ஜனவரி மாத ராசி பலன் 2023 : வேலையில் புரமோசன்..இடமாற்றம் இந்த 2 ராசிக்காரர்களுக்கு வரப்போகுதாம்
சென்னை: 2023 ஆம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாதத்தில் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் இருக்கும். இந்த மாதத்தில் நிறைய கிரக மாற்றங்கள் உள்ளன. சூரியன் 15 நாட்கள் தனுசு ராசியிலும் பிற்பகுதியில் மகர ராசிக்கும் செல்கிறார். செவ்வாய் மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சியாக உள்ளார். இந்த ஆண்டு இறுதி வரைக்கும் புதன் பகவான் தனுசு ராசியில் பயணம் செய்யப்போகிறார். மகர ராசியில் சனியும் சுக்கிரனும் மீன ராசியில் குருவும், மேஷ ராசியில் ராகுவும் துலாம் ராசியில் கேதுவும் பயணம் செய்கின்றன. சுக்கிரன் மகர ராசியிலும் பின்னர் கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப் போகிறார். நவகிரகங்களின் சஞ்சாரம் பார்வை, கூட்டணியைப் பொருத்து மிதுனம், கடகம்,சிம்ம ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு ஜனவரி மாதம் நிறைய நன்மைகளைத் தரப்போகிறது. இது பயணங்களுக்கு உரிய மாதம். சுப மங்கள காரியங்கள் நடைபெறும். திருமணம் சுப காரியங்கள் நடைபெறப்போகிறது. அஷ்டமத்து சனியில் இருந்து விடுதலை கிடைக்கப்போகிறது. சனி பகவான் பாக்ய ஸ்தானத்திற்கு செல்லப்போகிறார். இதுநாள் வரை பல்வேறு பிரச்சினைகளை அனுபவித்தவர்கள் இனி நிம்மதி பெருமூச்சு விடலாம். சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்கள் கவனத்தோடும் எச்சரிக்கையாகவும் இருப்பது அவசியம். நிறைய பண வருமானம் வரும். மாத பிற்பகுதியில் எதிர்பாலினத்தவர்களிடம் பேசும் போது கவனம் தேவை. காதல் விவகாரங்கள் சிக்கலை ஏற்படுத்தி விடும். சனி பெயர்ச்சிக்குக் பிறகு குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் கவனமாக இருப்பது அவசியம். தகப்பன் வழி உறவினர்களின் உதவி கிடைக்கும். லாப ஸ்தான ராகு செல்வ செழிப்பை தரப்போகிறார்.
கடகம்

சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே.. நீங்கள் கொஞ்சம் கவனமாகவும் முன்னெச்சரிக்கையுடனும் இருப்பது நல்லது. குடும்பத்தில் சுப செய்திகள் வரப்போகிறது. மனம் போல மாங்கல்யம் தேடி வரப்போகிறது. வேலை செய்யும் இடத்தில் பிரச்சினைகளும் நெருக்கடிகளும் வந்து போகும். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு இந்த மாதம் கிடைப்பதால் பண வருமானம் வரும். சனி பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு வரப்போகிறார். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகள் சொல்வதைக் கேட்டு நடப்பது நல்லது. வண்டி வாகனங்களில் செல்லும் போது பயணங்களில் நிதானம் தேவை. சிலருக்கு திடீர் வேலை மாற்றங்கள் ஏற்படும். தோல் பிரச்சினைகள் வரலாம். கண் பிரச்சினைகள் எட்டிப்பார்க்கும். தினசரி சூரிய பகவானை வணங்க நன்மைகள் நடைபெறும். நினைத்த காரியம் நிறைவேற நீங்கள் செவ்வாய்கிழமை ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபடுங்கள்.
சிம்மம்

சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே..நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். வாழ்த்து மழையில் நனையப்போகிறீர்கள். ஜனவரி மாதத்தில் இருந்து உங்களுக்கு யோகம் ஆரம்பிக்கப்போகிறது. அரசுத்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு யோகமான காலமாக அமைந்துள்ளது. நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கப்போகிறது. நினைத்த காரியம் நிறைவேறப்போகிறது. வேலையில் புரமோசன் கிடைக்கப்போகிறது. பண வருமானமும் அதிகரிக்கும். உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கப்போகிறது. பிசினஸில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கப்போகிறது. மாத பிற்பகுதியில் சுக்கிரன் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கப்போகிறது. வீடு சுபிட்சமடையப்போகிறது. திடீர் பண வரவு வருவதைப்போல திடீர் செலவுகளும் வந்து திக்குமுக்காட வைக்கும். உற்சாகமாக இந்த மாதத்தை அனுபவிக்கப் போகிறீர்கள். வேலை விசயமாக செல்லும் பயணங்களில் வெற்றிகள் கிடைக்கும்.
-
Viruchigam: விருச்சிக ராசிக்கு ராஜயோகம்.. சொல்லி அடிக்கும் யோக காலகட்டம் -
குருப்பெயர்ச்சியால் வரப்போகும் மாற்றம்.. மகர ராசிக்கு இந்த வாரம் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
குருவின் அருளால் தனுசு ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 3 அதிர்ஷ்ட நாட்களில் கொட்டும் பணம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications