Mithunam Rasi Palan: "குறிவச்சா இரை விழணும்".. சொல்லி அடிக்கும் மிதுன ராசி.. கொட்டும் பணம்
ஜனவரி மாத பலன்: 2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் நுழைந்துவிட்டோம். இந்த ஜனவரி மாதத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், தொழில் எப்படி இருக்கும், பணவரவு இருக்குமா, பிரச்சனைகள் தீருமா என்பது குறித்து பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்வது வழக்கம். இந்த கிரக மாற்றமானது மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். 2026 புத்தாண்டில் பல்வேறு கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த ஜனவரி மாதத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு மாதத்தின் ஆரம்பத்தில் குருவும், புதனும் பரிவர்த்தனையாகியுள்ளதால் யோகமான அமைப்புகள் உள்ளன. முதல் 15 நாட்களுக்கு சூரியன், சுக்கிரன், புதன், செவ்வாய் ஆகியவை குருவின் பார்வையில் 7 ஆம் இடத்தில் இருக்கின்றன. நட்பு, கூட்டு முயற்சிகள் எல்லாம் பலிக்கும் அமைப்பு உள்ளது. கெளரவம், மதிப்பு, மரியாதை உயரும் காலகட்டமாக இருக்கும்.
முயற்சிகளில் வெற்றி
நினைப்பதை சாதிக்கக்கூடிய மாதமாக இருக்கும் என்பதால் உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் பலிக்கும். எடுத்த முயற்சிகளில் வெற்றி உண்டு. காதல் வரக்கூடிய மாதமாக இருக்கும். புதிய உறவுகள் கிடைக்கும். காதலில் தோல்வி அடைந்தவர்கள், திருமணம் தோல்வி அடைந்தது, விவாகரத்து வழக்கு போய்க் கொண்டிருப்பவர்களுக்கு, உறவில் பாதிப்புகளைச் சந்தித்தவர்களுக்கு இந்த மாதம் நல்ல மாதமாக இருக்கும்.
காதல் மலரும்
புதிய அறிமுகம், புதிய நட்பு, புதிய காதல் கிடைக்கும். இதுவரை சரிவராமல் இருந்த கூட்டு முயற்சிகள் இனி கைகூடும். பங்குச் சந்தையில் இதுவரை இல்லாத பண வரவுகள் கிடைக்கும். 8 ஆம் இடத்தில் ராசிநாதன் இருப்பதால் நல்ல பலன்கள் கிடைக்கும். பண வரவுகள் நன்றாக இருக்கும். பெரிய அளவில் பங்குச் சந்தை 16 ஆம் தேதிக்கு மேல் கைகொடுக்கும். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பணங்கள் வந்து சேரும்.
பணவரவு கொட்டும்
இழந்த பணங்கள் திரும்ப வந்து சேரும். 15 ஆம் தேதிக்குப் பிறகு வெளிநாடு, வெளிமாநிலம், பயணங்கள் போன்றவை கைகொடுக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வெளிநாடு, வெளிமாநிலம் தொடர்பான பயணங்கள் கைகொடுக்கும். தொட்டது துலங்கக்கூடிய மாதமாக இருக்கும். ராசிநாதன் குருவின் பார்வையில் பரிவர்த்தனை அடைந்து, சுக்கிரனுடம் சேர்வதால் எதிர்பாராத நல்ல முன்னேற்றம் கிடைக்கும். நல்ல நன்மைகள் கிடைக்கும்.
தொழில்
புதிய வேலை மாற்றங்கள் ஏற்படும். வியாபாரிகளுக்கு, தொழில் முனைவோர்களுக்கு, கிராமப்புறங்களில் இருப்பவர்களுக்கு, விவசாயப் பெருமக்களுக்கு நன்மைகள் அதிகளவில் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். தொழில், வியாபாரம், படிப்பு, வேலையில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். பண வரவு நன்றாக இருக்கும் மாதமாக இருக்கும்.
-
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டது துலங்கும் அற்புத காலம் -
Rasi Palan This Week: குரு சுக்கிரன் அருளால் கடக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பணத்துக்கு பஞ்சமில்லை -
Rasi Palan This Week: சிக்கலில் சிக்கும் சிம்ம ராசி.. கவனமாக இருக்க வேண்டிய 3 விஷயம் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Rasi Palan This Week: கும்பத்திற்கு ஜாக்பாட் வாரம்.. தொழில் வளர்ச்சி, பண யோகம் -
Rasi Palan This Week: மகரத்திற்கு வெற்றி மேல் வெற்றி!.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு எதிர்பாராத பணவரவு.. 7 நாட்களில் வரப்போகும் நல்ல மாற்றம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து












Click it and Unblock the Notifications