Dhanusu: தனுசு ராசிக்கு நிலத்தில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டதெல்லாம் தங்கமாக மாறப் போகுது
ஜனவரி மாத பலன்: 2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் நுழைந்துவிட்டோம். இந்த ஜனவரி மாதத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், தொழில் எப்படி இருக்கும், பணவரவு இருக்குமா, பிரச்சனைகள் தீருமா என்பது குறித்து பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்வது வழக்கம். இந்த கிரக மாற்றமானது மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். 2026 புத்தாண்டில் பல்வேறு கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த ஜனவரி மாதத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு 8 ஆம் இடத்தில் குரு பகவான் மறைந்திருந்தார். இதனால், உடலும், மனமும் அதீத பாதிப்புகளைச் சந்தித்திருக்கும். மனதளவில் ரொம்ப சோர்வாகி இருப்பீர்கள். தேவையில்லாத மன அழுத்தம் ஏற்பட்டிருக்கும். ஏன் எனக்கும் மட்டும் இப்படி எல்லாம் நடக்கிறது என்பது போன்ற நிலைமைகள் இருந்திருக்கும். வயிற்று வலி, குடல், கிட்னி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சந்தித்திருப்பீர்கள்.
7 ஆம் இடத்தில் குரு
வயது ஏறிக் கொண்டே இருப்பதால் சாப்பிடும் அளவை குறைத்துக்கொள்வது நல்லது. இயற்கையான உணவுகளை சாப்பிடுவது, நல்ல உடற்பயிற்சி செய்வது போன்றவற்றில் கவனம் செலுத்துவது நன்மை பயக்கும். பதவி உயர்வில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். மேலதிகாரிகளிடம் சிறு சிறு பிரச்சனைகள் வந்திருக்கும். தற்போது, 7 ஆம் இடத்தில் குரு வருவதால் நிறைய நன்மைகள் கிடைக்கும்.
திருமண யோகம்
திருமண யோகம் ஏற்படும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் ஏற்படும். 7ஆம் இடத்து குரு பகவான் 11 ஆம் இடத்தைப் பார்க்கிறார். ஏற்கனவே சனி 4 ஆம் இடத்தில் அமர்ந்து உங்களை பிரபலப்படுத்த காத்திருக்கிறார். சனி 10 ஆம் இடத்தைப் பார்ப்பதால் பெயர், புகழ் கிடைக்கும். குரு பகவான் 11 ஆம் இடத்தையும் பார்ப்பதால் உடலில் உறுதி ஏற்படும். யோகா, தியானம் செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும்.
நிலம் வாங்கும் யோகம்
ராசியில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் இருக்கின்றனர். நீங்கள் நினைத்த காரியங்களை எல்லாம் செய்து முடிக்கும் யோகம் உள்ளது. மனதில் ஒரு நிலையில் இல்லாமல் எதையாவது சிந்தித்துக் கொண்டே இருக்கும். 2 ஆம் இடத்தில் செவ்வாய் உச்சம் பெறுவதால் புத்திர பாக்கியம் உண்டாகும். நிலம் வாங்குவது, பூமி வாங்குவது, திருமண யோகம் உண்டாகும். அரசு வேலைகள் கிடைக்கும்.
வெற்றி மேல் வெற்றி
புதன் பகவான் 2 ஆம் இடத்துக்கு வருவதால் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். நிறைய பண வரவு ஏற்படும். பொருளாதாரத்தில் நல்ல ஏற்றம் உண்டாகும். எதைத் தொட்டாலும் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். பணம், புகழ் ஏற்படும். உடம்பை கவனித்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகத்தில் நல்ல ஏற்றத்தைப் பெறுவீர்கள்.
-
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
ஜூன் மாத பலன்: மேஷ ராசிக்கு ஜூனில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.. நினைத்தது நிறைவேறும் யோகம் -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
குருப்பெயர்ச்சி: குருவின் அருளால் துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்? -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications