ஜனவரி மாத ராசி பலன் 2022 : இந்த 4 ராசிக்காரர்களில் யாருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது
ஜனவரி மாதத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரம், பார்வைகளைப் பொறுத்து துலாம், விருச்சிகம், தனுசு, மகரம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
சென்னை: புத்தாண்டு பிறந்துள்ளது. 2022 ஆம் ஆண்டின் முதல் மாதம் இந்த மாதத்தில் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் இருக்கும். நோய் தொற்று பரவலும் அதிகரித்து வருகிறது. முதல் தேவை நல்ல ஆரோக்கியம்தான். நவகிரகங்களின் சஞ்சாரம் பார்வை, கூட்டணியைப் பொருத்து துலாம், விருச்சிகம், தனுசு, மகரம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
இந்த மாதம் நிறைய கிரக மாற்றங்கள் உள்ளன. சூரியன் 15 நாட்கள் தனுசு ராசியிலும் பிற்பகுதியில் மகர ராசிக்கும் செல்கிறார். செவ்வாய் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பயணம் செய்வார். புதனும், சுக்கிரனும் வக்ர நிலையில் பயணம் செய்கின்றன. கும்ப ராசியில் குருவும், ரிஷபத்தில் ராகுவும் விருச்சிகத்தில் கேதுவும் பயணம் செய்கின்றன.
துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசிகளில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் நிறைய நன்மைகளும் சில பாதிப்புகளும் கலந்த மாதமாக உள்ளது. எந்த ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன் கிடைக்கும் என்று தனித்தனியாக பார்க்கலாம்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு ஜனவரி மாதத்தில் எப்படி இருக்கிறது என்று பார்த்தால் இரண்டாம் வீட்டில் கேது செவ்வாய் இருக்க சந்திரன் இரண்டாம் வீட்டில் இணைந்து மாதம் தொடங்கியுள்ளது. ராசிநாதன் சுக்கிரன் மூன்றாம் வீட்டிலும், நான்காம் வீட்டில் சனி, புதன், எட்டாம் வீட்டில் என கிரகங்கள் பயணம் செய்கின்றன. வேலையில் அற்புதங்கள் நிகழும். கவுரவம் மரியாதை கை கூடி வரும், வேலை செய்யும் இடத்தில் அங்கீகாரம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு கூடும். புரமோசனும் சம்பள உயர்வும் அதிகரிக்கும். அர்தாஷ்டம சனியோடு புதன் கூட்டணி அமைத்துள்ளதால் யோகமும் அதிர்ஷ்டமும் கை கூடி வரும்.
சொத்து வாங்க வீடு கட்ட நேரம் வந்துள்ளது. சனிபகவான், புதன் பகவான் பார்வையால் எதிர்பாராத மாற்றம் ஏற்படப்போகிறது. உங்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறும். கணவன் மனைவி இடையேயான நெருக்கம் அதிகரிக்கும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும்.
மாத பிற்பகுதியில் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் சுக்கிரன் செவ்வாய் இணைந்து பயணம் செய்கிறார். உடன் பிறப்புகளின் உதவி கிடைக்கும். திருமண சுப காரிய முயற்சிகளில் வெற்றிகள் தேடி வரும். மனதிற்கு பிடித்த வரன் அமையும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சிகள் அதிகரிக்கும். குடும்பத்தினர் இணைந்து காதலை திருமணத்தில் முடித்து வைப்பார்கள். தை மாதத்தில் கெட்டிமேளம் கொட்டப்போகிறது. குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு சுப செய்திகள் கிடைக்கும் புத்திரபாக்கியம் கை கூடி வரும். மாணவர்களுக்கு தைரியம் தன்னம்பிக்கை கூடும். வெளிநாடு செல்ல நல்ல மாதம். மொத்தத்தில் ஜனவரி மாதம் அதிர்ஷ்டங்கள் நிறைந்த அற்புதமான அமைந்துள்ளது.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்கு ஜனவரி மாதம் நிறைய நன்மைகளைத் தரப்போகிறது. அதிர்ஷ்டத்தோடு ஆரம்பிக்கிறது இந்த ஆண்டு. சுப வீட்டில் சுப கிரகங்கள் இணைவதால் நன்மைகள் நடைபெறப்போகிறது. குருவின் பார்வையால் உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கப் போகிறது. 2022ஆம் ஆண்டு உங்களுக்கு வேலையில் புரமோசனும் சம்பள உயர்வும் அதிகரிக்கும். நேர்மறை எண்ணங்களும் கை கூடி வரும். கஷ்டங்கள் கவலைகள் மறைந்து நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். வரன் பார்ப்பவர்களுக்கு நல்ல காலம் வந்து விட்டது. தை மாதத்தில் கெட்டி மேளம் கொட்டப்போகிறது. காதல் வாழ்க்கை திருமணத்தில் தடைகளைத் தாண்டி கை கூடி வரும். திருமணமான தம்பதியினருக்கு முயற்சிகள் கை கூடி வரும். சூரியன் மூன்றாம் வீட்டிற்கு செல்லப்போவதால் மாணவர்களுக்கு உயர்கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். காரிய வெற்றிகள் கை கூடி வரும். சொத்து சேர்க்கை ஏற்படும். வீடு வாங்க நேரம் கூடி வந்துள்ளது. உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் நீங்கி சுறுசுறுப்பு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக செல்ல வேண்டும் என்று நினைத்த இடங்களுக்கு குடும்பத்தோடு சென்று மகிழ்வீர்கள். மொத்தத்தில் ஜனவரி மாதம் நினைத்து நிறைவேறக்கூடிய அதிர்ஷ்டம் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது.

தனுசு
ஜனவரி மாதத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு சுப காரியங்கள் கை கூடி வரும். அழகும் பொலிவும் அதிகரிக்கும். புதிய உறவுகளுடன் இணையப்போகிறீர்கள். ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். இந்த மாதம் தர்ம கர்மாதிபதி யோகம் கை கூடி வரப்போகிறது. வேலையில் முன்னேற்றம் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த இடத்திற்கு இடமாற்றம் உண்டாகும். இருக்கும் வேலையில் புரமோசன் கிடைக்கும். எதையும் திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். நல்ல நேரம் கை கூடி வந்துள்ளது. ஏழரை சனியின் கடைசி கட்டத்தில் இருக்கிறீர்கள். வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். சண்டை சச்சரவுகள் முடிவுக்கு வரும். திருமண சுப காரியங்கள் கை கூடி வரப்போகிறது. கணவன் மனைவி இடையேயான பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். புத்திரபாக்கியம் கை கூடி வரும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி இந்த மாதம் தேடி வரும். இல்லத்தரசிகளுக்கு பொறுப்புகள் கூடும். நோய்களைப் பற்றிய பயம் நீங்கும். கண்களில் பிரச்சினை ஏற்பட்டாலும் எளிதில் குணமடையும். மாணவ மாணவர்களுக்கு இது நல்ல மாதம். போட்டித்தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதத்தில் சில நேரங்களில் தடைகள் குறுக்கிட்டாலும் தடைகளைப் படிக்கட்டுகளாக்கி வெற்றியடைவீர்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் வேலையில் புதிய மாற்றங்கள் ஏற்படும். சுக்கிரன் விரைய ஸ்தானத்தில் இருந்தாலும் கேட்ட இடத்திற்கு வேலையில் இடமாற்றம் கிடைக்கும். புதிய வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டாம். பணத்தை பத்திரப்படுத்துங்கள். தேவையற்ற செலவுகளைத் தவிர்த்து விடுங்கள். திருமண சுப காரியங்களில் சில தடைகள் வரலாம். பெரிய அளவில் எதிர்பார்ப்புகளைத் தவிர்த்து விடுங்கள். கணவன் மனைவி இடையேயான சிக்கல்கள் நீங்கும். அதே நேரத்தில் குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு சில தாமதங்கள் ஏற்படலாம். மாணவர்களுக்கு சில அழுத்தங்கள் வரலாம். மாணவர்களுக்கு மன குழப்பங்கள் வரலாம். முக்கிய முடிவுகளை இந்த மாதம் எடுக்காமல் தள்ளிப்போடவும். பெரிய அளவில் குழப்பிக்கொள்ள வேண்டாம். ஏழரை சனி ஜென்ம சனி நடைபெறுவதால் வண்டி வாகனம் வாங்குவதை தள்ளிப்போடவும். வீடு வாங்குவதற்கு சொத்து இது சரியான நேரமல்ல. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். வலியும் வேதனையும் மனதையும் உடலையும் பாதிக்கும். பெண்கள் கவனமாக இருப்பது நல்லது. மின்சாதன பொருட்களை கையாளும் போதும் வண்டி வாகனங்களில் செல்லும் போதும் விழிப்புணர்வு தேவை. மொத்தத்தில் மகர ராசிக்காரர்கள் இந்த மாதத்தில் கவனமாகவும் நிதானமாகவும் இருக்க வேண்டிய காலகட்டமாகும்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications