ஜூலை மாத ராசி பலன் 2021: கடக ராசிக்காரர்களுக்கு வருமானம் வீடு தேடி வரும்
ஜூலை மாதத்தில் கடக ராசிக்காரர்களின் வீடுகளில் உற்சாகம் அதிகரிக்கும். வருமானம் பெருகும் மகிழ்ச்சி தேடி வரும். சந்தோஷம் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது.
சென்னை: ஜூலை மாதம் பிறந்து விட்டது. இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரம், சேர்க்கை பார்வையினால் கடக ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மலர்ச்சியும் சந்தோஷமும் தேடி வரப்போகிறது. உற்சாகம் நிறைந்த மாதமாக இந்த மாதம் அமைந்துள்ளது. ஜூலை மாதம் வந்தால் ஜோடி சேரும் மனசு என்று பாடப்போகிறீர்கள். விடா முயற்சியால் விஸ்வரூப வெற்றி கிடைக்கப் போகிறது.
ஆனி மாதமும் ஆடி மாதமும் இணைந்த மாதம் ஜூலை மாதம். சூரியன் முதல் 15 நாட்கள் மிதுன ராசியிலும் பிற்பாதி 15 நாட்கள் கடக ராசியிலும் பயணம் செய்வார். இந்த மாதத்தில் சுக்கிரன் கடக ராசியிலும் சிம்மம், கன்னி ராசியிலும் பயணம் செய்வார். புதன் ரிஷபத்தில் மிதுனம், கடக ராசியிலும் பயணம் செய்வார்.
செவ்வாய் கடகத்தில் இருந்து சிம்ம ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.
நவகிரகங்களின் சஞ்சாரம், கூட்டணி, சேர்க்கை, கிரகங்களின் பார்வைகளைப் பொருத்து ஜூலை மாதத்தில் கடக ராசியில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

வேலையில் வெற்றி
சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு இந்த மாதம் சாதகமான நேரம் உள்ளது. மாத முற்பகுதியில் மிதுன ராசியில் உள்ள சூரியன் உங்க ராசிக்கு வருகிறார். மாத பிற்பகுதியில் சூரியனின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. விரைய ஸ்தானத்தில் உள்ள சூரியன் உங்கள் ராசிக்குள் வருகிறார். வேலை விசயமாக எடுக்கும் முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும்.

நிம்மதி சந்தோஷம்
வேலையில் இருந்த தடைகள் நீங்கும். சந்திரன் உங்கள் மனதில் ஏற்பட்ட கலக்கத்தை நீக்குவார். நீண்ட நாள் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். நல்ல வேலையும் சம்பள உயர்வும் கிடைக்கும். சனியின் பார்வை உங்களுக்கு சஷ மகா யோகத்தை தருகிறார். திருமண முயற்சிகள் எடுத்தாலும் கால தாமதங்களுடன் வெற்றி கிடைக்கும்.

வீடு மனை வாங்கலாம்
மாணவர்கள் படிப்பு விசயமாக வெளிநாடு செல்வதற்கான நேரம் கை கூடி வந்துள்ளது. திருமண முயற்சிகள் கை கூடி வரும். அதே நேரத்தில் குரு எட்டாவது இடத்தில் இருப்பதால் பேச்சுவார்த்தையை தள்ளிப்போடலாம். மாத பிற்பகுதியில் செவ்வாய் இரண்டாம் வீட்டிற்கு செல்கிறார். வீடு, மனை வாங்குபவர்களுக்கு வண்டி வாகனம் வாங்க நினைப்பவர்களுக்கு இது நல்ல நேரம்.

குரு பார்வையால் நன்மை
செவ்வாய் பகவான் மீது குரு பார்வை விழும் நேரத்தில் சாதகமான பலன் கிடைக்கும். புத்திர பாக்கியம் கை கூடி வரும். இந்த மாதம் நவ கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளதால் நீண்ட நாட்கள் கழித்து பண வருமானமும் யோகமும் கை கூடி வரும் மாதமாக அமைந்துள்ளது.

விடா முயற்சி
கடன் பிரச்சினை நீங்கும். விடாமல் முயற்சி செய்யுங்கள் விஸ்வரூப வெற்றியைக் கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள் வீண் செலவுகளை குறைத்தால் மட்டுமே சேமிக்க முடியும். ஜூலை மாதத்தில் கோள்களின் நகர்வுகள் கடக ராசிக்கு சாதகமாக உள்ளது.
-
Guru Peyarchi: கும்ப ராசிக்கு காத்திருக்கும் ஆபத்து.. இந்த விஷயங்களில் மிகுந்த கவனம் அவசியம் -
Guru Peyarchi: மகர ராசிக்கு காத்திருக்கும் ராஜவாழ்க்கை.. இந்த விஷயங்களில் மட்டும் கூடுதல் கவனம் -
Guru Peyarchi: மீனம் ராசிக்கு அதிர்ஷ்டம் உச்சத்தில்! குருப்பெயர்ச்சி தரும் அசத்தல் பலன்கள் -
அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டரு.. லாபத்தில் குரு.. கன்னி ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட் -
குரு 12-இல்.. சிம்ம ராசிக்கு வெளிநாட்டு யோகம், புதிய வாய்ப்புகள்.. வாழ்க்கையில் பெரிய திருப்பம்! -
Guru Peyarchi: கிங்காக மாறப்போகும் துலாம் ராசி.. 10 இல் வரும் குரு அள்ளித் தரும் அதிர்ஷ்ட யோகங்கள் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?












Click it and Unblock the Notifications