Kanni: அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டர்.. கன்னி ராசிக்கு டபுள் தமாக்கா.. ப்ரோமோஷன் கன்ஃபார்ம்
ஜனவரி மாத பலன்: 2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் நுழைந்துவிட்டோம். இந்த ஜனவரி மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், தொழில் எப்படி இருக்கும், பணவரவு இருக்குமா, பிரச்சனைகள் தீருமா என்பது குறித்து பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்வது வழக்கம். இந்த கிரக மாற்றமானது மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். 2026 புத்தாண்டில் பல்வேறு கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த ஜனவரி மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு 4, 5 ஆம் இடங்களில் 4 கிரகங்கள், ராசிநாதன் இருப்பதால் மாதத்தின் துவக்கமே அற்புதமாக இருக்கிறது. 4, 10 ஆம் இடங்களில் குருவும், புதனும் பரிவர்த்தனை ஆகின்றனர். போன மாதத்தில் இருந்து நல்ல பலன்களைப் பெற்று வருவீர்கள். பட்டம், பதவி, உயர் பதவிகளுக்காக காத்திருப்பவர்களுக்கு ஜனவரி 15 ஆம் தேதிக்குப் பிறகு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
பதவி உயர்வு
மார்ச் மாதத்தில் பதவி உயர்வில் இருப்பீர்கள். அதற்கேற்ப சில அஸ்திவாரங்களைப் போட்டு வைப்பீர்கள். அனைத்து நிலைமைகளிலும் நன்மைகள் ஏற்படும். சிறு தொழில் வைத்திருப்பவர்களுக்கு 10, 11 ஆம் இடம் வலிமையாக உள்ளதால் நல்ல லாபங்கள் கிடைக்கும். வியாபாரம் குறையாமல் லாபங்கள் கிடைக்கும். நினைத்த மாதிரியான விஷயங்கள் நடக்கும். வியாபாரத்தை முடித்து திரும்பும்போது மன நிம்மதி ஏற்படும்.
முன்னேற்றம்
நல்ல பொருளாதார முன்னேற்றங்கள் ஏற்படும். மாதத்தின் 15 ஆம் தேதிக்குப் பிறகு சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் 5 ஆம் இடத்தில் அமர்கின்றனர். சுக்கிரனுடன் சேர்ந்து செவ்வாய் யோகத்தை ஏற்படுத்தவுள்ளார். கட்டடம் சார்ந்த தொழில்கள், பூமி சார்ந்த தொழில்கள், ரியல் எஸ்டேட் போன்ற தொழில்களைச் செய்பவர்களுக்கு முன்னேற்றம் மிகுந்த காலகட்டமாக இருக்கும்.
பணவரவு
பணப் பற்றாக்குறை ஏற்படாது. பங்குச் சந்தைகள் உங்களுக்கு கைகொடுக்கும். 15 ஆம் தேதிக்குப் பிறகு எதிர்பாராத அதிர்ஷ்டம், நன்மைகள் ஏற்படும். பெரிய சோதனைகள் எதுவும் இருக்காது. இளைய பருவத்தினருக்கு எதிர்காலம் சார்ந்த அடையாளங்கள் கிடைக்கும். பெண்களுக்கு கணவர், குழந்தைகள் பேரில் இருந்து வந்த மனக் கலங்கள் தீரும். தொழில் ரீதியான நன்மைகள் கிடைக்கும்.
ஏற்றம்
10 ஆம் இடத்தில் இருக்கும் குரு பகவான் ஜூன் மாதத்திற்குப் பிறகு 11 ஆம் இடத்துக்கு வருகிறார். தங்கம், மஞ்சள், வாத்தியார் தொழில் செய்பவர்கள், வங்கித் துறையில் இருப்பவர்களுக்கு நிறைவான நன்மைகள் கிடைக்கும் மாதமாக இருக்கும். வியாபாரம், தொழில், உத்தியோகம், படிப்பு நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். பொருளாதாரம் ரீதியாக நல்ல ஏற்றத்தைப் பெறுவீர்கள்.
-
கண்ணா 2 லட்டு திண்ண ஆசையா.. விருச்சிகத்துக்கு இந்த வாரம் அடிக்கும் ஜாக்பாட் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Rasi Palan This Week: கும்பத்திற்கு ஜாக்பாட் வாரம்.. தொழில் வளர்ச்சி, பண யோகம் -
Rasi Palan This Week: மகரத்திற்கு வெற்றி மேல் வெற்றி!.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
லக்கி பாஸ்கராகப் போகும் கன்னி ராசியினர்.. இந்த வாரத்தில் வரப்போகும் குட்நியூஸ் -
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டது துலங்கும் அற்புத காலம் -
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு எதிர்பாராத பணவரவு.. 7 நாட்களில் வரப்போகும் நல்ல மாற்றம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல்












Click it and Unblock the Notifications