Mesham Rasi Palan: ஜனவரியில் பிரகாசமாக மாறப்போகும் மேஷ ராசி.. இனி ஏறுமுகம் தான்
ஜனவரி மாத பலன்: 2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் நுழைந்துவிட்டோம். இந்த ஜனவரி மாதத்தில் மேஷம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், தொழில் எப்படி இருக்கும், பணவரவு இருக்குமா, பிரச்சனைகள் தீருமா என்பது குறித்து பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்வது வழக்கம். இந்த கிரக மாற்றமானது மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். 2026 புத்தாண்டில் பல்வேறு கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த ஜனவரி மாதத்தில் மேஷம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மேஷம்
மேஷம் ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய நல்ல மாற்றங்களைக் கொடுக்க கூடிய அமைப்பு உள்ளது. இந்த மாதத்தின் துவக்கத்திலேயே ராசிக்கு 9 ஆம் இடத்தில் ராசிநாதனான செவ்வாய் குருவின் பார்வையில் இருக்கிறார். மாதத்தின் பிற்பகுதியான 15 ஆம் தேதிக்குப் பிறகு குரு உச்சமடைகிறார். 10 ஆம் இடத்தில் சுக்கிரனுடன் குரு சுபத்துவமாக இந்த மாதம் முழுவதும் இருக்கிறார்.
பதவி உயர்வு
மனதில் தைரியம் ஏற்படும். எதையும் புத்துணர்ச்சியுடன் தொடங்கக்கூடிய சுபத்துவமான மாதமாக இருக்கும். ஜூன் மாதத்தில் இருந்து உங்களுக்கு இந்த ஆண்டு நல்ல அமைப்பு இருக்கும். வாழ்க்கைக்கு ஒரு அச்சாரம் போடும் வகையில் நல்ல அறிமுகங்கள் கிடைக்கும். 10 ஆம் இடத்தில் தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் உச்சமாகி சுபத்துவமாக இருப்பதால் இந்த மாதம் 15 ஆம் தேதிக்குப் பிறகு வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.
மாற்றங்கள் உண்டாகும்
வேலை, தொழில், வியாபாரம் செய்து வருபவர்களுக்கு கடந்த காலங்களில் இருந்து வந்த கஷ்டங்கள் அனைத்தும் விலகும். உன்னதமான நல்ல மாற்றங்கள் கிடைக்கும். பெரிய அளவில் எந்தவிதமான சோதனைகளும் இருக்காது. 10 ஆம் இடத்தில் 4 கிரகங்கள் கூடியுள்ளன. 9, 10 ஆம் இடங்களில் வலிமையாக உள்ளதால் பாக்கியங்கள் கிடைப்பதில் இதுவரை இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும்.
திருமண யோகம்
திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தைகள், உறுதி செய்வது போன்ற விஷயங்கள் இந்த தை மாதம் நடக்கும். வெளிநாடு, வெளிமாநில தொடர்பான விஷயங்களுக்கு அது தொடர்பான அனுமதிகள் கிடைக்கும். புதிதாக கிளைகள் திறப்பது, வீடு கட்டுவது, சுபவிரயங்கள் நடக்கும் தன்மை ஏற்படும். நிலம் வாங்குவது, வீடு வாங்குவது, வீடு கட்டுவது, தொழில் தொடங்குவது போன்ற சுபச் செலவுகளைச் செய்வீர்கள்.
சந்தோஷம்
ராசியின் 9, 10 ஆம் இடங்களில் பெரும்பாலான இடங்கள் தொடர்பு கொண்டிருப்பது மிகப்பெரிய யோகத்தைக் கொடுக்கும். 11 ஆம் இடம் லாப ஸ்தானம். எல்லா விஷயங்களிலும் நன்மைகள் கிடைக்கும் மனதில் சந்தோஷம் ஏற்படும். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நோய் நொடிகள் இல்லாமல் இருக்கும். நிலையான வருமானத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு நல்ல வருமானம் உண்டாகும்.
தொழில்
பெரிய சோதனைகள், சவால்கள் இல்லாம் தொட்டது துலங்கும் மாதமாக இந்த மாதம் உங்களுக்கு அமைந்துள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். சகோதரர் தொடர்பான விஷயங்களில் மேன்மைகள் கிடைக்கும் யோகம் ஏற்படும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். சகோதர மேன்மை உண்டாகும். மருத்துவம், கட்டிடம், பூமி, விளையாட்டு, அதிகாரம் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும் மாதமாக இந்த மாதம் இருக்கும்.












Click it and Unblock the Notifications