சரிவு காலம்.. மோடி ராசிக்கு எதிராக போன குரு வக்ர பெயர்ச்சி.. காற்று திசை மாறுது.. ராசி பலன்!
சென்னை: பிரதமர் மோடியின் ராசி விருச்சிக ராசி. இந்த ராசிக்கு குரு வக்ர பெயர்ச்சி எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். ஏனென்றால் தற்போது ஹரியானா.. ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இரண்டிலும் பாஜக பின்னடைவை சந்தித்து உள்ளது.
ஹரியானாவில் பாஜக 23 இடங்களில் முன்னிலை வகிக்கும் நிலையில்.. காங்கிரஸ் 56 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி 47 இடங்களிலும் , பாஜக 27 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இதனால் பாஜக தரப்பில் இப்போதே பிரஷர் எகிறி உள்ளது. பாஜகவின் தேசிய முகமாக பார்க்கப்படும் பிரதமர் மோடிக்கு இது பெரிய சரிவாக பார்க்கப்படுகிறது. அவருக்கு ராசி ரீதியாக.. குரு வக்ர பெயர்ச்சி எதிராக திரும்புகிறதா என்ற கேள்விஎழுந்துள்ளது.

ராசி பலன்: பிரதமர் மோடியின் ராசி விருச்சிக ராசி. இந்த ராசிக்கு குரு வக்ர பெயர்ச்சி எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.அக்டோபர் 9ம் தேதி குரு பகவான் ரிஷப ராசியில் வக்ர பயணம் மேற்கொள்ள உள்ளார். கிட்டத்தட்ட 4 மாதங்கள்.. அதாவது பிப்ரவரி மாதம் 4ம் தேதி வரை இந்த பயணம் நீடிக்கும். ரிஷப ராசியில் ரோகிணி, கார்த்திகை நட்சத்திரங்களில் குரு வக்ரம் அடைகிறார். அந்த வகையில் விருச்சிகம் ராசிக்கான பலன்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.
உங்களுக்கு தூக்கத்தில் பிரச்சனை இருக்கலாம். அகலக்கால் வைக்க வேண்டாம். வாகனங்களில் செல்லும் போது கவனமாக செல்லவும். இதனால் ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படலாம். அதனால் உங்களுக்கு பின்வரும் பாதக பலன்கள் ஏற்படும். அப்பா உடன் குடும்ப உறவில் சிக்கல் ஏற்படலாம். வாயை கொடுத்து மாட்ட வேண்டாம். சண்டைக்கு செல்ல வேண்டாம். யார் மனதையும் புண்படுத்த வேண்டாம். யோசித்து முடிவு எடுங்கள்.
அரசியலில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் சரிவை சந்திக்கும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இந்த சரிவு நீண்ட காலம் நீடிக்காது. அரசு பணிகளில் இருப்பவர்களுக்கு அடுத்த 4 மாதங்கள் சிக்கலாக இருக்கலாம்.
உங்களிடம் இதுவரை கடன் வாங்கி கொடுக்காதவர்கள் உடனே கொடுத்துவிடுவார்கள். லாட்டரி அடிக்கும் யோகங்கள் உண்டு. பிஸ்னஸ் மூலம் திடீர் அதீத லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. மாத ஊதியம் பெறும் நபர்களுக்கு திடீரென 2- 3 மடங்கு சம்பளம் உயரும் வாய்ப்புகளும் கூட உண்டு.
முக்கியமாக இது வேலை ரீதியாக நீங்கள் சிம்மாசனத்தில் அமரும் காலம். உங்களுக்கு பல புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் வளர்ச்சி, சொத்து வளர்ச்சி கொடுக்கும் குரு பெயர்ச்சி உங்கள் வாழ்க்கையை சோதித்து பார்த்து பின்னர் நலன்களை கொடுப்பார்.
வருமானம் உயராமல் ஒரே வருமானத்தில் பல வருடம் வேலை பார்த்த நிலை இருந்தது. அதீத கடன் இருந்தது. குடும்பத்தில் கஷ்டம் இருந்தது. திருமண உறவில், காதல் உறவில் சிக்கல் இருந்தது. ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை என்றாலும் பயம் அதிகம் இருந்தது. எந்த விஷயத்திலும் முடிவு எடுக்க முடியாத மோசமான சூழல் நிலவியது. இதெல்லாம் இந்த குரு பெயர்ச்சியோடு மாற போகிறது.












Click it and Unblock the Notifications