ஜனவரி மாத பலன்: மிதுன ராசியினருக்கு வெளிநாடுக்கு பறக்கும் யோகம்.. யாரையும் புண்படுத்தாதீங்க
January matha palan: 2026 ஆம் ஜனவரி மாதம் தொடக்கத்தில் ரிஷப ராசியில் சந்திர பகவான் இருக்கிறார். மிதுன ராசியில் குரு பகவானும், சிம்ம ராசியில் கேது பகவான் இருக்கிறார். தனுசு ராசியில் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய 4 கிரகங்கள் உள்ளன. கும்பத்தில் ராகு பகவானும், மீனத்தில் சனி பகவானும் இருக்கின்றனர். இந்த கிரகங்களின் அடிப்படையில் மிதுன ராசிக்காரர்களுக்கு ஜனவரி மாதம் எப்படி இருக்கும். என்ன பலன்கள் கிடைக்கும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு அதிபதி புதனும், குருவும் பரிவர்த்தணை அடைவதால் இந்த மாதம் உங்களுக்கு திருமணம் உறுதியாகும். முகத்தில் பொலிவு ஏற்படும். வெளிநாட்டு யோகம் கூடி வரும். வெளிநாடு வேலை, படிப்பிற்காகச் செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இருந்த வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். பொருளாதாரத் தடைகள் நீங்கும். சந்திரன் 12 இல் இருப்பதால் நிறைய செலவுகள் ஏற்படும். அதனை சுபச் செலவுகளாக மாற்றிக் கொள்வது நல்லது.

செலவுகள் வரும்
தாயின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நன்மை பயக்கும். யாரையும் புண்படுத்தாமல் இருப்பது நல்லது. நிறைய செலவுகள் வரும். குடும்பத்திற்காக செலவழிப்பது நல்லது. குடிப்பதற்கு தண்ணீர் கொடுப்பது நன்மை பயக்கும். குழாயில் தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தால் அதனை சரிசெய்து கொள்வது வழக்கம். சாலைகளில் உமிழ்நீரை துப்புவதைத் தவிர்ப்பது நல்லது.
முயற்சிகளில் வெற்றி
3 ஆம் இடத்தில் கேது பகவான் இருப்பதால் அக்கம்பக்கத்தினருடன் நல்லுறவை ஏற்படுத்தும். முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் உண்சாகும். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடக்கும். வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வீர்கள். புதன் 7 ஆம் இடத்தில் இருப்பதால் படிப்பு நன்றாக இருக்கும். காதல் விஷயங்களில் வெற்றி உண்டாகும். காதல் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் நடக்கும்.
விஐபிக்கள் தொடர்பு
நீண்டநாட்களாக இருந்து வந்த ஆரோக்கிய குறைபாடு நீங்கும். குரு ராசியில் இருப்பதால் பிரிந்து சென்ற நண்பர் மீண்டும் உங்களிடம் வருவார்கள். விஐபிக்களின் தொடர்பு கிடைக்கும். அஷ்டமாதிபதி சனி பகவான் 10 ஆம் இடத்தில் இருப்பதால் வேலையில் தொந்தரவு ஏற்படும். அப்பாவின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. அரசு ஊழியர்களைப் பகைத்துக் கொள்ளாமல் இருப்பது.
வெளிநாட்டு வாய்ப்பு
9 இல் இருக்கும் ராகு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொடுக்கும். 10 ஆம் இடத்தில் சனி இருப்பதால் சளி தொந்தரவு, தாய்க்கு தொந்தரவு ஏற்படும். வேலையில் நெருக்கடி, இடமாற்றம் ஏற்படும். இருப்பினும் அதனை சமாளிப்பார்கள். விரயத்தில் சந்திரன் இருப்பதால் செலவுகளைக் கட்டுப்படுத்துவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு சண்டை, சச்சரவுகள் ஏற்படும்.
வழிபாடு
சுக்கிரன் 7 ஆம் இடத்தில் இருப்பதால், அங்கு செவ்வாய், சூரியன் சேர்ந்திருப்பதால் கணவன், மனைவி கவனமாக இருப்பது நல்லது. மாமனார் உடல்நலனில் அக்கறை செலுத்துவது நல்லது. தினந்தோறும் கோலம் போட்டு, வீட்டில் குத்து விளக்கேற்றி பெருமாள் வழிபாடு செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
Kumbam: கும்ப ராசிக்கு ஜூனில் வரும் திருப்புமுனை.. குருவின் அருளால் அற்புத யோகம் -
Magaram: மகர ராசிக்கு 30 நாட்களில் நடக்கும் அதிசயம்.. தொழிலில் வரப்போகும் சூப்பர் மாற்றம் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள் -
துலாம் ஜூன் மாத ராசிபலன் 2026: காதல், திருமணம், பணவரவில் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications