Meenam Rasi Palan: மீனம் ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் குரு, சனி பகவான்.. அதிர்ஷ்ட மழை கொட்டும்
ஜனவரி மாத பலன்: 2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் நுழைந்துவிட்டோம். இந்த ஜனவரி மாதத்தில் மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், தொழில் எப்படி இருக்கும், பணவரவு இருக்குமா, பிரச்சனைகள் தீருமா என்பது குறித்து பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்வது வழக்கம். இந்த கிரக மாற்றமானது மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். 2026 புத்தாண்டில் பல்வேறு கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த ஜனவரி மாதத்தில் மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மீனம்
மீனம் ராசிக்காரர்களுக்கு ஆசைகள் எல்லாம் நிறைவேறக்கூடிய மாதமாக இருக்கும். குரு பகவான் 5 ஆம் இடத்தில் இருந்து உங்களுக்கு நிறைய நல்ல பலன்களைக் கொடுத்திருப்பார். இப்போது 4 ஆம் இடத்துக்குச் சென்றுவிட்டார். சனி ராசியிலேயே வக்கிர நிவர்த்தி பெற்றுவிட்டார். ராசியில் இருந்த ஜென்மசனி வக்கிரம் பெற்றிருந்த நிலையில், இப்போது வக்கிர நிவர்த்தியாகிவிட்டார்.
யோகம் கொட்டும்
மிதுனம், தனுசு, மீனத்திற்குதான் சனி பகவான் 10 ஆம் இடத்தைப் பார்க்கிறார். 10 ஆம் இடத்தில் செவ்வாய், சுக்கிரன், புதன், சூரியன் இருக்கிறார். அந்த இடத்தை சனி பார்க்கிறார். செவ்வாய் 10 இல் இருப்பதால் மிகப்பெரிய அரசுப் பதவிகளைக் கொடுக்கும். 10 இல் பாவி இருந்தால் அரசனைப் போல யோகங்கள் கிடைக்கும். 10 ஆம் இடத்தில் இருக்கும் 4 கிரகங்களையும் குரு பகவான் பார்க்கிறார்.
கடன்கள் தீரும்
சனியும், குருவும் 10 ஆம் இடத்தில் இருக்கம் 4 கிரகங்களையும் பார்ப்பதால் சகலவிதமான யோகங்களும் கிடைக்கும். 2க்கு உடையன் உச்சம் பெறும்போது பண வரவு நன்றாக இருக்கம். பழைய கடன்களை எல்லாம் அடைத்து முடிப்பார்கள். கடன்களை அடைப்பதற்கான முயற்சிகள் எல்லாம் வெற்றி அடையும். லாபம் அதிகரிக்கும். தொழில் நன்றாக இருக்கும்.
நண்பரால் பிரச்சனை
11 ஆம் இடத்தில் செவ்வாய் உச்சமாவதால் பணம் கொட்டும் நேரமாக இருக்கும். அப்பாவுடைய சொத்துகள், வேலைகள் கிடைக்கும். பூமி லாபங்கள் மூலமாக பண வரவு ஏற்படும். அதிகாலை நேரங்களில் பூமி சம்பந்தப்பட்ட விஷயங்களால் உங்களுக்கு நன்மை ஏற்படும். பாதகாதிபதி புதன் 10 இல் இருந்து 11க்கு வருகிறார். இதனால், நண்பர்கள் மூலமாக பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனம் தேவை
முன்னேற்றம்
உங்களுடைய தரம் அடுத்தகட்டத்துக்குச் செல்வீர்கள். சமூகத்தில் பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். தொட்ட காரியங்கள் துலங்கும். வீடு, நிலம் வாங்குவதற்கான யோகம் ஏற்படும். தொழில் தொடர்பான விஷயங்களில் ஏற்றம் பெறுவீர்கள்.












Click it and Unblock the Notifications