ஜனவரி மாத ராசி பலன்: சிங்கம் போல மாறும் சிம்ம ராசி.. அஷ்டமசனியிலும் அதிர்ஷ்டம்.. வேலையில் கவனம்
January matha palan: 2026 ஆம் ஜனவரி மாதம் தொடக்கத்தில் ரிஷப ராசியில் சந்திர பகவான் இருக்கிறார். மிதுன ராசியில் குரு பகவானும், சிம்ம ராசியில் கேது பகவான் இருக்கிறார். தனுசு ராசியில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய 4 கிரகங்கள் உள்ளன. கும்பத்தில் ராகு பகவானும், மீனத்தில் சனி பகவானும் இருக்கின்றனர். இந்த கிரகங்களின் அடிப்படையில் சிம்ம ராசிக்காரர்களுக்கு ஜனவரி மாதம் எப்படி இருக்கும். என்ன பலன்கள் கிடைக்கும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு 5, 8 ஆம் இடத்துக்கும் அதிபதியான குரு பகவான் லாபத்தில் இருக்கிறார். அதனால், அற்புதமான தன லாபம் ஏற்படும். பிள்ளைகள் அப்பாவின் பேச்சை கேட்காமல் இருந்தாலும் அவர்கள் உங்கள் மீது அன்பாக இருப்பார்கள். தொழிலில் தடை வந்து நிவர்த்தியாகும். சிக்கல்கள் இருந்தாலும் அதன் பின்பு பெரிய யோகத்தைப் பெறுவீர்கள்.

மதிப்பு மரியாதை கூடும்
ராசியில் கேது பகவான் இருப்பதால் தினந்தோறும் காலையில் தோப்புக்கரணம் போடுவது, விநாயகரை வழிபாடு செய்வது ஏற்றத்தை ஏற்படுத்தும். உங்களுடைய மதிப்பு, மரியாதை செல்வாக்கு கூடும். உங்களை சுற்றி எத்தனை சூழ்ச்சிகள் இருந்தாலும் அதனை ஜெயித்து வருவீர்கள். நிறைய பேருக்கு பதவி உயர்வு கிடைக்கும். தன லாபம் கிடைக்கும்.
புதாத்திய யோகம்
சூரியனும், புதனும் சேர்ந்திருப்பதால் புதாத்திய யோகம் உண்டாகும். தனலாபத்தைக் கொடுக்கும். புத்திசாலித்தனமாக, சுறுப்பாக செயல்படுவீர்கள். பிள்ளைகளுடைய சப்போர்ட் கிடைக்கும். பண வரவுக்குப் பஞ்சமே இருக்காது. நல்ல பதவிகள் கிடைக்கும். பண வரவே இல்லை என்பவர்களுக்கு தனவரவு அற்புதமாக இருக்கும்.
வருமானம் பெருகும்
புதன் சுக்கிரனுடன் சேர்ந்திருப்பதால் வருமானம் பெருகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு குருவின் ஆசிர்வாதம் கிடைக்கும். புதன் 5 இல் அமர்ந்திருப்பதால் செய்யும் முயற்சிகளில் எல்லாம் வெற்றி பெறுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே தாம்பத்தியம் நன்றாக இருக்கும்.
வீடு வாங்கும் யோகம்
வியாபார ரீதியாக ஒப்பந்தங்கள் ஏற்படும். நீங்கள் போடக்கூடிய கையெழுத்து, பயணங்கள், பேசக்கூடிய பேச்சுகள் என எல்லாமே சந்தோஷத்தை தரும். கெளரவம், அந்தஸ்து ஏற்படும். படிக்கும் மாணவர்களுக்கு கல்வியில் அபிவிருத்தி உண்டாகும். அடுக்குமாடி குடியிருப்பு வாங்குவது, வீடு வாங்கும் யோகம் உணடாகும். தாயின் ஆசிர்வாதம் கிடைக்கும்.
அஷ்டமத்தில் சனி
காதல் விஷயங்களில் வெற்றி ஏற்படும். மனதிற்குப் பிடித்தவர் வாழ்க்கைத் துணையாக கிடைப்பார்கள். அலுவலகத்தில் புதிய பதவிகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் சில நன்மைகள் உண்டாகும். அஷ்டம ஸ்தானத்தில் சனி பகவான் அமர்ந்திருப்பதால் வேலை பார்க்கும் இடத்தில் பொறுமையாக செல்வது நல்லது. மேலதிகாரிகள் விஷயத்தில் கவனம் தேவை.
வெளிநாட்டுக்குச் செல்லும் யோகம் உண்டாகும். கலப்புத் திருமணம் செய்யும் வாய்ப்பு ஏற்படும். கால் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனம் தேவை. பூர்வீக சொத்துகள் கிடைக்கும்.
-
2026 குருப்பெயர்ச்சி: குரு பகவானின் அருளால் மீன ராசிக்கு வாழ்க்கை மாறப் போகிறது! -
கும்ப ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கும் குரு, புதன், சுக்கிரன்.. இந்த விஷயங்களில் மட்டும் கவனம் -
2026 குருப்பெயர்ச்சி: கும்ப ராசிக்கு கிடைக்கும் 5 பெரிய யோகங்கள்!.. லிஸ்ட் பெருசா இருக்கே -
2026 குருப்பெயர்ச்சி: மகர ராசிக்கு வாழ்க்கையை மாற்றும் அதிர்ஷ்ட காலம்! -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
Viruchigam: விருச்சிக ராசிக்கு ராஜயோகம்.. சொல்லி அடிக்கும் யோக காலகட்டம் -
குருப்பெயர்ச்சியால் வரப்போகும் மாற்றம்.. மகர ராசிக்கு இந்த வாரம் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
குருவின் அருளால் தனுசு ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 3 அதிர்ஷ்ட நாட்களில் கொட்டும் பணம் -
Thulam: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டம் திரும்புது.. புரோமோஷன் கன்ஃபார்ம் -
கடன் தீரும் அமைப்பு.. சிம்ம ராசிக்கு அடிக்கும் ராஜயோகம்.. இந்த வாரத்தில் குட்நியூஸ் உறுதி -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு தொழில் மூலம் அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் வரப்போகுது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications