Kumbam Rasi Palan: புது வீடு, புது கார் கலக்கப் போகும் கும்ப ராசி.. அடுத்தடுத்து அதிர்ஷ்டம் கொட்டும்
ஜனவரி மாத பலன்: 2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் நுழைந்துவிட்டோம். இந்த ஜனவரி மாதத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், தொழில் எப்படி இருக்கும், பணவரவு இருக்குமா, பிரச்சனைகள் தீருமா என்பது குறித்து பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்வது வழக்கம். இந்த கிரக மாற்றமானது மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். 2026 புத்தாண்டில் பல்வேறு கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த ஜனவரி மாதத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு எல்லா கிரகமும் 11 ஆம் இடத்துக்கு சென்றுவிட்டன. செவ்வாய், சுக்கிரன், புதன், சூரியன் என அனைத்து கிரகங்களும் 11 ஆம் இடத்தில் இருக்கின்றன. லாப ஸ்தானத்தில் இருக்கும் இந்த 4 கிரகங்களையும் குரு பார்க்கிறார். எந்த காரியத்தை எடுத்தாலும் அதில் சாதிக்கும் யோகம் உண்டாகும். உத்தியோகம், வேலை, தொழில், வியாபாரம், படிப்பு என எல்லா விஷயங்களிலும் முன்னேற்றம் ஏற்படும்.
தொட்டது துலங்கும்
தொட்டதெல்லாம் துலங்கக்கூடிய பொற்காலமாக இருக்கும். சகல விதமான சம்பத்துகளும் கிடைக்கும். செவ்வாய் 10 இல் இருக்கும்போது தொழில் அற்புதமாக இருக்கும். குடும்பத்துடன் சேர்ந்து வேலை பார்க்கும் யோகம் ஏற்படும். குடும்பமாக முன்னேறத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையைத் தருவார். 4, 9க்கு உடைய சுக்கிர பகவான் 11 ஆம் இடத்தில் இருக்கிறார்.
திருமண யோகம்
சுக்கிரனை குரு பார்ப்பதால் சுக்கிரனால் ஏற்படும் பாதகங்கள் தடைபடும். உயர்கல்வி, மதிப்பு, மரியாதை, உயர்கல்வி, அதிர்ஷ்டத்தை சுக்கிர பகவான் உங்களை அள்ளிக் கொடுப்பார். யோகாதிபதியான புதன் உங்களுக்கு யோகங்களை அள்ளிக் கொடுப்பார். திருமணம் நடக்கும் யோகம் உண்டாகும். குழந்தை பாக்கியம் ஏற்படும். புதனை குரு பார்ப்பதால் அற்புதமான யோகங்கள் கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
நிலம், வீடு வாங்கும் யோகம்
நிலம், வீடு வாங்கும் யோகம் ஏற்படும். புதிய வண்டி வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். 2 ஆம் இடத்தில் சனி பகவான் தன ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். இதுவரை பணம் சார்ந்து நிறைய தடைகள் நிறைந்திருக்கும். சனி பகவான் வக்கிர நிவர்த்திய அடைந்துள்ளதால் உங்களுக்கு பண வரவு நன்றாக இருக்கும். வருமானம் உயரும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி அடைவீர்கள்.
தொழிலில் முன்னேற்றம்
3க்கு உரிய செவ்வாய் பகவான் உச்சம் பெறுவதால் தொழிலில் புதிய ஆர்டர்கள் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். 10க்கு உடைய செவ்வாய் உச்சமடையும் போது பிஸியாக இருப்பீர்கள். வேலை அதிகமாக இருக்கும். அரசு வேலைக்குத் தேர்வு எழுதுபவர்களுக்கு வேலை கிடைக்கும். பழைய காதலர்களிடம் இருந்து குறுஞ்செய்தி வருவதற்கான வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது.
வழிபாடு
தேவையில்லாத விஷயங்களில் ஈடுபடுவது, தேவையில்லாத உணவு பழக்க வழக்கம், தேவையில்லாத உறவுகளில் சிக்கிக் கொள்வதை தவிர்ப்பது நல்லது. திருநாகேஸ்வரம் சென்று வருவது உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். அம்பாளை வழிபாடு செய்வது அற்புதத்தை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications