அரை நூற்றாண்டுக்குப் பின் தேடி வரப்போகும் ராஜ யோகம்.. ஜனவரியில் அதிர்ஷ்ட மழை யாருக்கு?
சென்னை: மனிதர்கள் வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். அதற்குக் காரணம் அவர்களின் பிறந்த ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்பை போல கோச்சார கிரகங்கள் கூட்டணி சேருவதால் நிகழும். இந்த ஜனவரி மாதத்தில் கிரகங்களின் கூட்டணியால் 50 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜயோகம் தேடி வருகிறது. எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
கிரகங்களின் கூட்டணி: சூரியனும் செவ்வாயும் இணைவதால் ஆதித்ய மங்கள யோகமும், குருவும் சந்திரனும் இணைந்து குரு சந்திர யோகமும், சுக்கிரனும் செவ்வாயும் இணைந்து பிருகு மங்கள யோகமும் உருவாகிறது. இந்த 3 யோகங்களும் 50 வருடங்களுக்கு பிறகு 2024 ஜனவரில்தான் ஒன்றாக நிகழ்வதால் சில ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது.

மேஷம்: குரு பார்வையில் செவ்வாய் சூரியன் பயணம் செய்கின்றனர். செவ்வாயின் வீட்டில் குருவும், குருவின் வீட்டில் செவ்வாயும் பரிவர்த்தனை பெற்று பயணம் செய்கின்றனர். அற்புதமான யோக காலம். சனி லாப வீட்டில் பயணம் செய்வதால் வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு மதிப்பு மரியாதை கூடும். கர்ம காரகன் சனியின் பயணம் சாதகமாக உள்ளது. நினைத்த காரியம் நிறைவேறும். நிறைய அதிர்ஷ்டங்கள் கிடைக்கப்போகிறது. புது புது வாய்ப்புக்கள் தேடி வரும். இறை அருளும் ஆசீர்வாதமும் நிறைந்திருக்கிறது. தை பொங்கலுக்குப் பிறகு சூரியன் பத்தாம் வீட்டில் பயணம் செய்யப்போவதால் வேலை செய்பவர்களுக்கு புரமோசன் தேடி வரும். நல்ல சம்பளத்தில் வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
ரிஷபம்: யோக கிரகங்களின் பார்வை இந்த மாதம் உங்களுக்கு கிடைப்பதால் நல்லதே நடக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாகவே இருக்கும். சூரியன் செவ்வாய் 8ஆம் வீட்டில் பயணம் செய்கின்றன. மாத பிற்பகுதியில் இரண்டு கிரகங்களுமே 9ஆம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடைகின்றன. வேலை விசயமாக புதிய முடிவுகள் முக்கியமான முடிவுகளை எடுக்காதீர்கள். இந்த மாதம் பொறுமையும் நிதானமும் அவசியம். உணவு விசயத்தில் கவனம் தேவை. மாணவர்கள் எந்த முடிவும் எடுக்கும் முன்பாக நன்றாக யோசித்து செய்வது நல்லது.
மிதுனம்: புதனை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களுக்கு நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். 2024ஆம் ஆண்டு ஆரம்பமே அற்புதமாக இருக்கும். வருமானம் தரக்கூடிய மாதமாக இந்த மாதம் அமைந்துள்ளது. குரு, ராகு கேது, சனி எல்லமோ ஆண்டு முழுவதும் சாதகமாக உள்ளது. செவ்வாய், சூரியனின் நேரடி பார்வையில் மிதுனம் உள்ளது. சூரியன் இடப்பெயர்ச்சி அடைந்தாலும் புதன் இடப்பெயர்ச்சியாகி நேர் கதியில் செவ்வாயுடன் பயணம் செய்யப்போவதால் எந்த ஒரு விசயத்தையும் யோசித்து செய்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் அதிக அளவில் பணத்தை முதலீடு செய்யும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை வீட்டில் இருப்பவர்களிடம் ஆலோசனை செய்து கொள்வது நல்லது. வேலையை விட வேண்டாம். இருக்கும் வேலையை நிதானமாக கவனமாக செய்யவும்.
கடகம்: அஷ்டம சனி சோதனைகளை கொடுத்தாலும் விபரீத ராஜயோக காலம். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கிரகங்கள் பயணம் செய்கின்றன. வேலையில் எந்த பிரச்சினையும் வராது. சூரியன் செவ்வாய் கூட்டணி புதுவித யோகத்தை தரப்போகிறது. அவசரப்பட்டு வேலையை விடாதீர்கள். தொழில் வியாபாரத்தில் பெரிய அளவில் எந்த முதலீடும் செய்யாதீர்கள். அகலக்கால் வைத்து விட்டு அவதிப்படாதீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
சிம்மம்: 2024 ஆண்டு உங்களுக்கு அற்புதமான ஆண்டுதான் என்றாலும் எதையும் நிதானமாக செய்வது நல்லது. குருவின் பார்வை உங்கள் ராசியின் மீது விழும் அதே நேரத்தில் கண்டச்சனியின் பார்வையும் உங்களுக்கு கிடைக்கிறது. நல்லதும் கேட்டதும் சேர்ந்தே வரும் என்பதால் யோசித்து செயல்படுவது நல்லது. ராகு கேதுவின் பயணமும் சுமாராகவே உள்ளது. சூரியன் செவ்வாய் இணைந்து ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கின்றனர். பூர்வ புண்ணியங்கள் கிடைக்கும். குல தெய்வத்தின் ஆசியும் தேடி வரும். மாத பிற்பகுதியில் சூரியன் ஆறாம் வீட்டிற்கு செல்வதும் சிறப்புதான். சில நாட்களில் செவ்வாயும் கூடவே இணைந்து பயணம் செய்வதால் பணம் பல வழிகளில் இருந்தும் வரும். சேமிக்க முடியாமல் கூடவே செலவுகளும் வரும். புது வேலைக்காக இந்த மாதம் முயற்சி செய்யாதீர்கள். இருக்கிற வேலையை தக்க வைத்துக்கொள்ளுங்கள்.
கன்னி: 2024ஆம் ஆண்டு ஆறாம் வீட்டில் உள்ள சனி பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வருவார். என்னதான் கிரகங்கள் சாதகமாக இருந்தாலும் உங்கள் ராசியில் உள்ள கேது மன குழப்பத்தை ஏற்படுத்துவார். எதையும் தெளிவாக முடிவெடுக்க முடியாமல் திணற வைப்பார் கேது. வேலையை விடுவது பற்றி இப்போதைக்கு யோசிக்க வேண்டாம். பண விசயத்தில் யாரையும் நம்ப வேண்டாம். கையில் இருக்கும் பணத்தை கடனாக கொடுத்து விட்டு அலையவேண்டியிருக்கும். நான்காம் வீட்டில் முதலில் சூரியன் செவ்வாய், பிற்பகுதியில் புதன், சுக்கிரன், செவ்வாய் கூட்டணி சேருவதால் வீடு, நிலம் வாங்கும் யோகம் கைகூடி வருகிறது. பெண்களுக்கு பொன்நகை சேர்க்கை அதிகரிக்கும்.
-
மகரம், கும்பம், மீனம் ராசிக்கு ஜாக்பாட் அடிக்குமா?.. ஜூன் மாதம் வரும் அற்புத மாற்றம் -
ஆனி மாத பலன்: அடித்தாடும் ரிஷப ராசி.. குரு, சனியில் அருளால் பண மூட்டையை அள்ளும் யோகம் -
June Rasi Palan 2026: துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் எப்படி? -
Rasi Palan This Week: மீன ராசியினரே கவனம்.. சனி தரும் முக்கிய பலன்கள்.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
Rasi Palan This Week: கும்பத்திற்கு ஜாக்பாட் வாரம்.. தொழில் வளர்ச்சி, பண யோகம் -
Rasi Palan This Week: மகரத்திற்கு வெற்றி மேல் வெற்றி!.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு!












Click it and Unblock the Notifications