Guru Vakram: குருவின் அருளால் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிகள்.. பெயர், புகழ் கிடைக்கும் யோகம்
குரு வக்கிரப் பெயர்ச்சி பலன்: நவம்பர் 12 முதல் மார்ச் 11 ஆம் தேதி வரை குரு வக்கிரப் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்தப் பெயர்ச்சியானது 12 ராசிகளுக்கும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். குரு வக்கிரப் பெயர்ச்சியில் பெயர், புகழ்பெறும் ராசிகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
நவம்பர் 12 ஆம் தேதி முதல் மார்ச் 11 ஆம் தேதி வரை குரு பகவான் வக்கிரமாக இருக்கிறார். குரு வக்கிரம் என்பது எல்லாமே இருப்பது போல இருக்கும் ஆனால் இருக்காது. குரு ஒரு ஜாதகத்தில் வக்கிரமாக இருந்தால் அவர்களுடைய வளர்ச்சி மின்னல் வேகத்தில் இருக்கும். நிறைய அரசியல்வாதிகள், கலைஞர்கள் குரு வக்கிரமாகும் போதும், சனி வக்கிரமாகும் போதும் உச்சத்தை தொடுவார்கள்.

சிலருக்கு திருமண யோகம், புதிய வேலை, புதிய முயற்சிகள் என நல்ல விஷயங்கள் அனைத்தும் குரு வக்கிரமாகும் போது நடக்கும். இந்த குரு வக்கிரப் பெயர்ச்சி காலகட்டத்தில் பெயர், புகழ் போன்ற அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
தனுசு
தனுசு ராசி அல்லது தனுசு லக்கினம் சார்ந்த நபர்களுக்கு ராசியதிபதி 7 இடத்தில் வக்கிரமாக இருப்பதால் சுப காரியத் தடைகள் நீங்கும். ஐ.டி, விற்பனை, பத்திரிகை ஊடகம் தொடர்பாக புதிய தொழில் தொடங்குவதற்கு வாய்ப்புள்ளது. நல்ல தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள். திருமண யோகம், குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுயதொழில் செய்வதற்கான முயற்சியைத் தொடங்குவீர்கள்.
பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். மதிப்பு, மரியாதை கூடும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். கடந்த காலங்களில் இழந்தவற்றை படிப்படியாக மீட்பீர்கள். பிரிந்த உறவுகள் ஒன்றிணைவார்கள். மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. பொருளாதாரம் மேம்படும். கடன் சுமை குறையும்.
யாரையும் நம்பாமல் இருப்பது நல்லது. உறவுகள், நண்பர்களிடம், பணம் சார்ந்த விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. உங்கள் வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கழுத்து, வயிறு சம்பந்தப்பட்ட பகுதிகளில் அதிக எச்சரிக்கை தேவை. ராமேஸ்வரம் ராமநாதர், சேது மாதவன் கோயில் சென்று வழிபடுவது அற்புதமான மாற்றங்களை கொடுக்கும்.
சிம்மம்
சிம்ம ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு குரு வக்கிரமாக இருக்கிறார். ஏராளமான நன்மைகள் கிடைக்கும். திருமணமாகாமல் கஷ்டப்படுபவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். பதவி உயர்வுகள், நட்பு மீண்டும் வந்து சேரும். அரசியல் பதவிகள் தேடி வரும். எந்த துறையில் இருக்கிறீர்களோ அந்த துறையில் பதவி உயர்வைப் பெறுவீர்கள். அடுத்த கட்டத்துக்குச் செல்லும் யோகம் ஏற்படும். நிறைய பேருக்கு பெரிய பதவிகள், பெரிய பரிசுகள் வந்து சேரும். உங்கள் டார்கெட்டுகளை சாதித்து முடிக்கும் பாக்கியம் உண்டாகும்.
லட்சியத்தில் வெற்றி பெறும் யோகம் ஏற்படும். பல நட்புகள் உங்களுக்கு சாதகமாக மாறும். அண்ணன், தம்பிகள் மீண்டும் ஒன்று சேருவீர்கள். எதிர்பார்க்காத நல்ல விஷயங்கள் நடக்கும் காலகட்டமாக இருக்கும். வீட்டில் பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பது நல்லது. தினந்தோறும் கோயிலுக்குச் செல்வது, விபூதி, சந்தனம் வைத்துக் கொள்வது அற்புதத்தை ஏற்படுத்தும்.
மேஷம்
மேஷ ராசி அல்லது லக்கினம் சார்ந்தவர்களுக்கு ஆண் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புள்ளது. இடமாற்றம் உண்டாகும். கழுத்து, தொண்டை தொடர்பான பாதிப்புகள் வரக்கூடியதற்கான வாய்ப்புகள் உள்ளன. அண்ணன், தம்பிக்குள் ஏற்பட்ட தகராறுகளை தீர்க்கும் காலகட்டம். நிறைய பேருக்கு நல்ல வாய்ப்புகளும், ஆன்சைட் யோகங்களும் உண்டாகும். சிஸ்டம், ஐடி, கம்யூனிகேஷன், சாப்ட்வேர் துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
பணிகளை இழந்தவர்களுக்கு எதிர்பாராத நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். எந்த விஷயங்கள் உங்களுக்கு தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்ததோ அவை எல்லாம் சரியாகும். அந்நியோன்யம் உண்டாகும். எதிரிகள் கூட நட்பாக மாறும் காலகட்டமாக இருக்கும். எந்தவிதமான பாதிப்புகள் இருந்தாலும் அவை தீரும். வீடுகளை விற்பதற்கான அற்புதமான காலகட்டமாக இருக்கும். வீட்டின் மேல் தளத்துக்கு குடி போவது, பிளாட் வாங்குவதற்கான யோகம் உண்டாகும். பொருளாதாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
துலாம்
துலாம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு டாப் கிளாஸாக இருக்கும். துலாம் ராசி என்பது சுக்கிரனின் ராசி. குரு என்பது தேவாதிபதி. துலாம் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் குரு அமர்ந்து நிறைய நல்ல விஷயங்களை செய்து கொடுத்திருப்பார். வீடு, திருமணம், வண்டி, வாகனம், குழந்தை பாக்கியம் என அனைத்து பாக்கியங்களையும் கொடுத்திருப்பார். ஆனால் தற்போது குரு வக்கிரமாகிறார்.
குரு வக்கிரமாகும்போது உங்களுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வந்து சேரும். வெளிநாட்டுக்குச் சென்று பணம் ஈட்டிக் கொண்டு வரும் வாய்ப்பு ஏற்படும். திருமணமாகும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பை பெறுவீர்கள். லாபம் அதிகரிக்கும். பிரிந்து போன அப்பா மகன் மீண்டும் சேரும் யோகம் உண்டாகும். அம்மா, அப்பாவை நன்றாகப் பார்த்துக் கொள்வது நல்லது.
வெளியூர் செல்லும் பாக்கியம், அதில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். நிறைய பேருக்கு பேராசிரியராகும் யோகம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். எடுத்த காரியங்களில் வெற்றிகளைக் குவிக்கும் யோகம் உண்டாகும். வீடு, பணம், வண்டி வாகன யோகம் ஏற்படும். முதலீடுகளைச் செய்து மகிழ்வீர்கள். அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் நடக்கும் அற்புதமான காலகட்டம். சேமிப்புகளை செய்யத் தொடங்குவீர்கள். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications