ஜூலை மாத ராசி பலன் 2022: ஏழரை சனி எபெக்ட்..இந்த ராசிக்காரர் எடுத்த காரியம் நிறைவேறுமா?
ஜூலை மாதத்தில் மகர ராசிக்காரர்களுக்கு நவகிரகங்களின் பயணங்கள், கூட்டணியால் எந்த மாதிரியான அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
சென்னை: காற்றும் மழையும் நிறைந்த மாதம் ஜூலை மாதம். ஆனி மாதமும் ஆடி மாதமும் இணைந்த இந்த மாதத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரம், கூட்டணி பார்வையினால் மகர ராசிக்காரர்களின் வாழ்க்கையில் என்ன மாதிரியான அதிர்ஷ்டம் கிடைக்கும் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று பார்க்கலாம்.
ஜூலை மாதத்தில் சூரியன் முதல் 15 நாட்கள் மிதுன ராசியிலும் பிற்பாதி 15 நாட்கள் கடக ராசியிலும் பயணம் செய்வார். இந்த மாதத்தில் சுக்கிரன் ரிஷப ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்வார். செவ்வாய் மேஷ ராசியில் ராகு உடன் பயணம் செய்வார். குரு பகவான் மீன ராசியிலும், கும்ப ராசியில் சனிபகவானும் பயணம் செய்வார்கள். சந்திரன் மாத முற்பகுதியில் கடக ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்வார். புதன் ரிஷபம், மிதுனம், கடக ராசியிலும் பயணம் செய்வார்.
இந்த மாதம் கும்பம் தொடங்கி மிதுனம் வரை வரிசையாக ஐந்து கிரகங்கள் ஆட்சி பெற்று பயணம் செய்கின்றன.
நவகிரகங்களின் சஞ்சாரம், கூட்டணி, சேர்க்கை, கிரகங்களின் பார்வைகளைப் பொறுத்து மகர ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

மகரம்
சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்களே... உங்கள் ராசிக்கு இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் சனி பகவான் வக்ரமடைந்து உங்கள் ராசிக்கு திரும்புகிறார். மூன்றாம் வீட்டில் குரு, நான்காம் வீட்டில் செவ்வாய், ராகு, ஐந்தாம் வீட்டில் சுக்கிரன், ஆறாம் வீட்டில் சூரியன், புதன் என கிரகங்கள் பயணம் செய்கின்றன. இந்த மாதம் ஏழரை சனியில் ஜென்ம சனியின் பாதிப்பு மீண்டும் தொடங்குகிறது. காரணம் சனிபகவான உங்கள் ராசியில் வக்ரமடைந்து பயணம் செய்கிறார். தொழில் வியாபாரத்தில் பெரிய அளவில் முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது.

வேலையில் முன்னேற்றம்
சுக்கிரன், புதன் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுவடைந்துள்ளது. ஆட்சி பெற்ற சுக்கிரன் வேலையில் நல்ல பலனைத் தருவார். நினைத்த காரியம் நிறைவேறும். புது வேலைக்கு முயற்சி செய்யலாம். வெளியூர், வெளிநாடு செல்ல முயற்சி செய்யலாம். மாத பிற்பகுதியில் சுக்கிரன் ஆறாம் வீட்டிற்கு செல்கிறார். செவ்வாய் நான்காம் வீட்டில் சனியின் பார்வையில் பயணம் செய்வதால் வேலையில் முன்னேற்றம் உண்டாகும்.

காதல் திருமணம்
குடும்ப வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். காதல் திருமணம் மாத முற்பகுதியில் சிலருக்கு கை கூடி வரும். தடைகளைத் தாண்டி வெற்றிகள் கைகூடி வரும். மாத பிற்பகுதியில் திருமணத்திற்கு ஏற்ற சாதகமான சூழ்நிலை இல்லை என்பதால் வரன் தேடுவதை தள்ளிப்போடுங்கள். காதல் திருமணம் செய்ய ஆசைப்படுபவர்கள் பொறுமையோடும் நிதானத்தோடும் அணுகவும். கணவன் மனைவி இடையேயான சின்னச் சின்ன சச்சரவுகள் வந்து செல்லும். விட்டுக்கொடுத்து செல்லுங்கள்.

ஏழரை சனி காலம்
மாணவர்களுக்கு இது கல்விக்கு ஏற்ற காலம். ஏழரை சனியின் தாக்கத்தால் கல்வியில் கவனம் தேவை. சோதனையான காலமாக இருப்பதால் தெய்வ வழிபாடு அவசியம். கடின முயற்சிகளுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. எலும்பு, நரம்பு பிரச்சினைகள் வரலாம். வயிறு பிரச்சினைகள் வரலாம் உணவில் கவனம் தேவை. காரமான உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. தசைப்பிடிப்பு எட்டிப்பார்க்கும் கவனம் தேவை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications