Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜனவரி மாத ராசி பலன் 2023 : மகாலட்சுமி யோகம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தேடி வரப்போகுதாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகாலட்சுமியின் அருள் இந்த மாதம் சில ராசிக்காரர்களுக்கு கிடைக்கப்போகிறது. 2023 ஆம் ஆண்டின் முதல் மாதம் ஜனவரி மாதம். இந்த மாதத்தில் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் இருக்கும். இந்த மாதம் நிறைய கிரக மாற்றங்கள் உள்ளன. சூரியன் 15 நாட்கள் தனுசு ராசியிலும் பிற்பகுதியில் மகர ராசிக்கும் செல்கிறார். செவ்வாய் பகவான் வக்ர காலம் முடிவுக்கு வரப்போகிறது. மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சியாக உள்ளார். இந்த மாதம் இறுதி வரைக்கும் புதன் பகவான் தனுசு ராசியில் பயணம் செய்யப்போகிறார். மகர ராசியில் சனியும் சுக்கிரனும் மீன ராசியில் குருவும், மேஷ ராசியில் ராகுவும் துலாம் ராசியில் கேதுவும் பயணம் செய்கின்றன. சுக்கிரன் மகர ராசியிலும் பின்னர் கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். நவகிரகங்களின் சஞ்சாரம் பார்வை, கூட்டணியைப் பொருத்து கன்னி, துலாம், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஜனவரி மாதம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

கன்னி

 January matha Rasi palan 2023 tamil Prediction for Kanni Thulam,and Viruchigam

ராசிநாதன் புதன் உங்களுக்கு சாதகமான பலனை தரப்போகிறார். சனி பெயர்ச்சி ஆறாம் வீட்டிற்கு வருகிறார். எதிரிகள் தொல்லைகள் நீங்கும். குருவின் பார்வையால் திருமண யோகம் கைகூடி வரப்போகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும். வரன் பார்க்கத் தொடங்கலாம். காதலிப்பவர்களுக்கு இது நல்ல மாதம். அறிவுப்பூர்வமாக யோசித்து முடிவு செய்வது நல்லது. மாணவர்களுக்கு இது நல்ல மாதம். குருவின் வீட்டில் புதன் பயணம் செய்கிறார். உயர்கல்விக்காக உற்சாகமாக திட்டமிடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. கடன் பிரச்சினைகள் மன அழுத்தத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கும். பண வருமானம் அதிகரிக்கத் தொடங்கும் போது கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். இரண்டாம் வீட்டில் கேது இருப்பதால் வாக்கு கொடுத்து மாட்டிக்கொள்ளாதீர்கள். அலுவலகத்தில் உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிநாடுகளில் இருப்பவர்கள் சொந்த ஊரில் வீடு கட்ட தொடங்குவீர்கள். வண்டி வாகன யோகம் கை கூடி வரப்போகிறது.

துலாம்

January matha Rasi palan 2023 tamil Prediction for Kanni Thulam,and Viruchigam

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே..உங்கள் ராசிநாதன் இந்த மாதம் முழுவதும் சனியுடன் சேர்ந்து பயணம் செய்யப்போகிறார். தடைகள் எல்லாம் பொடிப்பொடியாக நொறுங்கப்போகிறது. புதிய முயற்சிகளுக்கு வெற்றிகள் கிடைக்கப்போகிறது. நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியும் மன நிம்மதியும் உண்டாகும். ஜனவரி மாதத்தில் உங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படப்போகிறது. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உற்சாகமாக இருப்பீர்கள். இந்த மாதம் உங்களுக்கு அற்புதமாக இருக்கப்போகிறது. நினைத்த காரியம் நிறைவேறப்போகிறது. இந்த மாதம் திருமணம் சுப காரியம் தொடர்பாக பேச வேண்டாம் மாசி மாதம் வரை தள்ளிப்போடுங்கள். அஷ்டமத்து செவ்வாய் உங்களுக்கு சின்னச் சின்ன தடைகளை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு இந்த மாதம் அற்புதமான மாதம். திறமைகள் வெளிப்படும். குருவின் ஆசியால் புதிய வித்தைகளை கற்றுக்கொள்வீர்கள். குடும்பத்தில் பெண்களுக்கு சில சிக்கல்களை ஏற்படுத்தும். உங்கள் குடும்ப விசயத்தில் அடுத்தவர்களை தலையிட விட வேண்டாம். வண்டி வாகன வசதிகள் வாங்க யோகம் கைகூடி வரப்போகிறது. கணவன் மனைவி இடையே ஊடல்கள் வர வாய்ப்பு உள்ளது பேச்சில் நிதானம் அவசியம். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கப்போகிறது. முழு நம்பிக்கையோடு எதையும் செய்யத் தொடங்குங்கள்.

விருச்சிகம்

January matha Rasi palan 2023 tamil Prediction for Kanni Thulam,and Viruchigam

விருச்சிக ராசிக்காரர்களே.. உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஏழாம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை பார்வையிடுகிறார். சுக்கிரன் சனியோடு இணைந்து மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். மாத பிற்பகுதியில் நான்காம் வீட்டில் சனி சுக்கிரன் கூட்டணி சேரப்போகிறது. மகாலட்சுமி யோகம் கிடைக்கப்போகிறது. பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு பயணம் செய்வது அதிர்ஷ்டம். அர்த்தாஷ்டம சனியாக இருந்தாலும் சச யோகத்தை தரப்போகிறார். தடைகளைத் தாண்டி சுப காரியங்கள் நடைபெறும். சூரியன் மாத பிற்பகுதியில் நான்காம் வீட்டிற்கு செல்வது சிறப்பு. நல்ல வேலை கிடைக்கும். பண வருமானம் அதிகரிக்கும். மன நிறைவு உண்டாகும். உங்கள் ஆரோக்கியத்திலும் மனைவியின் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. குரு பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் குரு பலன் வந்திருக்கிறது. திருமணம் சுப காரியம் கைகூடி வரும். வாக்கு ஸ்தானத்தில் புதன் இணைந்துள்ளதால் பேச்சில் இனிமை கூடி வரும். உறவுகளுடன் கூடி இனிமையான பயணம் செல்வீர்கள். எதையும் யோசித்து முடிவு செய்வீர்கள். மாணவர்களுக்கு நல்ல மாதம் என்றாலும் எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு செய்வது நல்லது. இல்லத்தரசிகளின் திறமை பளிச்சிடும். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்கள் வாங்குவீர்கள். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். அர்த்தாஷ்டம சனி காலம் என்பதால் உங்களின் உடல் ஆரோக்கியத்திலும் அம்மாவின் உடல் ஆரோக்கியத்திலும் அக்கறை தேவை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+