ஜூலை மாத ராசி பலன் 2021: தனுசு, மகரம் ராசிக்காரர்களுக்கு பொறுமை நிதானம் தேவை
ஜூலை மாதத்தில் தனுசு, மகரம் ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் பொறுமையும் நிதானமும் தேவைப்படும். நடப்பவை நன்மைக்கே என்று நினைக்க வேண்டிய மாதமாகும்.
சென்னை: ஜூலை மாதம் பிறந்து விட்டது. இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரம், சேர்க்கை பார்வையினால் தனுசு, மகர ராசிகளில் பிறந்தவர்களுக்கு பொறுமையும் நிதானமும் தேவைப்படும் மாதமாக அமைந்துள்ளது. நிறைய தடைகள் வந்தாலும் கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் தடைகளைத் தாண்டி இந்த மாதம் முன்னேறுவீர்கள்.
ஆனி மாதமும் ஆடி மாதமும் இணைந்த மாதம் ஜூலை மாதம். சூரியன் முதல் 15 நாட்கள் மிதுன ராசியிலும் பிற்பாதி 15 நாட்கள் கடக ராசியிலும் பயணம் செய்வார். இந்த மாதத்தில் சுக்கிரன் கடக ராசியிலும் சிம்மம், கன்னி ராசியிலும் பயணம் செய்வார். புதன் ரிஷபத்தில் மிதுனம், கடக ராசியிலும் பயணம் செய்வார். செவ்வாய் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.
நவகிரகங்களின் சஞ்சாரம், கூட்டணி, சேர்க்கை, கிரகங்களின் பார்வைகளைப் பொருத்து ஜூலை மாதத்தில் தனுசு மற்றும் மகரம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

ஆதாயம் கிடைக்கும்
குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு இந்த ஜூலை மாதத்தில் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். சூரியனின் பார்வை உங்கள் ராசிக்கு ஏழாவது வீட்டில் இருந்து கிடைக்கிறது. அரசு சார்ந்த விசயங்களில் ஆதாயம் கிடைக்கும். புது வேலைக்காக முயற்சி செய்யலாம். புதன் மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். கல்வி விசயத்தில் எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு பிசினஸ் பார்ட்னர்களின் உதவி கிடைக்கும்.

சுப காரியம்
சுக்கிரன் செவ்வாய் எட்டாம் வீட்டில் இருப்பதாலும் சனியின் பார்வை கிடைப்பதாலும் சுப காரியங்களில் சில தடைகள் வரலாம். மாத பிற்பகுதியில் செவ்வாய் சுக்கிரன் பயணம் 9 ஆம் வீட்டிற்கு சென்ற பிறகு சுப காரிய பேச்சுவார்த்தைகளில் வெற்றி கிடைக்கும். 16ஆம் தேதிக்கு மேல் சூரியன் உங்கள் ராசிக்கு எட்டாம் வீடான கடக ராசியில் இடப்பெயர்ச்சி அடைகிறார். இரண்டாம் வீட்டில் உள்ள சனியின் பார்வை எட்டாம் வீட்டில் உள்ள சூரியன் மீது விழுவதால் தொழில் முதலீடுகளில் பெரிய அளவில் பணத்தை முடக்காமல் இருப்பது நல்லது.

நிதானம் தேவை
இந்த மாதம் பொறுமையும் நிதானமும் தேவை. அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கிரகங்களினாலும் சனியின் பார்வை கிடைப்பதாலும் வேலையில் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இல்லை. காதல் விசயங்களில் கவனம் தேவை. கணவன் மனைவி இடையே வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்து விடுங்கள் கருத்து மோதல்கள் வரலாம். தேவையற்ற விசயங்கள் பற்றி பேச வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனமும் நிதானமும் தேவை. மருத்துவ செலவுகள் வரலாம் கவனம் தேவை.

கவலைகள் நீங்கும்
சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்களே உங்களுக்கு இந்த மாதத்தில் கவலைகள் நீங்கும் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகிறது. வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ராசி நாதன் சனி வக்ரமடைந்துள்ளதால் சிலருக்கு விரக்தியும் மன உளைச்சலும் வந்து போகும். குருவும் வக்ரமடைந்திருப்பதால் அலைச்சல்கள் நீங்கும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகுவும் புதனும் பயணம் செய்கின்றனர். பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனமும் நிதானமும் தேவை.

சொத்து வாங்கலாம்
பண வரவு அதிகரிக்கும் நிதி நெருக்கடிகள் நீங்கும். மாணவர்களுக்கு உயர்கல்வியில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சூரியன் ஆறாவது வீட்டில் பயணம் செய்கிறார் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சுக்கிரன் செவ்வாயுடன் இணைந்து ஏழாவது வீட்டில் பயணம் செய்கிறார். சனியின் பார்வையும் ஏழாவது வீட்டின் மீது விழுவதால் குடும்பத்தில் குழப்பங்கள் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு வந்தது. சொத்துக்கள் வாங்க முயற்சி செய்யலாம்.

பண வரவு
செவ்வாய் சுக்கிரன் இடமாற்றத்திற்குப் பிறகு பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சூரியன் மாத பிற்பகுதியில் ராசிக்கு ஏழாவது வீட்டிற்கு வருகிறார். திருமணம் சுப காரியம் தொடர்பாக பேசலாம். தொழில் வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளுக்கு மாத பிற்பகுதியில் லாபம் கிடைக்கும். முடக்கிக் கிடந்த பணம் கைக்கு வரும் நேரம் வந்து விட்டது. வேலை இழந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். இந்த மாதத்தில் பொறுமையும் நிதானமும் தேவைப்படும். இனி வரும் காலங்களில் நடப்பவை நல்லவையாக இருக்கும். எதிர்பார்க்காத சுப செய்திகள் தேடி வரும் மாதமாக ஜூலை மாதம் அமைந்துள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications