Thulam: குரு, சுக்கிரன் அருளால் யோகம் பெறும் துலாம்.. ஜனவரி மாதத்தில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்
ஜனவரி மாத பலன்: 2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் நுழைந்துவிட்டோம். இந்த ஜனவரி மாதத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், தொழில் எப்படி இருக்கும், பணவரவு இருக்குமா, பிரச்சனைகள் தீருமா என்பது குறித்து பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்வது வழக்கம். இந்த கிரக மாற்றமானது மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். 2026 புத்தாண்டில் பல்வேறு கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த ஜனவரி மாதத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு 3, 9 ஆம் இடங்கள் வலிமையாக உள்ளன. மாதத்தின் பிற்பகுதியில் சுக்கிரன் வலிமையாக அமருகிறார். ஆரம்பத்திலேயே ராசிநாதன் குரு பார்வையில் இருக்கிறார். 2026 ஆம் ஆண்டு துலாம் ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கும். பொருளாதார முன்னேற்றம், குடும்பத்தில் முன்னேற்றம் இருக்கும். அற்புதமான யோக பலன்களைப் பெறுவீர்கள்.
அரசு வேலை
பெரிய கஷ்ட, நஷ்டங்கள் எதுவும் இருக்காது. எதையும் சாதிக்க முடியும் என்கிற நிலை ஏற்படும். தம்பி, தங்கையின் மேல் இருந்த கோபங்கள் நீங்கும். அவர்கள் மேல் இருந்து வந்த வருத்தங்கள் நீங்கும். அண்ணன், அக்காள்களாக இருக்கும் துலாம் ராசியினருக்கு முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். நல்ல அறிமுகங்கள் கிடைக்கும். அரசு வேலைகளுக்கு காத்திருப்பவர்களுக்கு ஜனவரி 15 ஆம் தேதிக்கு மேல் அதற்கான நல்ல வழிகாட்டுதல்கள் கிடைக்கும்.
வெற்றி மேல் வெற்றி
போட்டித் தேர்வுகளில், நேர்காணலில் வெற்றி ஏற்படும். 4 ஆம் இடத்தில் சுக்கிரன் அமருவதால் வீடு, வாகனம், அம்மா தொடர்பான விஷயங்களில் நல்ல ஏற்றங்கள் ஏற்படும். அம்மாவுடன் சேர்ந்திருக்க முடியவில்லை, பிரிந்திருக்கிறோம், அம்மாவுக்கு மனக் கவலை போன்ற நிலைமைகள் எல்லாம் மாறும். இந்த ஆண்டு துலாம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான ஆண்டாக இருக்கும். அதற்கான அச்சாரத்தைப் போடுவீர்கள்.
வீடு வாங்கும் யோகம்
வியாபாரம் செய்பவர்களுக்கு ஜனவரி 15 ஆம் தேதிக்குப் பிறகு நல்லவை நடக்கும். புதிய கிளைகள் ஆரம்பிப்பது, இடம் வாங்குவது, வீடு வாங்குவது, தொழிலுக்காக கடன் வாங்குவது அதனை அடைப்பது போன்ற அமைப்புகள் உள்ளது. வயது, தகுதி, இருப்பிடத்திற்கேற்ப இரட்டிப்பு லாபங்கள் கிடைக்கும் யோகமான காலகட்டம். எடுத்த முயற்சிகளில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும்.
பிரச்சனை நீங்கும்
பங்காளிகளுடன் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். காதல் தோல்வி சார்ந்த விஷயங்களில் இருந்த பாதிப்புகள் அனைத்தும் நீங்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில், வியாபாரம், உத்தியோகம், படிப்பில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். சொந்த வீடு, வாகனங்கள் வாங்குவதற்கான யோகம் ஏற்படும். முன்னேற்றம் மிகுந்த காலகட்டமாக இருக்கும்.
-
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Rasi Palan This Week: மீன ராசியினரே கவனம்.. சனி தரும் முக்கிய பலன்கள்.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
லக்கி பாஸ்கராகப் போகும் கன்னி ராசியினர்.. இந்த வாரத்தில் வரப்போகும் குட்நியூஸ் -
Magaram: மகர ராசிக்கு 30 நாட்களில் நடக்கும் அதிசயம்.. தொழிலில் வரப்போகும் சூப்பர் மாற்றம் -
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டது துலங்கும் அற்புத காலம் -
Kumbam: கும்ப ராசிக்கு ஜூனில் வரும் திருப்புமுனை.. குருவின் அருளால் அற்புத யோகம் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள் -
Rasi Palan This Week: கும்பத்திற்கு ஜாக்பாட் வாரம்.. தொழில் வளர்ச்சி, பண யோகம் -
Rasi Palan This Week: மகரத்திற்கு வெற்றி மேல் வெற்றி!.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு எதிர்பாராத பணவரவு.. 7 நாட்களில் வரப்போகும் நல்ல மாற்றம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும்












Click it and Unblock the Notifications