஆரோக்கியம், வண்டி வாகனங்களில் கவனமாக இருப்பது நல்லது. செலவுகள் அபரிமிதமாக இருக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும். மூலப் பத்திரங்களை மறந்து எங்கேயும் வைத்து விடாமல் இருப்பது நல்லது. குரு வக்கிரம் என்பது குழப்ப நிலையிலேயே இருக்கும்.
கடகம்
கடக ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு போன 2 வருடம் முழுவதும் அஷ்டம சனியில் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்திருப்பீர்கள். விரயத்தில் குரு வக்கிரமாக அமர்ந்திருக்கிறார். குரு வக்கிரமாக இருக்கும் போது கடக ராசியினருக்கு வெளிநாட்டில் செட்டிலாகும் யோகம் உண்டாகும். வெளிநாடு செல்ல அற்புதமான காலகட்டமாக இருக்கும். எந்தப் பிரச்சனை வந்தாலும் நீங்கள் மட்டும் அதிலிருந்து தப்பிப்பீர்கள்.
அதிகமாக உழைக்கும் காலகட்டமாக இருக்கும். அதிக நேரம் தூங்கும் சூழ்நிலை ஏற்படும். ஒரு விதத்தில் நன்மைகள் கிடைக்கும். குழந்தைகள் சம்பந்தப்பட்ட கவலைகள் நீங்கும். குழந்தைகளுக்குத் தேவையான புதிய செலவுகளை செய்வீர்கள். புதிதாக கல்விக் கட்டணம் கட்டுவீர்கள். வண்டி வாகனங்கள் வாங்கிக் கொடுக்கும் யோகம் உண்டாகும். வீட்டில் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்வீர்கள்.
முடிவுகளைத் தாமதமாக எடுத்தாலும் சரியான முடிவுகளாக இருக்கும். ஆன்மீக யாத்திரைகள், எண்ணங்கள், தீர்த்த யாத்திரைகள், முன்னோர்கள் சம்பந்தப்பட்ட யாத்திரைகள், வீட்டில் நல்ல காரியங்கள், சுப காரியங்கள் எல்லாம் நடக்கும். குடும்பத்துடன் பயணம் மேற்கொள்வீர்கள். காசி, கயா, ராமேஸ்வரத்திற்கு செல்லும் யோகம் உண்டாகும். வடமாநிலங்களுக்கு சுற்றுலா செல்வதை தவிர்ப்பது நல்லது.
மீனம்
மீனம் ராசி அல்லது மீனம் லக்கினம் சார்ந்த நபர்களுக்கு சுக ஸ்தானத்தில் குரு வக்கிரமாக அமர்ந்திருக்கிறார். வீடு, வண்டி, வாசல், சொத்துக்கள், காளை மாடு, பசு மாடு, இயற்கையான விஷயங்கள், விவசாயம், நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாமே நன்றாக இருக்கும். ஜாதகத்தில் குரு அல்லது செவ்வாய், சுக்கிரன், செவ்வாய், புதன் ஏதாவது ஒரு கிரகம் கும்பம், துலாமில் வக்கிரமாக இருந்தால் வீடு வாங்கும் யோகம் உண்டாகும்.
மார்பு, இதயப் பகுதி, நுரையீரலில் இருந்து வந்த பெரிய பிரச்சனைகள் சிறிதாக முடியும். குழந்தைகளைப் பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. விரய ஸ்தானம் என்பது 4 ஆம் இடம். மிகவும் கட்டுப்பாட்டுடன், ஒழுக்கத்துடன் குழந்தைகளை வளர்க்க முயற்சி செய்வீர்கள். அன்பாக முயற்சிப்பது நல்லது. அடித்தோ மிரட்டவோ செய்வதை தவிர்ப்பது நல்லது. குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
குரு வக்கிரமாக இருப்பதால் கட் அண்ட் ரைட்டாக லாஜிக் பார்ப்பீர்கள். அதனை தவிர்த்து உணர்ச்சிகளுக்கு மதிப்பளிப்பது நல்லது. பல சங்கடங்கள், சர்ச்சைகள், பிரச்சனைகளில் சிக்கினாலும் அதில் இருந்து விடுதலையாகக் கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். இழந்த வீடு கிடைக்கும். இழந்த சொந்தம் இப்போது உங்களை மதிக்கும். உங்கள் வீட்டில் வைத்து சுப காரியங்கள் நடக்கும். தாய்க்கு இருக்கும் மனக் கவலைகள் நீங்கும்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications