ஜனவரி மாத பலன்: மேஷ ராசியினருக்கு வீடு தேடி வரும் அதிர்ஷ்டம்.. தொட்டது துலங்கும் காலம்
January matha palan: 2026 ஆம் ஜனவரி மாதம் தொடக்கத்தில் ரிஷப ராசியில் சந்திர பகவான் இருக்கிறார். மிதுன ராசியில் குரு பகவானும், சிம்ம ராசியில் கேது பகவான் இருக்கிறார். தனுசு ராசியில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய 4 கிரகங்கள் உள்ளன. கும்பத்தில் ராகு பகவானும், மீனத்தில் சனி பகவானும் இருக்கின்றனர். இந்த கிரகங்களின் அடிப்படையில் மேஷ ராசிக்கார்களுக்கு ஜனவரி மாதம் எப்படி இருக்கும். என்ன பலன்கள் கிடைக்கும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு செல்வ வரவை கொடுக்கக்கூடிய வகையில் கிரக நிலைகள் உள்ளன. ராசிக்கு 2 வது இடமான தன ஸ்தானத்தில் சந்திரன் இருக்கிறார். பெரிய வெற்றிகள் கிடைக்கும். நல்ல பொருளாதார உயர்வு உண்டாகும். அம்மாவுடைய வழிகாட்டுதல், அன்பு கிடைக்கும். இளைஞர்கள், சிறுவர்கள் அடுத்தகட்டத்துக்குச் செல்ல அம்மாவுடைய வழிகாட்டுதல்கள் கிடைக்கும்.

வசீகரம் பெருகும்
உங்களுடைய பேச்சு நன்றாக இருக்கும். முகத்தில் வசீகரம் அருமையாக இருக்கும். சுக்கிர பகவான் 9 ஆம் இடத்தில் அமர்ந்து மாதம் துவங்குவதால் மாதத்தில் இரண்டாம் பகுதியில் திருமணம் உறுதியாகும். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடக்கும். பெண்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும்.
வெளிநாடு செல்லும் யோகம் ஏற்படும்.
செல்வம் பெருகும்
2 ஆம் இடத்தில் இருக்கும் கிரகம் 9 ஆம் இடத்தில் உட்கார்ந்தால் மிகுந்த விசேஷமாகும். அதனை 11 ஆம் இடத்து கிரகமான சனி பார்ப்பதால் செல்வ வளம் பெருகும். இந்த மாதம் செல்வ வளம் பெருகும் மாதமாக இருக்கும். 3 ம் இடத்தில் இருக்கும் குரு பகவான் நல்ல தகவல் தொடர்பை கொடுப்பார். பயணங்கள் எல்லாம் சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் அமையும். சுபகாரியங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள்.
வெளிநாடு செல்லும் யோகம்
வெளியூர், வெளிநாடு செல்லும் யோகம் ஏற்படும். எந்தப் பயணம் வந்தாலும் ஏற்றுக் கொள்வது நல்லது. சொத்து சுகங்கள் பெருகும். வீடு, கடை கட்டி வாடகைக்கு விடும் யோகம் ஏற்படும். அம்மாவின் உடல்நிலையில் இருந்த பிரச்சனை தீரும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். தேக ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். புதன் 9 ஆம் இடத்தில் அமர்ந்துள்ளாதல் வியாபார ஒப்பந்தங்களை செய்வீர்கள்
புகழ் கிடைக்கும்
வெளிநாட்டு பயணம் சிலருக்கு கூடிவரும். தொண்டை சம்பந்தப்பட்ட பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. எழுத்தாளர்கள், பேச்சாளர்களுக்கு நல்ல அங்கீகாரம், புகழ் கிடைக்கும். 5 ஆம் இடத்தில் கேது பகவான் இருப்பதால் விசேஷமான அமைப்பாக இருக்கும். சூரியன் 9 இல் அமர்ந்து குரு பார்ப்பதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
வியாதிகள் நீங்கும்
காதலில் இருப்பவர்களுக்கு, கணவன், மனைவிக்கிடையே ஊடல் அதிகரிக்கும். மருத்துவர்களுக்கு நல்ல பெயர்கள் கிடைக்கும். மேஷ ராியினர் தொடக்கூடிய வியாதிகள் அனைத்தும் நீங்கும். ஜோதிடர்களுக்கு நல்ல பெயர், புகழ் கிடைக்கும் யோகம் ஏற்படும். வணிகவியல் படித்த மாணவர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். சுக்கிரன் குரு பார்வையை பெறுவதால் திருமணம் கூடிவரும்.
திடீர் வருமானம்
திருமணப் பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடக்கும். அஷ்டமாதிபதி செவ்வாய் பகவான் ராசிக்கு 9 ஆவது ஸ்தானத்தில் இருப்பதால் திடீர் வருமானம், அதிர்ஷ்ட வருமானம் ஏற்படும். ஆரோக்கியத் தடை, வியாபாரத் தடை நீங்கும், வெளிமாநிலம், வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு கிடைக்கும். தந்தை வழி உறவுகளில் ஏற்றம் பெறுவீர்கள். 9 ஆம் இடத்தில் 4 கிரகங்கள் வலிமையாக உள்ளதால் அனைத்து துறைகளிலும் புகழ், பிரபலம் கிடைக்கும். துர்க்கை வழிபாடு ஏற்றத்தை தரும்.
-
ஜூன் மாத பலன்: மேஷ ராசிக்கு ஜூனில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.. நினைத்தது நிறைவேறும் யோகம் -
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
ஜூன் முதல் 20 நாட்கள் கவனம்.. கோபம் கட்டுப்படுத்தினால் வெற்றி நிச்சயம்..குரு சுக்கிரன் அருளால் பணமழை -
Simmam: ஜூன் 15க்கு பிறகு சிம்மத்தின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்!.. குரு பார்வையால் வரும் அதிர்ஷ்டம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications